Android சாதன உள்ளமைவுச் சேவை பற்றி அறியுங்கள்

Android சாதன உள்ளமைவுச் சேவை Android சாதனங்களில் இருந்து Googleளுக்கு அவ்வப்போது தரவை அனுப்பும். இந்தத் தரவின் மூலம் உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் இருப்பதையும் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுவதையும் Google உறுதிப்படுத்துகிறது. 

எவ்வகையான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன?

Android சாதன உள்ளமைவுச் சேவை, பின்வருபவை உட்பட Android சாதனங்களில் இருந்து தகவல்களைச் சேகரிக்கிறது:

  • சாதனம் மற்றும் கணக்கு அடையாளங்காட்டிகள்
  • சாதனப் பண்புக்கூறுகள்
  • மென்பொருள் மற்றும் பாதுகாப்பு மென்பொருள் பதிப்புகள்
  • நெட்வொர்க் இணைப்பு மற்றும் செயல்திறன் தரவு

வழக்கமாகச் சில நாட்களுக்கு ஒருமுறை Android சாதன உள்ளமைவுச் சேவையுடன் சாதனங்கள் இணைக்கப்படும். சில தரவுப் புள்ளிகளை (எ.கா: நேரமுத்திரைகள்) தவிர, Android சாதன உள்ளமைவுச் சேவை உங்கள் Android சாதனத்திலிருந்து அனுப்பப்பட்ட சமீபத்திய தகவல்களின் நகலை மட்டுமே வைத்திருக்கும். உங்கள் சாதனம் புதிய தகவல்களை அனுப்பியதும் அதனைக் கொண்டு முந்தைய தரவை மாற்றியமைக்கும்.

இந்தத் தரவைப் பயன்படுத்தி Google என்ன செய்யும்?

பின்வரும் காரணங்களுக்காக Android சாதன உள்ளமைவுச் சேவையில் இருந்து நாங்கள் சேகரிக்கும் தரவைப் பயன்படுத்துவோம்:

  • உங்கள் சாதனம் மென்பொருள் புதுப்பிப்புகளையும் பாதுகாப்புப் பேட்ச்களையும் பெறுவதை உறுதிப்படுத்த உதவுகிறது: உதாரணமாக, உங்களுக்குப் புதுப்பிப்பு தேவையா என்பதைத் தீர்மானிக்க உங்கள் சாதனத்திலுள்ள பாதுகாப்புப் பேட்ச் நிலை பயன்படுத்தப்படுகிறது.
  • மாறுபட்ட விவரக்குறிப்புகள் மற்றும் மென்பொருளுடன் கூடிய பல்வேறு Android சாதனங்களில் ஆப்ஸையும் சேவைகளையும் தொடர்ந்து செயல்படுமாறு அமைத்தல்: உதாரணத்திற்கு, Google Play உங்களுக்கு இணக்கமான மென்பொருள் பதிப்புகள் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த, திரைத் தளவமைப்பு போன்ற பண்புக்கூறுகளைப் பயன்படுத்தக்கூடும்.
  • மோசடி, தவறான பயன்பாடு, பிற தீங்கிழைக்கும் நடவடிக்கை போன்றவற்றில் இருந்து உங்கள் சாதனத்தையும் Android சூழலமைப்பையும் பாதுகாத்தல்: உதாரணத்திற்கு, உங்கள் கணக்கைப் பாதுகாக்க, எங்களுக்குச் சந்தேகத்திற்குரிய உள்நுழைவு நடவடிக்கையைக் கண்டறிவதற்கு உதவ சாதன அடையாளங்காட்டிகளைப் பயன்படுத்துகிறோம்.
  • Android சாதனங்களைப் பற்றிய ஒருங்கிணைந்த அளவீடுகளை நிர்வகித்தல்: உதாரணத்திற்கு, இணைப்பைப் பராமரித்தல், பேட்டரி நிலையைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையை மேம்படுத்த மொபைல் நெட்வொர்க்குகளுடன் சாதனங்கள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள அடையாளம் நீக்கப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம்.

இந்தத் தரவை நான் நீக்கலாமா?

Android சாதன உள்ளமைவுச் சேவையில் உள்ள தரவு உங்கள் சாதனம் செயல்படுவதையும் அது புதுப்பித்த நிலையில் இருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கு மிகவும் அவசியமானதாகும். உங்கள் சாதனம் பயன்பாட்டில் இருந்தால் தரவை நீக்க முடியாது. Android சாதனச் சேவை Googleளின் தனியுரிமைக் கொள்கையைப் பின்பற்றுகிறது.

Google கணக்கில் இருந்து நீங்கள் வெளியேறினாலோ உங்கள் Android சாதனத்தில் இருந்து அதை முழுவதும் நீக்கினாலோ அதன் பிறகு உள்ளமைவுத் தகவல்களை உங்கள் Google கணக்குடன் இணைக்க முடியாது. உங்கள் தரவு குறிப்பிட்ட காலம் செயலில் இல்லாமல் இருந்தால் Android சாதன உள்ளமைவுச் சேவை தானாகவே அதை நீக்கிவிடும்.

Android சாதன உள்ளமைவுச் சேவை எவ்வகையான தரவைச் சேகரிக்கிறது என்பதைக் கண்டறியுங்கள்

உங்கள் Google கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள Android சாதன உள்ளமைவுச் சேவைத் தரவின் நகலை நீங்கள் பதிவிறக்கலாம். உங்கள் தரவைப் பதிவிறக்குவது பற்றி மேலும் அறிக.

  1. உங்கள் தரவைப் பதிவிறக்குதல் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. Android சாதன உள்ளமைவுச் சேவையைத் தேர்வுசெய்யவும். மேலும் அதில் உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட சாதனங்களுக்கான தரவு சேர்க்கப்படும்.
  3. அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. காப்பகத்தின் விருப்பத்தேர்வுகளைத் தேர்வுசெய்யவும்.
  5. காப்பகத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

சேகரிக்கப்பட்ட தரவு வகைகள்

Android சாதன உள்ளமைவுச் சேவை மூலம் நாங்கள் சேகரித்த தரவு மற்றும் அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது பற்றிய சில உதாரணங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

வகை

தரவின் உதாரணங்கள்

Google தரவைப் பயன்படுத்தும் விதம்

சாதனம் & கணக்கு அடையாளங்காட்டிகள்
  • IMEI, MEID மற்றும் ESN எண்கள்
  • சாதன வரிசை எண்
  • Google சேவைகள் கட்டமைப்புக்கான Android ஐடி (அல்லது "Android ஐடி") கவனத்திற்கு: இது அமைப்புகள் பாதுகாப்பிற்கான Android ஐடி போன்றது அல்ல.
  • Google கணக்கு (செயல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளபோது)*
  • MAC முகவரிகள்
உங்கள் கணக்கைப் பாதுகாக்க, சந்தேகத்திற்குரிய உள்நுழைவு நடவடிக்கையைக் கண்டறிவதற்கு எங்களுக்கு உதவ, சாதன அடையாளங்காட்டிகளைப் பயன்படுத்துகிறோம்.
சாதனப் பண்புக்கூறுகள்
  • வன்பொருள் வகை
  • தயாரிப்பு
  • மாடல்
  • உற்பத்தியாளர்
  • ஆதரிக்கப்படும் இயல்புப் பிளாட்ஃபார்ம்கள் / CPU வகைகள்
  • கீபோர்டு, வழிகாட்டுதல் & திரைத் தளவமைப்பு வகைகள்
  • திரையின் அளவு (உயரம் மற்றும் அகலம் பிக்சல்களில்)
  • மொத்த நினைவகம்
  • மொழி
  • நேர மண்டலம்
Google Play உங்களுக்கு இணக்கமான மென்பொருள் பதிப்புகள் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த, திரைத் தளவமைப்பு போன்ற பண்புக்கூறுகளைப் பயன்படுத்தலாம்.
சிஸ்டம் & பாதுகாப்பு மென்பொருள் பதிப்புகள்
  • OS பதிப்பு ஸ்ட்ரிங் (OS பதிப்பு கைரேகை )
  • OS பதிப்பு நேரமுத்திரை
  • Android பதிப்பு
  • Google சேவைகள் பதிப்பு
உங்களுக்குப் புதுப்பிப்பு தேவையா என்பதைத் தீர்மானிக்க உங்கள் சாதனத்தில் உள்ள பாதுகாப்புப் பேட்ச் நிலை பயன்படுத்தப்படும்.
நெட்வொர்க் இணைப்பு & செயல்திறன்
  • சிம் மற்றும் மொபைல் ஆப்பரேட்டர்கள்
  • IP முகவரி
  • சிம் சந்தாத் தரவு (சிம் ஆப்பரேட்டர் MCC/MNC, மொபைல் நிறுவனத்தின் பெயர், ரோமிங் நிலை, சிம்மிற்கான இயல்பான பணிகள், தோராயமாகக் கடைசி 5 இலக்கங்களை மட்டும் கொண்டுள்ள சுருக்கப்பட்ட IMSI, குழு ஐடி நிலை 1)
  • Android சாதன உள்ளமைவுச் சேவைக்குக் கடந்த 50 உள்ளமைவு இணைப்புகளுக்கான நேரமுத்திரைகள் & பதிப்பு மாற்றங்களுடன் கடந்த 10 இணைப்புகளுக்கான பதிப்புத் தகவல்கள்
  • தோல்வியடைந்த கடந்த 10 உள்ளமைவு இணைப்புகளுக்கான நேரமுத்திரைகள் & HTTP பதிலளிப்புக் குறியீடுகள்
இணைப்பைப் பராமரித்தல், பேட்டரி நிலையைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையை மேம்படுத்த மொபைல் நெட்வொர்க்குகளுடன் சாதனங்கள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள அடையாளம் நீக்கப்பட்ட தரவைப் பயன்படுத்துகிறோம்.


*ஒரே சாதனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் உள்நுழையப்பட்டு இருந்தால் Google கணக்குத் தகவல்கள் தரவுப் பதிவிறக்கத்தில் வழங்கப்படாமல் இருக்கலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11632658811298696734
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false