உங்கள் வலைப்பதிவின் உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடுத்து அதை வேறொரு வலைப்பதிவிற்குப் பதிவேற்றலாம். உங்கள் வலைப்பதிவை நீக்கும் முன் அதைக் காப்புப் பிரதியும் எடுத்துக்கொள்ளலாம்.
Bloggerரிலிருந்து வெளியேறியுள்ளீர்கள். Bloggerரில் உள்நுழையவும்.
உங்கள் வலைப்பதிவு உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடுத்தல்
உங்கள் வலைப்பதிவின் காப்புப் பிரதி ஃபைலைப் பெற "Google Takeout” பயன்படுத்தலாம். Google Takeoutடை நீங்கள் நேரடியாக அணுகி, நீங்கள் காப்புப் பிரதி எடுக்க விரும்பும் வலைப்பதிவிற்கு நிர்வாகி அணுகல் உள்ள Google கணக்கிற்கு மாறலாம். வலைப்பதிவிற்கான நிர்வாகி அணுகல் எந்தக் கணக்கிற்கு உள்ளது என்று நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்றால்:
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள வலைப்பதிவுத் தேர்வுப் பெட்டியைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் காப்புப் பிரதி எடுக்க விரும்பும் வலைப்பதிவைக் கண்டறியவும்.
- உதவிக்குறிப்பு: தேர்வுப் பெட்டியில் உள்ள வலைப்பதிவுப் பட்டியலில் உங்கள் வலைப்பதிவு காட்டப்படவில்லை என்றால், வேறு கணக்குகளில் முயலவும். வலைப்பதிவைக் கண்டறியும் வரை மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவர ஐகானைக் கிளிக் செய்யவும்.
- வலைப்பதிவைக் கண்டறிந்ததும், இடதுபுற மெனுவில் உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- "வலைப்பதிவை நிர்வகித்தல்" என்பதற்குக் கீழ் உள்ள உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடு
பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
Google Takeoutடில் Blogger தரவைப் பதிவிறக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வலைப்பதிவுத் தீமின் நகலைச் சேமித்தல்
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில், சேமிக்க விரும்பும் வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
- இடதுபுற மெனுவில் தீம் என்பதைக் கிளிக் செய்யவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை
கிளிக் செய்து
காப்புப் பிரதி எடு
பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பதிவுகள், பக்கங்கள், கருத்துகள் ஆகியவற்றை உங்கள் வலைப்பதிவிற்குப் பதிவேற்றுதல்
பதிவுகள், பக்கங்கள், கருத்துகள் ஆகியவற்றைக் காப்புப் பிரதியில் இருந்து உங்கள் வலைப்பதிவிற்குப் பதிவேற்ற Google Takeout காப்புப் பிரதி ஃபைலில் feed.atom ஃபைலைப் பதிவேற்ற வேண்டும்.
- "Google Takeout” காப்புப் பிரதி ஃபைலை மீட்டெடுத்து திறக்கவும்.
- Takeout
Blogger
Blogs என்பதைக் கிளிக் செய்யவும்.
- [வலைப்பதிவுப் பெயரில் இருந்து பதிவேற்ற வேண்டிய பதிவுகள்] என்பதைக் கிளிக் செய்யவும்.
- வலைப்பதிவுப் பெயரின் டைரக்டரியில் feed.atom ஃபைலைக் கண்டறியவும்.
உதவிக்குறிப்பு: Blogger இதுவரையிலும் தன்னுடைய .xml காப்புப் பிரதி ஃபைல்களை வழங்குகிறது. காப்புப் பிரதி எடுப்பதற்காக நீங்கள் இந்த ஃபைல்களைப் பதிவிறக்கியிருந்தால், feed.atom ஃபைல்களைப் பதிவேற்றுவது போலவே .xml ஃபைல்களையும் நீங்கள் பதிவேற்றலாம்.
முக்கியம்: ஃபைல் அளவில் கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும் ஃபைல்களைப் பதிவேற்றுவதற்கான எண்ணிக்கையில் தினசரி வரம்பு உள்ளது.
பதிவு, கருத்துகள் ஆகியவற்றின் feed.atom அல்லது .xml ஃபைல்களைப் பதிவேற்ற:
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில், உள்ளடக்கத்தைப் பதிவேற்ற விரும்பும் வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
- இடதுபுற மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- "வலைப்பதிவை நிர்வகித்தல்” என்பதற்குக் கீழ் உள்ள உள்ளடக்கத்தைப் பதிவேற்று
பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் தானாக வெளியிடப்பட வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், "பதிவேற்றிய எல்லா பதிவுகளையும் பக்கங்களையும் தானாகவே வெளியிடு" என்பதை ஆஃப் செய்யவும்.
- கம்ப்யூட்டரில் இருந்து பதிவேற்ற விரும்பும் feed.atom அல்லது .xml ஃபைலைத் தேர்ந்தெடுக்கவும்.
- திற என்பதைக் கிளிக் செய்யவும்.