Androidல் கணக்கைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

உங்கள் மின்னஞ்சல், தொடர்புகள், கேலெண்டர் ஆகியவற்றை அணுகவும் Google Play Storeரில் இருந்து ஆப்ஸைப் பெறவும் உங்கள் மொபைலில் கணக்குகளைச் சேர்க்கலாம். Google கணக்கைச் சேர்த்தால் அந்தக் கணக்குடன் தொடர்புடைய அனைத்துத் தகவல்களும் உங்கள் மொபைலுடன் தானாகவே ஒத்திசைக்கப்படும்.

ஒரு கணக்கை அகற்றினால் அதனுடன் தொடர்புடைய அனைத்தும் உங்கள் மொபைலில் இருந்து நீக்கப்படும். மின்னஞ்சல், தொடர்புகள், அமைப்புகள் ஆகியவையும் இதிலடங்கும்.

முக்கியமானது: இந்தப் படிகளில் சில, Android 9 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செயல்படும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என அறிக.

மொபைலில் Google கணக்கையோ வேறு கணக்கையோ சேர்த்தல்

  1. மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கடவுச்சொற்கள் & கணக்குகள் என்பதைத் தட்டவும். "கணக்குகள்" என்பதைக் கண்டறிய முடியவில்லை எனில், பயனர்கள் & கணக்குகள் என்பதைத் தட்டவும்.
  3. "இதற்கான கணக்குகள்" என்பதன் கீழே கணக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.
  4. சேர்க்க விரும்பும் கணக்கின் வகையைத் தட்டவும்.
    • Google கணக்கைச் சேர்க்க Google என்பதைத் தட்டவும். Google கணக்கின் மூலம் உள்நுழையும்போது மின்னஞ்சல், தொடர்புகள், கேலெண்டர் நிகழ்வுகள், அந்தக் கணக்குடன் தொடர்புடைய பிற தரவு ஆகியவை தானாகவே உங்கள் மொபைலுடன் ஒத்திசைக்கப்படும்.
    • வேறொரு தனிப்பட்ட கணக்கைச் சேர்க்க, Personal (IMAP) அல்லது Personal (POP3) என்பதைத் தட்டவும். பொதுவாக Microsoft Outlook, Apple Mail போன்ற மின்னஞ்சல் நிரல்களைப் பயன்படுத்தினால் இவற்றைத் தேர்வுசெய்வீர்கள். IMAP அல்லது POP3யை Gmailலுடன் பயன்படுத்துவது எப்படி என்று அறிக.
  5. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
  6. கணக்குகளைச் சேர்க்கிறீர்கள் என்றால் பாதுகாப்பிற்காக உங்கள் மொபைலின் பேட்டர்ன், பின்(PIN) அல்லது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டியிருக்கலாம்.

உதவிக்குறிப்பு: நண்பருக்கு உங்கள் சாதனத்தைப் பயன்படுத்துவதற்குக் கொடுக்க விரும்பினால், கணக்கைச் சேர்ப்பதற்குப் பதிலாக நீங்கள் learn how to create a separate user அல்லது temporary guest.

மொபைலிலிருந்து Google கணக்கையோ வேறு கணக்கையோ அகற்றுதல்

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கடவுச்சொற்கள் & கணக்குகள் என்பதைத் தட்டவும். "கணக்குகள்" என்பதைக் கண்டறிய முடியவில்லை எனில், பயனர்கள் & கணக்குகள் என்பதைத் தட்டவும்.
  3. "கணக்குகள்" என்பதன் கீழே, நீங்கள் அகற்ற விரும்பும் கணக்கைத் தட்டி அதன் பிறகு கணக்கை அகற்று என்பதைத் தட்டவும்.
  4. உறுதிசெய்ய, கணக்கை அகற்று அதன் பிறகு கணக்கை அகற்று என்பதைத் தட்டவும்.
  5. உங்கள் சாதனத்தில் உள்ள ஒரே Google கணக்கு இதுதான் என்றால் பாதுகாப்பிற்காகச் சாதனத்தின் பேட்டர்ன், பின் அல்லது கடவுச்சொல்லை உள்ளிட வேண்டியிருக்கும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15211241410901366735
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false