வலைப்பதிவை நீக்குதல் அல்லது மீட்டெடுத்தல்

முக்கியம்: நிர்வாகியால் மட்டுமே வலைப்பதிவை நீக்க முடியும். வலைப்பதிவை நீக்கியபிறகு குறுகிய காலத்திற்குள் அதை மீட்டெடுக்கலாம்.

வலைப்பதிவை நீக்குதல்

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில், நீக்க விரும்பும் வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுற மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "வலைப்பதிவை நிர்வகித்தல்” என்பதற்குக் கீழ் உள்ள எனது வலைப்பதிவை அகற்று அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

நீக்கப்பட்ட வலைப்பதிவை மீட்டெடுத்தல்

ஒரு வலைப்பதிவை நீக்கியபிறகு குறுகிய காலத்திற்குள் அதை நீங்கள் மீட்டெடுக்கலாம். வலைப்பதிவை மீட்டெடுப்பதற்கு:

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள "நீக்கிய வலைப்பதிவுகள்" என்பதற்குக் கீழ், நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் வலைப்பதிவைக் கிளிக் செய்து அதன் பிறகு நீக்கியதைச் செயல்தவிர் என்பதைக் கிளிக் செய்யவும்.

வலைப்பதிவை நிரந்தரமாக நீக்குதல்

முக்கியம்: வலைப்பதிவு நிரந்தரமாக நீக்கப்படும்போது அதன் தகவல்கள், இடுகைகள், பக்கங்கள் என அனைத்தும் நீக்கப்படும். நிரந்தரமாக நீக்கப்பட்ட வலைப்பதிவை மீட்டெடுக்கவோ அதன் URLலை மீண்டும் பயன்படுத்தவோ முடியாது.

வலைப்பதிவை நீக்குவதற்கான படிகளைப் பின்பற்றியபிறகு அதை நிரந்தரமாக நீக்க:

  1. மேல் இடதுபுறத்தில் உள்ள "நீக்கிய வலைப்பதிவுகள்" என்பதற்குக் கீழ், நீங்கள் நிரந்தரமாக நீக்க விரும்பும் வலைப்பதிவைக் கிளிக் செய்யவும். 
  2. நிரந்தரமாக நீக்கு அதன் பிறகு நிரந்தரமாக நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

வலைப்பதிவைக் காப்புப் பிரதி எடுத்தல் அல்லது இறக்குதல்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3394248655603175365
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
74
false
false