உங்கள் வலைப்பதிவுக்கான தோற்றத்தை மாற்றுவதற்குத் தீம்களைப் பயன்படுத்துதல்

Bloggerரின் தீம்களில் ஒன்றைப் பயன்படுத்தும்போது மக்கள் பல்வேறு விதங்களில் உங்கள் வலைப்பதிவைப் பார்க்கலாம், அதனுடன் ஊடாடலாம்.

தீமினைத் தேர்வுசெய்தல்

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. மேலே இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
 3. புதுப்பிக்க வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
 4. இடதுபுற மெனுவில் உள்ள தீம் என்பதைக் கிளிக் செய்யவும்.
 5. உங்கள் தீமினைத் தேர்ந்தெடுத்து கீழே உள்ள பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் தீமின் நகலைச் சேமிக்க மேலே வலதுபுறத்தில் உள்ள, மேலும் More அதன் பிறகு காப்புப் பிரதி அதன் பிறகு பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

டைனமிக் காட்சிகள் தீமினைப் பயன்படுத்துதல்

டைனமிக் காட்சிகள் தீமினைப் பயன்படுத்தும்போது:

 • காட்டப்படும் ஒவ்வொரு இடுகையையும் பக்கப்பார்வையாக Blogger பதிவுசெய்யும்.
 • உங்கள் வாசகர்கள் தங்கள் இயல்புக் காட்சியை மாற்றலாம்.

டைனமிக் காட்சிகளைப் பயன்படுத்த, பிற தளங்களில் உள்ளடக்கத்தைப் பகிரவும்.

உங்கள் தீமினைப் பிரத்தியேகமாக்குதல்

பின்னணி & நெடுவரிசை அகலங்கள் போன்ற அமைப்புகளை மாற்றவும்

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. மேலே இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
 3. புதுப்பிக்க வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
 4. இடதுபுற மெனுவில் உள்ள தீம் என்பதைக் கிளிக் செய்யவும்.
 5. “எனது தீம்” என்பதன் கீழ் பிரத்தியேகப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் பின்புலப் படத்தையோ பிற அமைப்புகளையோ பிரத்தியேகப்படுத்த இடது மெனுவைப் பயன்படுத்தவும். 
 6. கீழே வலதுபுறத்தில் உள்ள, சேமி Save என்பதைக் கிளிக் செய்யவும்.

எழுத்துரு வண்ணம் & அளவை மாற்றுதல்

உங்கள் ஒட்டுமொத்த வலைப்பதிவுக்கான எழுத்துரு, எழுத்துரு வண்ணம், எழுத்துரு அளவு ஆகியவற்றை நீங்கள் மாற்றலாம்.

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. மேலே இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
 3. புதுப்பிக்க வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
 4. இடதுபுற மெனுவில் உள்ள தீம் என்பதைக் கிளிக் செய்யவும்.
 5. “எனது தீம்” என்பதன் கீழ் பிரத்தியேகப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
 6. இடது மெனுவில் உள்ள மேம்பட்டவை என்பதைக் கிளிக் செய்யவும்.
 7. உங்கள் உரைக்கான வடிவமைப்பைத் தேர்வுசெய்யவும்.
  • உங்கள் இடுகையில் உள்ள வெவ்வேறு உரைகளுக்கு வெவ்வேறு எழுத்துருக்கள், வண்ணங்கள், அளவுகள் ஆகியவற்றைத் தேர்வுசெய்யலாம்.
 8. கீழே வலதுபுறத்தில் உள்ள, சேமி Save என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
74
false