உங்கள் மொபைலில் இந்தச் சிக்கல்களில் ஏதேனும் இருந்தால் பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
- செயல்படாமலிருக்கிறது
- பதிலளிக்கவில்லை
- திரை இயக்க நிலையிலேயே நின்றுவிட்டது
சிக்கல் சரிசெய்யப்பட்டதா எனப் பார்க்க, ஒவ்வொரு படிக்குப் பிறகும் மொபைலை மீண்டும் தொடங்கவும்.
மொபைலை மீண்டும் தொடங்குதல்
திரை இயக்கத்தில் இருக்கும்போதே உங்கள் மொபைல் செயல்படாமல் நின்றுவிட்டால், மீண்டும் தொடங்க பவர் பட்டனை சுமார் 30 வினாடிகள் அழுத்திப் பிடிக்கவும்.
உங்கள் மொபைலைப் பிழையறிந்து திருத்துதல்
முக்கியம்: மொபைலைப் பொறுத்து அமைப்புகள் மாறுபடலாம். கூடுதல் தகவல்களுக்கு உங்கள் சாதன உற்பத்தியாளரைத் தொடர்புகொள்ளுங்கள்.
- உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
- கீழ்ப்பகுதிக்கு அருகிலுள்ள சிஸ்டம்
சிஸ்டம் புதுப்பிப்பு என்பதைத் தட்டவும். தேவைப்பட்டால், முதலில் மொபைல் விவரம் அல்லது டேப்லெட் விவரம் என்பதைத் தட்டவும்.
- புதுப்பிக்கப்பட்ட நிலை காட்டப்படும். திரையில் தோன்றும் படிகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றவும்.
பெரும்பாலான மொபைல்களில் எவ்வளவு சேமிப்பிடம் காலியாக உள்ளது என்பதை அமைப்புகள் ஆப்ஸில் அறிந்துகொள்ளலாம். மொபைலைப் பொறுத்து அமைப்புகள் மாறுபடலாம். மேலும் தகவல்களுக்கு உங்கள் சாதனத்தின் உற்பத்தியாளரைத் தொடர்புகொள்ளுங்கள்.
உங்கள் மொபைலிலுள்ள ஆப்ஸைப் பிழையறிந்து திருத்துதல்
- Google Play Store ஆப்ஸை
திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவர ஐகானைத் தட்டவும்.
- ஆப்ஸ் & சாதனங்களை நிர்வகி என்பதைத் தட்டவும்.
- "கிடைக்கக்கூடிய புதுப்பிப்புகள்" என்பதற்குக் கீழே அனைத்து ஆப்ஸையோ குறிப்பிட்ட ஆப்ஸையோ புதுப்பிக்கத் தேர்வுசெய்யவும்.
- உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
- ஆப்ஸ்
அனைத்து ஆப்ஸையும் காட்டு என்பதைத் தட்டவும்.
- ஆப்ஸைத் தட்டவும்.
- உடனே நிறுத்து
சரி என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: எந்தெந்த ஆப்ஸ் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறிவதில் உதவ, நீங்கள் உடனடியாக நிறுத்திய ஆப்ஸின் பட்டியலை உருவாக்கவும்.
பாதுகாப்புப் பயன்முறையில் மீண்டும் தொடங்குதல்
முக்கியமானது: பதிவிறக்கிய அனைத்து ஆப்ஸையும் பாதுகாப்புப் பயன்முறை தற்காலிகமாக முடக்குகிறது.
பாதுகாப்புப் பயன்முறையில் மீண்டும் தொடங்குவது மொபைலைப் பொறுத்து மாறுபடும். பாதுகாப்புப் பயன்முறையில் உங்கள் மொபைலை மீண்டும் தொடங்குவது எப்படி என்பதை அறிய, உற்பத்தியாளரின் உதவித் தளத்திற்குச் செல்லவும்.
சிக்கல் சரியாகிவிட்டதா எனப் பார்க்கவும்
சிக்கல் சரியாகிவிட்டதா எனப் பார்க்கவும். சரியாகச் செயல்பட்டால், சிக்கலை ஆப்ஸ் ஏற்படுத்தக்கூடும். அடுத்த படிக்குச் செல்லவும். சிக்கல் சரியாகவில்லை எனில் மேம்பட்ட பிழையறிந்து திருத்துதல் செயலாக்கப் பகுதிக்குச் செல்லவும்.
வழக்கம்போல உங்கள் மொபைலை மீண்டும் தொடங்கி ஆப்ஸைச் சரிபார்த்தல்
- மொபைலை மீண்டும் தொடங்கவும்.
- சமீபத்தில் பதிவிறக்கிய ஆப்ஸை ஒவ்வொன்றாக அகற்றவும். ஆப்ஸை நீக்குவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
- ஒவ்வொரு முறை ஆப்ஸை அகற்றிய பிறகும், உங்கள் மொபைலை வழக்கம்போல மீண்டும் தொடங்கவும். அந்த ஆப்ஸை அகற்றியதால் சிக்கல் சரியாகிவிட்டதா எனப் பார்க்கவும்.
- சிக்கல் ஏற்படுத்தும் ஆப்ஸை அகற்றிய பிறகு, நீங்கள் அகற்றிய மற்ற ஆப்ஸை மீண்டும் நிறுவிக்கொள்ளலாம். ஆப்ஸை மீண்டும் நிறுவுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
மேம்பட்ட பிழையறிந்து திருத்துதல் செயலாக்கம்
- தரவைக் காப்புப் பிரதி எடுப்பதும் மீட்டமைப்பதும் எப்படி என அறிக.
- தரவின் ஆரம்பநிலை மீட்டமைப்பை எவ்வாறு செய்வது என அறிக.
உதவிக்குறிப்பு: நீங்கள் பதிவிறக்கிய ஆப்ஸ் சிக்கலை ஏற்படுத்தியிருந்தால், அந்த ஆப்ஸை நீங்கள் நிறுவல் நீக்கினாலும் கூட மீண்டும் சிக்கல் ஏற்படலாம்.