வலைப்பதிவில் பக்கங்களைச் சேர்த்தல்

“அறிமுகம்”, “தொடர்பு” போன்ற ஒரே மாதிரியான உள்ளடக்கத்திற்குப் பக்கங்களை உருவாக்கலாம். இவை வலைப்பதிவின் மேல்புறத்தில் தாவல்களாகவோ பக்கவாட்டில் இணைப்புகளாகவோ காட்டப்படலாம்.

கவனத்திற்கு: குறிப்பிட்ட இடுகைகளைப் பக்கங்களாகப் பயன்படுத்த முடியாது.

படி 1: பக்கங்களைக் காட்டுதல்

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. மாற்ற வேண்டிய வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. இடதுபுற மெனுவில் தளவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. பக்கங்களைக் காட்ட விரும்பும் பிரிவில் கேட்ஜெட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. சாளரத்தில் "பக்கங்கள்" என்பதற்கு அடுத்துள்ள சேர்  என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. அமைப்புகளை அமைத்துவிட்டு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. மேல் வலதுபுறத்தில் உள்ள மாற்றத்தைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் பக்கங்கள் காட்டப்படும் இடத்தை மாற்ற கேட்ஜெட்டை அதன் புதிய இடத்திற்கு இழுக்கவும்.

படி 2: பக்கங்களை உருவாக்குதல், திருத்துத்தல்/நீக்குதல்

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. மாற்ற வேண்டிய வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. இடதுபுற மெனுவில் பக்கங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • புதிய பக்கத்தை உருவாக்குதல்: புதிய பக்கம் என்பதைக் கிளிக் செய்யவும். பக்கத்தின் தலைப்பையும் பிற தகவல்களையும் உள்ளிட்டு சேமி, மாதிரிக்காட்சியைக் காட்டு,  வெளியிடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்யவும்.
    • பக்கத்தைத் திருத்துதல்: நீங்கள் திருத்த விரும்பும் பக்கத்திற்குக் கீழ் இருக்கும் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பக்கத்தில் மாற்றங்களைச் செய்துவிட்டு சேமி, மாதிரிக்காட்சி, வெளியிடு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்யவும்.
    • பக்கத்தை நீக்குதல்: நீங்கள் அகற்ற விரும்பும் பக்கத்திற்குக் கீழ் இருக்கும் நீக்கு அதன் பிறகு சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

வேறொரு இணையதளத்திற்கு இணைப்பை உருவாக்குதல்

  1. Bloggerரில் உள்நுழையவும்.

  2. மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. மாற்ற வேண்டிய வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. இடதுபுற மெனுவில் தளவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. “பக்கங்கள்” என்ற பிரிவில் திருத்து திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. "காட்ட வேண்டிய பக்கங்கள்" என்பதற்குக் கீழ் இருக்கும் + புற இணைப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. பக்கத்தின் தலைப்பையும் URLலையும் உள்ளிட்டுவிட்டு இணைப்பைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3: காட்ட வேண்டிய பக்கங்களைத் தேர்ந்தெடுத்தல்

  1. இடதுபுற மெனுவில் தளவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. “பக்கங்கள்” என்ற பிரிவில் திருத்து திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் காட்ட விரும்பும் பக்கங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. மேல் வலதுபுறத்தில் உள்ள மாற்றத்தைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு வலைப்பதிவில் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம், இதற்கு வரம்பு எதுவும் இல்லை.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2663000741755556707
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
74
false
false