ஒலியளவு, ஒலி மற்றும் அதிர்வு அமைப்புகளை மாற்றுதல்

உங்கள் மொபைலின் ஒலியளவை அதிகரிக்கவோ முற்றிலும் குறைக்கவோ செய்யலாம். அதுமட்டுமின்றி ரிங்டோன், ஒலி, அதிர்வு ஆகியவற்றையும் மாற்றலாம்.

முக்கியமானது:

ஒலியளவை அதிகரித்தல் அல்லது குறைத்தல்

  1. ஒலியளவு பட்டனை அழுத்தவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள மெனுவை More தட்டவும்.
  3. ஒலியளவுகளை உங்கள் விருப்பமான இடத்திற்கு ஸ்லைடு செய்யவும்:
    • மீடியா ஒலியளவு: இசை, வீடியோக்கள், கேம்கள் மற்றும் பிற மீடியா
    • அழைப்பின் ஒலியளவு: அழைப்பின்போது எதிர்முனையில் பேசுபவரின் ஒலியளவு
    • ரிங்டோன் ஒலியளவு
    • அறிவிப்பின் ஒலியளவு
    • அலாரத்தின் ஒலியளவு

உதவிக்குறிப்புகள்:

  • உங்கள் மொபைலின் ஒலியளவை Google Assistant மூலம் மாற்ற, Ok Google, வால்யூமை மாத்து என்று சொல்லவும்/தட்டவும்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட புளூடூத் சாதனங்களுடன் உங்கள் மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் இசை, வீடியோக்கள், கேம்கள் ஆகியவற்றை எந்தச் சாதனத்தில் கேட்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். "மீடியா ஒலியளவு" என்பதன் கீழ் மீடியாவை இதில் இயக்கு என்பதைத் தட்டவும்.
  • ஒலியளவு பட்டனை அழுத்தும்போது, நீங்கள் என்ன செயலைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஒலியளவு மாறும். உதாரணமாக, ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறீர்கள் எனில் திரைப்படத்தின் ஒலியளவு மாறும். எதையும் கேட்காதபோது ஒலியளவு பட்டன்களை அழுத்தினால் மீடியா ஒலியளவு மாறும்.

அதிர்வை இயக்குதல் அல்லது ஒலியடக்குதல்

  1. ஒலியளவு பட்டனை அழுத்தவும்.
  2. வலதுபுறத்தில் ஸ்லைடருக்கு மேலே உள்ள ரிங் என்பதைத் தட்டவும்.
    • அதிர்வை இயக்குவதற்கு அதிர்வுறு என்பதைத் தட்டவும்.
    • ஒலியடக்குவதற்கு ஒலியடக்கு என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்புகள்

  • உங்கள் மொபைலில் மீண்டும் ரிங் அல்லது ஒலியை இயக்க, அதிர்வு  அல்லது ஒலியடக்கு என்பதை முடக்கவும். 
  • உங்களுக்கு அழைப்பு வரும்போது மொபைல் ரிங் ஆவதை நிறுத்த ஒலியளவு பட்டனை அழுத்தவும். 
சில ஒலிகளையும் அதிர்வுகளையும் முடக்குதல்
அனைத்து ஒலிகளையும் ஒலியடக்கலாம் அல்லது அலாரம், முக்கிய அழைப்புகள் போன்ற குறிப்பிட்ட ஒலிகளை மட்டும் இயக்கிக்கொள்ளலாம்.
அனைத்து மொபைல் அழைப்புகளுக்கும் அதிர்வுறச் செய்தல்
  1. ஒலியளவு பட்டனை அழுத்தவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள மெனுவை More தட்டவும்.
  3. தேவைப்பட்டால் மேலும் காட்டு என்பதைத் தட்டவும்.
  4. அழைப்புகளின்போது அதிர்வுறு என்பதை இயக்கவும். அல்லது அதிர்வு & ஹாப்டிக்ஸ்  என்பதைத் தட்டி அதன் பிறகு அழைப்புகளின்போது அதிர்வுறு அதன் பிறகு எப்போதும் அதிர்வுறு என்பதை இயக்கவும்.
பவர் பட்டனையும் ஒலியளவை அதிகரிப்பதற்கான பட்டனையும் சேர்த்து அழுத்தினால் என்னவாகும் என்பதை மாற்றுதல் (Pixel 5a மற்றும் அதற்கு முந்தைய மாடல்)

உதவிக்குறிப்பு: அதிர்வுறுதலை விரைவாக இயக்க, பவர் பட்டனையும் ஒலியளவை அதிகரிக்கும் பட்டனையும் சேர்த்து அழுத்தவும்.

  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஒலி & அதிர்வு அதன் பிறகு லிப்பதைத் தடுப்பதற்கான ஷார்ட்கட் என்பதைத் தட்டவும்.
  3. ஒலிப்பதைத் தடுத்தல் அம்சத்தை இயக்கவும்/முடக்கவும்.
  4. பவர் பட்டனையும் ஒலியளவை அதிகரிக்கும் பட்டனையும் ஒரே நேரத்தில் அழுத்தும்போது என்ன நடக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்:
    • அதிர்வு: மொபைல் அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளைப் பெறும்போது அதிர்வுறும்
    • ஒலியடக்கு: மொபைல் அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளை ஒலியடக்கும்

ரிங்டோன்களை மாற்றுதல்

உங்கள் ரிங்டோனை மாற்றுதல்
  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஒலி & அதிர்வு அதன் பிறகு மொபைல் ரிங்டோன் என்பதைத் தட்டவும்.
  3. ரிங்டோனைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சேமி என்பதைத் தட்டவும்.
ஒருவருக்கான ரிங்டோனை அமைத்தல்
  1. உங்கள் மொபைலின் தொடர்புகள் ஆப்ஸை திறக்கவும்.
  2. ஒரு தொடர்பைத் தட்டவும்.
  3. மேலும் அதன் பிறகு ரிங்டோனை அமை என்பதைத் தட்டவும்.
  4. ரிங்டோனைத் தேர்வுசெய்யவும்.
  5. சேமி என்பதைத் தட்டவும்.
புதிய ரிங்டோன்களைப் பெறுதல்

ரிங்டோன் ஆப்ஸைப் பெறுதல்

Google Play Storeரில் உள்ள ரிங்டோன் ஆப்ஸில் Google Play இருந்து பல ரிங்டோன்களைப் பதிவிறக்கலாம்.

கம்ப்யூட்டரில் இருந்து ரிங்டோனை மாற்றுதல்

  1. USB கேபிளைப் பயன்படுத்தி உங்கள் மொபைலைக் கம்ப்யூட்டருடன் இணைக்கவும். USB மூலம் ஃபைல்களை நகர்த்துவது எப்படி என்பதை அறிக.
  2. திறக்கப்படும் சாளரத்தில் "ரிங்டோன்கள்" போல்டரைக் கண்டறியவும். "ரிங்டோன்கள்" போல்டரில் மியூசிக் ஃபைலை (MP3) நகலெடுக்கவும்.
  3. கம்ப்யூட்டரிலிருந்து மொபைலின் இணைப்பை நீக்கவும்.

உதவிக்குறிப்பு: அலாரமும் மொபைல் ரிங்டோன்களும் வெவ்வேறு ஃபோல்டர்களைப் பயன்படுத்தும். அலாரங்களுக்கு ரிங்டோன்களைச் சேர்ப்பது எப்படி என்பதை அறிக.

பிற ஒலிகள் & அதிர்வுகளை மாற்றுதல்

அறிவிப்பிற்கான ஒலிகள் & அதிர்வை மாற்றுதல்

அறிவிப்பு ஒலியை மாற்றுதல்

  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஒலி & அதிர்வு அதன் பிறகு இயல்புநிலை அறிவிப்பு ஒலி என்பதைத் தட்டவும்.
  3. ஒலியைத் தேர்வுசெய்யவும்.
  4. சேமி என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: வெவ்வேறு ஆப்ஸுக்கு வெவ்வேறு அறிவிப்பு ஒலிகளைத் தேர்வுசெய்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆப்ஸிலும் உள்ள அமைப்புகள் மெனுவைப் பயன்படுத்தவும். உதாரணமாக, learn how to change Gmail notifications.

அறிவிப்புகளுக்கு அதிர்வுறச் செய்தல்

சில ஆப்ஸ் அவற்றின் அறிவிப்புகளுக்கு அதிர்வுற வேண்டுமா எனத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது. குறிப்பிட்ட ஆப்ஸுக்கான அறிவிப்புகளை மாற்றுவது எப்படி என்பதை அறிக.

கீபோர்டு ஒலிகளையும் அதிர்வுகளையும் தேர்வுசெய்தல்

டைப்பிங் ஒலிகளையும் அதிர்வுகளையும் மாற்ற, கீபோர்டின் அமைப்புகளை மாற்ற வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு, Gboard ஒலிகளை மாற்ற:

  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. சிஸ்டம் அதன் பிறகு மொழிகள் & உள்ளீடு என்பதைத் தட்டவும்.
  3. விர்ச்சுவல் கீபோர்டு அதன் பிறகு Gboard என்பதைத் தட்டவும்.
  4. விருப்பத்தேர்வுகள் என்பதைத் தட்டவும்.
  5. இயக்கவும்/முடக்கவும்:
    • விசையை அழுத்தும்போது ஒலியெழுப்பு
    • விசையை அழுத்தும்போது தொட்டுத் தெரிவிக்கும் கருத்து
      குறிப்பு: "விசையை அழுத்தும்போது தொட்டுத் தெரிவிக்கும் கருத்து" என்பது காட்டப்படவில்லை எனில் விசையை அழுத்தும்போது அதிர்வுறு என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: உங்களிடம் Gboard இருந்தால் "விசை அழுத்தப்படுவதில் தொட்டுத் தெரிவிக்கும் கருத்து " இயக்கப்பட்டிருந்தால் "தொடு அதிர்வு" என்பதும் இயக்கத்தில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். "தொடு அதிர்வு" என்பதை இயக்குவது எப்படி என்பதை அறிக.

அவசரகால ஒலிபரப்பு அமைப்புகளை மாற்றுதல்

நீங்கள் விழிப்பூட்டல் வகைகளை இயக்கலாம்/முடக்கலாம், முந்தைய விழிப்பூட்டல்களைக் கண்டறியலாம், ஒலியையும் அதிர்வையும் கட்டுப்படுத்தலாம்.

  1. உங்கள் மொபைலில் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. அறிவிப்புகள் அதன் பிறகு வயர்லெஸ் அவசரகால விழிப்பூட்டல்கள் என்பதைத் தட்டவும்.
  3. எப்போதெல்லாம் விழிப்பூட்டல்களைப் பெற விரும்புகிறீர்கள் என்பதையும் எந்தெந்த அமைப்புகளை இயக்க விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வுசெய்யவும்.
பேரிடர் குறித்த எச்சரிக்கைகள், அச்சுறுத்தல் அறிவிப்புகள், AMBER எச்சரிக்கைகள் போன்ற குறிப்பிட்ட சில அவசரகால மெசேஜ்களை நிர்வகிக்க இந்த அமைப்பைப் பயன்படுத்தலாம்.
பிற ஒலிகளையும் அதிர்வுகளையும் (தொடுதல், சார்ஜிங், திரைப்பூட்டு & பல) தேர்வுசெய்தல்
  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஒலி & அதிர்வு அதன் பிறகு மேம்பட்டவை என்பதைத் தட்டவும்.
  3. ஒலி அல்லது அதிர்வை இயக்கவோ முடக்கவோ செய்யலாம்.
பணிக் கணக்கு ஒலிகளை மாற்றுதல்
  1. பணிக் கணக்கை அமைக்கவும்.
  2. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  3. ஒலி & அதிர்வு அதன் பிறகு மேம்பட்டவை என்பதைத் தட்டவும்.
  4. கீழே ஸ்க்ரோல் செய்து "பணிக் கணக்கு ஒலிகள்" என்பதற்குச் செல்லவும்.
  5. ரிங்டோன்களையும் ஒலிகளையும் தேர்வுசெய்யவும்.

Androidன் பழைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் எனில்

பவர் பட்டனையும் ஒலியளவை அதிகரிப்பதற்கான பட்டனையும் சேர்த்து அழுத்தினால் என்னவாகும் என்பதை மாற்றுதல்
  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. ஒலி அதன் பிறகு ஒலிப்பதைத் தடுப்பதற்கான ஷார்ட்கட்டைத் தட்டவும்.
  3. பவர் பட்டனையும் ஒலியளவை அதிகரிப்பதற்கான பட்டனையும் சேர்த்து அழுத்தவும்.
  4. என்ன நடக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்:
    • அதிர்வுறு: மொபைல் அழைப்புகள் மற்றும் அறிவிப்புகள் வரும்போது அதிர்வுறும்
    • ஒலியடக்கு: மொபைல் அழைப்புகள் மற்றும் அறிவிப்புகள் வரும்போது ஒலிக்காது
    • எதுவும் செய்யாதே
ஒலியளவை அதிகரித்தல் அல்லது குறைத்தல்
  1. ஒலியளவு பட்டனை அழுத்தவும்.
  2. வலதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி தட்டவும்.
  3. ஒலியளவு வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
    • மீடியா மீடியா ஒலியளவு (இசை, வீடியோக்கள், கேம்கள், பிற மீடியா)
    • ரிங் ரிங் ஒலியளவு (அழைப்புகள், அறிவிப்புகள்)
    • அலாரம் அலாரம்

உதவிக்குறிப்பு: நீங்கள் அமைப்புகள் ஆப்ஸ் அதன் பிறகு லி என்பதற்குச் சென்றும் ஒலியளவுகளை மாற்றலாம்.

அதிர்வை இயக்குதல்

உங்கள் மொபைலை ஒலியின்றி அதிர்வுறுமாறு அமைக்க மொபைல் அதிர்வுறும் வரை ஒலியளவைக் குறைக்கும் பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.

இதற்குப் பதிலாக மீடியா ஒலியளவு குறைக்கப்பட்டிருந்தால்:

  • வலதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை தட்டவும்.
  • "ரிங்" என்பதை இடதுபுறமாக ஓரத்திற்கு ஸ்லைடு செய்யவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் மொபைல் அதிர்வுப் பயன்முறையில் உள்ளபோது அதிர்வு  ஐகான் காட்டப்படும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4305197124790177247
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false