வலைப்பதிவின் வடிவமைப்பை மாற்றுதல்

உங்கள் வலைப்பதிவின் தளவமைப்பையும் வண்ணத் திட்டத்தையும் மாற்றலாம்.

கேட்ஜெட்களைப் பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவை மாற்றுதல்

காப்பகத்தைக் காட்டுவது, பட்டியலில் லேபிள்களைக் காட்டுவது, ஒவ்வொரு பக்கத்திலும் உங்கள் சுயவிவரத்தைக் காட்டுவது போன்றவற்றைச் செய்ய கேட்ஜெட்களைப் பயன்படுத்தலாம்.

வலைப்பதிவில் கேட்ஜெட்டைச் சேர்த்தல்:

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. புதுப்பிக்க வேண்டிய வலைப்பதிவைத் தேர்வுசெய்யவும்.
 3. இடதுபுற மெனுவிலுள்ள தளவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. நீங்கள் மாற்ற விரும்பும் பகுதியில் கேட்ஜெட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
 5. திறக்கின்ற சாளரத்தில் கேட்ஜெட்டைத் தேர்வுசெய்து, ’சேர்’ Add என்பதைக் கிளிக் செய்யவும்.
 6. கீழ் இடதுபுறத்திலுள்ள சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கேட்ஜெட்டில் அமைப்புகளை மாற்ற திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

HTML அல்லது CSSஸைப் பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவை மாற்றுதல்

HTMLலைப் பயன்படுத்துதல்
முக்கியம்: Google சேவைகளிலோ அவற்றின் மூலமாகவோ இடுகையாளர் சமர்ப்பிக்கும், இடுகையிடும், காண்பிக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தின் மீதும் Google உரிமையையோ கட்டுப்பாட்டையோ கொண்டிருக்கவில்லை. குறியீட்டையோ மூன்றாம் தரப்பு விட்ஜெட்களையோ சேர்க்கும் வலைப்பதிவு இடுகையாளர்கள் அச்செயலை அவர்களது சொந்தப் பொறுப்பில் செய்கிறார்கள்.
 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. புதுப்பிக்க வேண்டிய வலைப்பதிவைத் தேர்வுசெய்யவும்.
 3. இடதுபுற மெனுவிலுள்ள தீம் என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. “எமது தீம்” என்பதன் கீழ், மேலும் More அதன் பிறகு HTMLலைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
 5. மாற்றங்களைச் செய்து முடித்த பின்னர், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: படங்கள், பிளாக்ரோல் போன்ற பக்க உறுப்புகளைச் சேர்க்க, விட்ஜெட் குறிச்சொற்களைப் பயன்படுத்தவும். தளவமைப்புகளுக்கான விட்ஜெட் குறிச்சொற்களைப் பற்றி மேலும் அறிக.
CSSஸைப் பயன்படுத்துதல்
 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. புதுப்பிக்க வேண்டிய வலைப்பதிவைத் தேர்வுசெய்யவும்.
 3. இடதுபுற மெனுவிலுள்ள தீம் என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. “எனது தீம்” என்பதன் கீழுள்ள பிரத்தியேகப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
 5. இடதுபுற மெனுவிலுள்ள மேம்பட்டவை என்பதைக் கிளிக் செய்யவும்.
 6. கீழ்நோக்கிய அம்புக்குறி கீழ்நோக்கிய அம்புக்குறி அதன் பிறகு CSSஸைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
 7. உங்கள் குறியீட்டைச் சேர்த்த பின்னர், கீழ் வலதுபுறத்திலுள்ள சேமி Save என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
74
false
false