Bloggerரில் உள்ள உங்கள் வலைப்பதிவில் யாரெல்லாம் கருத்து தெரிவிக்கலாம், வாசகர்கள் எவ்விதமான கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்பதை நீங்கள் நிர்வகிக்கலாம். பிற வலைப்பதிவுகளிலும் நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். ஒரு இடுகையில் எத்தனை கருத்துகள் வேண்டுமானாலும் இருக்கலாம், இதற்கு வரம்பு எதுவும் இல்லை.
வலைப்பதிவின் கருத்துகளை நிர்வகித்தல்
Bloggerரில் கருத்துகள் அமைப்புகளை அமைத்தல்- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை
கிளிக் செய்யவும்.
- மாற்ற வேண்டிய வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- இடதுபுற மெனுவில் அமைப்புகள்
இடுகைகள், கருத்துகள், பகிர்தல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- கருத்தைக் காட்ட விரும்பும் இடம், இடுகைகளில் யாரெல்லாம் கருத்து தெரிவிக்கலாம், பிற அமைப்புகள் ஆகியவற்றை அமைக்கவும்:
- நீங்களோ வாசகர்களோ இடுகையில் உள்ள பிற கருத்துகளுக்குப் பதிலளிக்க உட்பொதிக்க அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- “யாரெல்லாம் கருத்து தெரிவிக்கலாம்” என்பதில், பெயரைக் குறிப்பிடாமல் கருத்து தெரிவிப்பதைத் தடைசெய்யும் வகையில் Google கணக்குகளைக் கொண்ட பயனர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- "கருத்துத் தணிக்கை" மூலம் கருத்துகளை எப்போதெல்லாம் அனுமதிக்கலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்.
- அமைப்புகளைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
இடுகை எடிட்டரில் கருத்து அமைப்புகளை இடுகை வாரியாகயும் இயக்கலாம்.
நிர்வாகிகள் மட்டுமே கருத்துகளைத் தணிக்கை செய்ய முடியும்.
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை
கிளிக் செய்யவும்.
- மாற்ற வேண்டிய வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- இடதுபுற மெனுவில் அமைப்புகள்
இடுகைகள், கருத்துகள், பகிர்தல் என்பதைக் கிளிக் செய்யவும்.
- "கருத்துத் தணிக்கை" என்பதற்கு அடுத்து, வெளியிடுவதற்கு முன் கருத்துகளை எத்தனை முறை மதிப்பாய்வு செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கான எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகளைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
கருத்தை அனுமதித்தல் அல்லது நீக்குதல்
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை
கிளிக் செய்யவும்.
- மாற்ற வேண்டிய வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- இடதுபுற மெனுவில் கருத்துகள்
கருத்துத் தணிக்கைக்குக் காத்திருப்பவை என்பதைக் கிளிக் செய்யவும்.
- கருத்தைப் படித்துவிட்டு அதை வெளியிடவும், நீக்கவும் அல்லது ஸ்பேம் எனக் குறிக்கவும்.
மின்னஞ்சலில் உள்ள கருத்துகளை வெளியிடுதல் அல்லது நிராகரித்தல்
கருத்துகளை நிர்வகிப்பதற்கான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டால் புதிய கருத்து வரும்போது உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.
மின்னஞ்சலில் வெளியிடு, நீக்கு, நிராகரி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்யவும்.
கருத்தை நிராகரித்தால் அது நீக்கப்படும்.கருத்து ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தாலும் அதை நீக்கலாம் அல்லது ஸ்பேம் எனக் குறிக்கலாம்:
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை
கிளிக் செய்யவும்.
- மாற்ற வேண்டிய வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- இடதுபுற மெனுவில் கருத்துகள்
வெளியிட்டவை என்பதைக் கிளிக் செய்யவும்.
- வலைப்பதிவை ஸ்பேம் கோப்புறைக்கு நகர்த்த, கருத்திற்குக் கீழ் இருக்கும் நீக்கு, ஸ்பேம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்யவும்.
ஸ்பேமில் உள்ள கருத்துகளை நிர்வகிக்க, கருத்துகள் ஸ்பேம் என்பதைக் கிளிக் செய்யவும்:
- தானாகவே ஸ்பேம் எனக் குறிக்கப்படும் கருத்துகள் இந்தக் கோப்புறைக்கு அனுப்பப்படும்.
- கருத்தை உங்கள் வலைப்பதிவில் காட்ட விரும்பினால் ஸ்பேம் அல்ல என்பதைக் கிளிக் செய்யவும்.
பிற வலைப்பதிவுகளில் தெரிவித்த கருத்துகளை நிர்வகித்தல்
Important: If you want to delete or manage your comments, make sure you're signed in to your Google Account. You can't manage comments you posted anonymously.
வலைப்பதிவில் கருத்து தெரிவித்தல்- Bloggerரில் உள்நுழையவும்.
- கருத்து தெரிவிக்க விரும்பும் வலைப்பதிவு இடுகையின் கீழ் உங்கள் கருத்தை உள்ளிடவும்.
- விருப்பத்தேர்வு: உங்கள் கருத்திற்கு யாரேனும் பதிலளிக்கும்போது அதுகுறித்த மின்னஞ்சலைப் பெற, எனக்குத் தெரிவி என்பதைக் கிளிக் செய்யவும்.
- வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- Bloggerரில் உள்நுழையவும்.
- நீங்கள் நீக்க விரும்பும் கருத்தைக் கொண்ட வலைப்பதிவு இடுகையைக் கண்டறிந்து மேலும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் நீக்க விரும்பும் கருத்திற்குக் கீழ் இருக்கும் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- விருப்பத்தேர்வு: இடுகையை நிரந்தரமாக நீக்க, நிரந்தரமாக அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- கருத்தை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.