உபயோகம் & பிழை கண்டறிதல் தகவல்களை Googleளுடன் பகிர்தல்

Androidஐ மேம்படுத்துவதற்கு எங்களுக்கு உதவ, நீங்கள் Android சாதனத்தை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது போன்ற தகவல்களை எங்களுக்கு அனுப்ப உங்கள் சாதனத்தை அனுமதிக்கலாம்.

நீங்கள் கூடுதல் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை இயக்கியிருந்தால் இந்தத் தகவல்கள் உங்கள் கணக்கிலேயே சேமிக்கப்படலாம். அவ்வாறு சேமிக்கப்பட்டால், அவற்றை எனது செயல்பாடு என்பதில் பார்க்கலாம் நீக்கலாம். உங்கள் Google சேவைகளை மேலும் பிரத்தியேகமாக்கவும் அனைவருக்கும் ஏற்ற வகையில் எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்தவும் இந்தத் தகவல்களைப் பயன்படுத்துவோம்.

கவனத்திற்கு: இந்தப் படிகளில் சிலவற்றை Android 8.0 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செய்ய முடியும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

Googleளுடன் எந்தெந்தத் தகவல்கள் பகிரப்படும்?

உபயோகம் மற்றும் பிழை கண்டறிதலை இயக்கினால் செயல்படுபவை, செயல்படாதவை பற்றிய தகவல்களை Googleளுக்கு உங்கள் சாதனம் அனுப்பும். உதாரணமாக, உங்கள் சாதனம் பின்வருபவை போன்ற தகவல்களை அனுப்பலாம்:

  • பேட்டரி நிலை
  • எப்போதெல்லாம் ஆப்ஸைப் பயன்படுத்துகிறீர்கள்?
  • உங்கள் நெட்வொர்க் இணைப்புகளின் (மொபைல், வைஃபை, புளூடூத் போன்றவை) தரம் மற்றும் கால அளவு

உபயோகம் & பிழை கண்டறிதலை இயக்குதல் அல்லது முடக்குதல்

முக்கியமானது: உபயோகம் மற்றும் பிழை கண்டறிதலை முடக்கினாலும், Android புதிய பதிப்பின் அறிவிப்பு போன்ற அவசியமான சேவைகளை உங்கள் சாதனம் தொடர்ந்து பெறும். உபயோகம் மற்றும் பிழை கண்டறிதல் அமைப்பை முடக்கினால் அது ஆப்ஸ் சேகரிக்கக்கூடிய தகவல்களைப் பாதிக்காது.

உபயோகம் மற்றும் பிழை கண்டறிதல் தகவல்களை Googleளுக்கு அனுப்ப வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்ய:

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. Google அதன் பிறகு மேலும்  அதன் பிறகு உபயோகம் & பிழை கண்டறிதல் என்பதைத் தட்டவும்.
  3. உபயோகம் & பிழை கண்டறிதலை இயக்கவும் அல்லது முடக்கவும்.

உதவிக்குறிப்பு: பலர் பயன்படுத்தும் சாதனத்தை உபயோகித்தால் இந்த அமைப்பைப் பிற பயனர் சுயவிவரங்கள் மாற்றக்கூடும்.

இந்தத் தகவல்களை Google எவ்வாறு பயன்படுத்துகிறது?

Google ஆப்ஸ், Android சாதனங்கள் போன்ற தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்த உபயோகம் மற்றும் பிழை கண்டறிதல் தகவல்களை Google பயன்படுத்துகிறது. எல்லாத் தகவல்களும் Googleளின் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக, இவற்றை மேம்படுத்த உபயோகம் மற்றும் பிழை கண்டறிதலை Google பயன்படுத்தலாம்:

  • பேட்டரி நிலை: பொதுவான அம்சங்கள் குறைந்தளவு பேட்டரியைப் பயன்படுத்துவதற்கு உதவ, உங்கள் சாதனத்தில் எவை அதிக பேட்டரியைப் பயன்படுத்துகின்றன என்ற தகவலை Google பயன்படுத்தலாம்.
  • சாதனங்களில் சிதைவு அல்லது செயலிழப்பு ஏற்படுதல்: Android ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை மேலும் நம்பகத்தன்மைமிக்கதாக்க உதவ, உங்கள் சாதனத்தில் ஆப்ஸ் சிதைவு, செயலிழப்பு எப்போது ஏற்படுகிறது என்பன போன்ற தகவல்களை Google பயன்படுத்தலாம்.

Android டெவெலப்பர்கள் தங்கள் ஆப்ஸையும் தயாரிப்புகளையும் இன்னும் சிறப்பாக மாற்ற உதவ, சில ஒருங்கிணைந்த தகவல்கள் கூட்டாளர்களுக்கு உதவலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12610060622943604771
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false