நீங்கள் Android சாதனத்தையோ Wear OS வாட்ச்சையோ தொலைத்துவிட்டால் அதைக் கண்டறியலாம் பாதுகாக்கலாம் அல்லது தொலைவில் இருந்தே தரவை அழிக்கலாம். Find My Device ஆப்ஸ் மூலம் நண்பரின் தொலைந்த சாதனத்தைக் கண்டறியவோ பாதுகாக்கவோ அல்லது அதிலுள்ள தரவை அழிக்கவோ நீங்கள் உதவலாம்.
உங்கள் சாதனத்தில் Google கணக்கைச் சேர்த்திருந்தால் Find My Device தானாகவே இயக்கப்படும். இயல்பாகவே, உங்கள் சாதனம் "அதிக டிராஃபிக் உள்ள பகுதிகளில் மட்டும் நெட்வொர்க்கைப் பயன்படுத்துதல்" என்று அமைக்கப்பட்டிருக்கும். இதனால் இது என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்களை Googleளில் சேமிப்பதோடு Android சாதனங்களின் திரளாக்கப்பட்ட நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக ஆஃப்லைன் சாதனங்களைக் கண்டறியவும் உதவுகிறது. உங்கள் Android சாதனத்தில் இருப்பவற்றைக் கண்டறிவதற்கு நெட்வொர்க்கிடமிருந்து உதவியைப் பெற, பின்னையோ பேட்டர்னையோ கடவுச்சொல்லையோ அமைக்கவும். உங்கள் சாதனத்தின் மிகச் சமீபத்திய இருப்பிடத்தை அதில் செயல்படுத்தப்பட்ட முதல் கணக்கில் பார்க்க முடியும்.
உதவிக்குறிப்பு: உங்கள் Wear OS சாதனத்தைக் கண்டறியவோ பாதுகாக்கவோ அதிலுள்ள தரவை அழிக்கவோ, அதை வைஃபை/மொபைல் டேட்டாவுடன் இணையுங்கள்.
தொலைந்த Android சாதனத்தைக் கண்டறிவதற்குத் தயாராகுதல்.
Android சாதனத்தில் உள்ள தரவைப் பாதுகாக்க அல்லது அழிக்க, சாதனம்:
- ஆன் செய்யப்பட்டு அதில் பவர் இருக்க வேண்டும்
- மொபைல் டேட்டா/வைஃபையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
- Google கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும்
- அதில் Find My Device இயக்கப்பட்டிருக்க வேண்டும்
- அது Google Playயில் கண்டறியப்படும் நிலையில் இருக்க வேண்டும்
தொலைவிலிருந்தே சாதனத்தைக் கண்டறிதல், பாதுகாத்தல் அல்லது அதிலுள்ள தரவை அழித்தல்
முக்கியம்: உங்கள் சாதனத்தை அதிலிருந்த தரவை அழித்த பிறகு நீங்கள் கண்டறிந்தால், அதை மீண்டும் பயன்படுத்த உங்கள் Google கணக்கின் கடவுச்சொல் தேவை. சாதனப் பாதுகாப்பு குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
Find My Device ஆப்ஸைப் பயன்படுத்துதல்- மற்றொரு Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Find My Device ஆப்ஸை திறக்கவும்.
- ஆப்ஸ் உங்களிடம் இல்லையெனில்: Google Playயில் பெறுக.
- உங்களிடம் Android சாதனம் இல்லையெனில்: உலாவியில், Find My Deviceஸிற்குச் செல்லவும்.
- உள்நுழையவும்.
- உங்கள் சொந்தச் சாதனம் தொலைந்துவிட்டால்: [உங்கள் பெயர்] ஆகத் தொடருங்கள் என்பதைத் தட்டவும்.
- நண்பருக்கு உதவுகிறீர்கள் எனில்: விருந்தினராக உள்நுழையுங்கள் என்பதைத் தட்டி உங்கள் நண்பரை உள்நுழையச் செய்யவும்.
- காட்டப்படும் சாதனங்களில், நீங்கள் கண்டறிய விரும்பும் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும். தொலைந்த சாதனத்திற்கு அறிவிப்பு ஒன்று அனுப்பப்படும்.
- Family Link ஆப்ஸ் மூலம் நீங்கள் ஒரு Google கணக்கை நிர்வகிக்கும்போது, உங்கள் பிள்ளையின் கண்காணிக்கப்படும் சாதனங்கள் தானாகவே Find My Deviceஸில் 'குடும்பச் சாதனங்கள்' பிரிவில் தோன்றும்.
- நீங்கள் கண்டறிய விரும்பும் Android சாதனத்திற்கான பூட்டுத் திரை பின்னை (PIN) வழங்கும்படி உங்களிடம் கேட்கப்படலாம். Android 9 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பிற்கு இது பொருந்தும். நீங்கள் கண்டறிய விரும்பும் சாதனத்தில் பின் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலோ அது Android 8 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கினாலோ உங்கள் Google கடவுச்சொல் கேட்கப்படலாம்.
- மேப்பில், சாதனத்தின் இருப்பிடம் குறித்த தகவல்களை நீங்கள் பெறலாம்.
- தொலைந்த சாதனம் இருக்கும் இடத்திற்குச் செல்ல, வழிகளைப் பெறுக என்பதைத் தட்டவும்.
- உங்கள் இருப்பிடம் பின்வரும் ஆதாரங்களில் இருந்து கணிக்கப்படுகிறது:
- GPS: 20 மீட்டர் வரையிலான உங்கள் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ள நாங்கள் சாட்டிலைட்டுகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் கட்டடங்களுக்குள் அல்லது சுரங்கப் பாதையில் இருக்கும்போது, GPS சிலநேரங்களில் துல்லியமற்றதாக இருக்கும்.
- வைஃபை: நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள அருகிலுள்ள வைஃபை நெட்வொர்க்குகளின் இருப்பிடம் உதவுகிறது.
- மொபைல் டவர்கள்: உங்கள் மொபைல் டேட்டாவின் இணைப்பு சில ஆயிரம் மீட்டர்கள் வரை துல்லியமாக இருக்கும்.
- உங்கள் இருப்பிடத்தின் துல்லியத்தை மேம்படுத்துவது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.
- உங்கள் இருப்பிடம் பின்வரும் ஆதாரங்களில் இருந்து கணிக்கப்படுகிறது:
- சாதனம் 10 மீட்டருக்குள் இருந்தால், சாதனத்தை நெருங்கும்போது அது இருக்கும் இடத்தை வண்ணத்தால் நிரப்பும் ஒரு வடிவத்தைப் பெறலாம்: அருகிலுள்ளவற்றைக் கண்டறிக என்பதைத் தட்டவும். புதுப்பிக்க சில வினாடிகள் ஆகக்கூடும்.
- உங்கள் இருப்பிடம் பின் செய்யப்பட்டுள்ள இடத்தைச் சுற்றியுள்ள இலக்குப் பகுதி இருப்பிடத் துல்லியத்தில் எங்களின் நம்பிக்கையைக் குறிக்கிறது.
- உங்கள் சாதனத்தின் தற்போதைய இருப்பிடத்தைக் கண்டறிய முடியவில்லை எனில், கடைசியாகப் பதிவான அதன் இருப்பிடம் குறித்த தகவல்களைக் கண்டறியலாம் (கிடைக்கும்பட்சத்தில்).
- தொலைந்த சாதனம் இருக்கும் இடத்திற்குச் செல்ல, வழிகளைப் பெறுக என்பதைத் தட்டவும்.
- இவற்றில் நீங்கள் செய்ய விரும்புவதைத் தேர்வுசெய்யவும்:
- ஒலிக்கச் செய்: உங்கள் சாதனம் சைலன்ட்/அதிர்வுப் பயன்முறையில் இருந்தாலும், முழு ஒலியளவில் அதை 5 நிமிடங்களுக்கு ஒலிக்கச் செய்யும்.
- ஒலியை இயக்க, வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் இயக்கப்பட வேண்டும், சிறிய ஹெட்ஃபோன்கள் கேஸிற்கு வெளியில் இருக்க வேண்டும்.
- சாதனத்தைப் பாதுகாத்திடு:பின்/கடவுச்சொல் மூலம் உங்கள் சாதனத்தைப் பூட்டும். சாதனத்திற்குப் பூட்டு இல்லையெனில் புதிதாகப் பூட்டை அமைக்கலாம். சாதனத்தைக் கண்டறிபவர் உங்களிடம் அதை ஒப்படைக்க உதவும் வகையில் நீங்கள் ஒரு மெசேஜையோ மொபைல் எண்ணையோ பூட்டுத் திரையில் சேர்க்கலாம்.
- உங்களால் கண்டறிய முடியாத சாதனத்தில் உள்ள தரவை நீக்க: உங்கள் சாதனத்தில் உள்ள தரவை அழிப்பதற்கான, மீட்டமைப்பதற்கான அல்லது அகற்றுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- ஒலிக்கச் செய்: உங்கள் சாதனம் சைலன்ட்/அதிர்வுப் பயன்முறையில் இருந்தாலும், முழு ஒலியளவில் அதை 5 நிமிடங்களுக்கு ஒலிக்கச் செய்யும்.
சாதனத்தைக் கண்டறிய முடியவில்லை எனில் நீங்கள் அதிலுள்ள தரவை நீக்கலாம்.
முக்கியம்: இந்த வழிமுறைகள் உங்கள் சாதனத்தில் உள்ள அனைத்துத் தரவையும் நிரந்தரமாக நீக்கும். ஆனால் SD கார்டுகளில் உள்ள தரவை நீக்காது. சாதனத்தில் உள்ள தரவு அழிக்கப்பட்ட பிறகு, அதன் இருப்பிடம் Find My Deviceஸில் கிடைக்காது.
நீங்கள் Find My Deviceஸை இணையத்தில், Android சாதனத்தில் அல்லது நண்பரின் Android சாதனத்தில் கெஸ்ட் பயன்முறையில் பயன்படுத்தலாம்:
- சாதனத்தில், Find My Device ஆப்ஸை திறக்கவும்.
- நீங்கள் மீட்டமைக்க/அகற்ற விரும்பும் சாதனத்தையோ துணைக்கருவியையோ தேர்ந்தெடுக்கவும்.
- அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Android சாதனத்தில் உள்ள தரவை அழிக்க: சாதனத்தை ஆரம்பநிலைக்கு மீட்டமை என்பதைத் தட்டவும்.
- துணைக்கருவியை நீக்க: சாதனத்தை அகற்று என்பதைத் தட்டவும்.
Wear OS ஸ்மார்ட்வாட்ச்சுடன் இணைக்கப்பட்ட உங்கள் Android மொபைலையோ டேப்லெட்டையோ தொலைத்துவிட்டால், வாட்ச் மூலம் நீங்கள் அதைக் கண்டறியலாம். உங்கள் வாட்ச் மூலம் மொபைலைக் கண்டறிவது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.
சாதனத்தை முடக்க, மொபைல் சேவை வழங்குநர் உங்கள் சாதனத்தின் IMEI எண்ணைப் பயன்படுத்தலாம். மொபைலின் அமைப்புகளிலோ Find My Device ஆப்ஸ் மூலமோ உங்கள் சாதனத்தின் IMEI எண்ணைக் கண்டறியலாம்.
முக்கியம்: Google Pixel Tablet போன்ற சில சாதனங்களில் IMEI எண்கள் இருக்காது.
Find My Device ஆப்ஸ் மூலம் உங்கள் சாதனத்தின் IMEI எண்ணைக் கண்டறிய:
- Find My Device ஆப்ஸை திறக்கவும்.
- நீங்கள் கண்டறிய விரும்பும் சாதனத்தைத் தேர்வுசெய்யவும்.
- பற்சக்கர ஐகானை தட்டவும்.
வலை உலாவியில் உங்கள் சாதனத்தின் IMEI எண்ணைக் கண்டறிய:
- android.com/find தளத்திற்குச் செல்லவும்.
- சாதனத்திற்கு அடுத்துள்ள ஐகானைத் தட்டவும்.
உங்கள் துணைக்கருவி தொலைந்தது எனக் குறித்தால், பூட்டுத் திரையில் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, மெசேஜ் ஆகியவற்றைச் சேர்க்கலாம். உங்கள் தொலைந்த சாதனத்தைத் திருப்பி அளிக்க, அதைக் கண்டறிபவரால் உங்களது தொடர்புத் தகவல்களையும் அணுக முடியும்.
துணைக்கருவி, அதை இணைக்கப் பயன்படுத்தும் Android சாதனத்தின் அருகில் இருந்தால் அது தானாகவே 'கண்டறியப்பட்டது' எனக் குறிக்கப்படும்.
உதவிக்குறிப்பு: Find My Device நெட்வொர்க்கில் இருப்பிடம் கண்டறியப்பட்டதும் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.Find My Device ஆப்ஸில் தொலைந்தது எனக் குறிக்கப்பட்ட வேறொருவருடைய துணைக்கருவியைத் திருப்பி அளிக்க நீங்கள் உதவலாம்.
- உங்கள் Android சாதனத்தின் திரையை அன்லாக் செய்யவும்.
- Android 12 அல்லது அதற்கு முந்தைய பதிப்பிற்கு, இருப்பிடம் இயக்கத்தில் இருப்பதை உறுதிசெய்யவும். இருப்பிடத்தை எப்படி இயக்குவது என அறிந்துகொள்ளுங்கள்.
- நீங்கள் இருப்பிடத்தை இயக்கும்போது உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தையும் பிற ஆப்ஸுக்கும் சேவைகளுக்கும் கிடைக்கச் செய்யலாம். உங்கள் மொபைலில் கிடைக்கக்கூடிய இருப்பிட அமைப்புகளைப் புரிந்துகொள்ளுதல்.
- உங்கள் மொபைல்/டேப்லெட்டின் பின்புறம் துணைக்கருவியை ஹோல்டு செய்யவும்.
- சாதனத்தின் உரிமையாளர் தொடர்புத் தகவல்களையோ மெசேஜையோ சேர்த்திருந்தால், அது உங்கள் திரையில் காட்டப்படும்.
கூடுதல் உதவியைப் பெறுதல்
தொலைந்த அல்லது திருடு போன உங்கள் சாதனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்கள் Google கணக்கைப் பாதுகாப்பது எப்படி என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.