உங்கள் Android சாதனத்தின் இருப்பிட அமைப்புகளை நிர்வகித்தல்

வரும் மாதங்களில், இதுவரை சென்ற இடங்கள் அமைப்பின் பெயர் காலப்பதிவு என்று மாற்றப்படும். உங்கள் கணக்கில் 'இதுவரை சென்ற இடங்கள்' இயக்கப்பட்டிருந்தால் உங்கள் ஆப்ஸிலும் கணக்கு அமைப்புகளிலும் 'காலப்பதிவு' காட்டப்படலாம். மேலும் அறிக.
அமைப்புகளில் இருப்பிடத்தை இயக்கினால், சிறந்த உள்ளூர் தேடல் முடிவுகளை (உங்கள் மொபைலின் இருப்பிடத்தைப் பொறுத்து வழக்கமான பயணம் குறித்த கணிப்புகள், அருகிலுள்ள உணவகங்கள் போன்றவை) பெறுவது உள்ளிட்ட இருப்பிடம் சார்ந்த சேவைகளை நீங்கள் பயன்படுத்த முடியும்.

முக்கியமானது:

உங்கள் மொபைலில் கிடைக்கக்கூடிய இருப்பிட அமைப்புகளைப் புரிந்துகொள்ளுதல்

முக்கியமானது: உங்கள் மொபைலில் இருப்பிடத்தை முடக்கினால், ஆப்ஸாலும் சேவைகளாலும் உங்கள் மொபைலின் இருப்பிடத்தை அறிய முடியாது. இருப்பினும், உங்கள் IP முகவரியின் அடிப்படையில் உள்ளூர் முடிவுகளும் விளம்பரங்களும் உங்களுக்குக் காட்டப்படலாம்.

பின்வருபவை உள்ளிட்ட இருப்பிடம் சார்ந்த சேவைகளை Google வழங்குகிறது:

உதவிக்குறிப்பு: ஒவ்வொரு ஆப்ஸும் அதற்குரிய அமைப்புகளைக் கொண்டிருக்கும். .

உங்கள் மொபைலின் இருப்பிடத்தை இயக்குதல்/முடக்குதல்

  1. திரையின் மேலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
  2. இருப்பிடம் என்பதைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
    • இருப்பிடம் என்பதைக் கண்டறியவில்லை எனில்:
      1. திருத்து மாற்றுவதற்கான ஐகான் அல்லது அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
      2. இருப்பிடம் என்பதை உங்கள் விரைவு அமைப்புகள் மெனுவிற்கு இழுக்கவும்.

மிகத் துல்லியமாக இருப்பிடத்தைக் கண்டறிய உங்கள் மொபைலுக்கு உதவுதல் (Google இருப்பிடச் சேவைகள் என்கிற Google இருப்பிடத் துல்லியம்)

உங்கள் மொபைலின் இருப்பிடத் துல்லியத்தை இயக்குதல்/முடக்குதல்

Android 12 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்

  1. திரையின் மேலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
  2. இருப்பிடம் என்பதைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
    • இருப்பிடம் என்பதைக் கண்டறியவில்லை எனில்:
      1. திருத்து மாற்றுவதற்கான ஐகான் அல்லது அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
      2. இருப்பிடம் என்பதை உங்கள் விரைவு அமைப்புகள் மெனுவிற்கு இழுக்கவும்.
  3. இருப்பிடச் சேவைகள் அதன் பிறகு Google இருப்பிடத் துல்லியம் என்பதைத் தட்டவும்.
  4. இருப்பிடத் துல்லியத்தை மேம்படுத்து என்பதை இயக்கவும்/முடக்கவும்.

Android 11 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில்

  1. திரையின் மேலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும். 
  2. இருப்பிடம் என்பதைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
    • இருப்பிடம் என்பதைக் கண்டறிய முடியவில்லையெனில்:
      1. திருத்து மாற்றுவதற்கான ஐகான் அல்லது அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
      2. விரைவு அமைப்புகள் மெனுவிற்கு இருப்பிடத்தை இழுக்கவும்.
  3. மேம்பட்டவை அதன் பிறகு Google இருப்பிடத் துல்லியம் என்பதைத் தட்டவும். 
  4. இருப்பிடத் துல்லியத்தை மேம்படுத்துதல் அம்சத்தை இயக்கவும்/முடக்கவும்.

வைஃபை & புளூடூத் ஸ்கேனிங்கை அமைத்தல்

ஆப்ஸ் துல்லியமாக இருப்பிடத் தகவல்களைப் பெறுவதற்கு உதவ, அருகிலுள்ள வைஃபை ஆக்சஸ் பாயின்ட்டுகள் அல்லது புளூடூத் சாதனங்களை உங்கள் மொபைல் ஸ்கேன் செய்வதற்கு நீங்கள் அனுமதிக்கலாம்.

Android 12 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்

  1. திரையின் மேலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
  2. இருப்பிடம் என்பதைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
    • இருப்பிடம் என்பதைக் கண்டறியவில்லை எனில்:
      1. திருத்து மாற்றுவதற்கான ஐகான் அல்லது அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
      2. இருப்பிடம் என்பதை உங்கள் விரைவு அமைப்புகள் மெனுவிற்கு இழுக்கவும்.
  3. இருப்பிடச் சேவைகள் என்பதைத் தட்டவும்.
  4. வைஃபை ஸ்கேனிங் மற்றும் புளூடூத் ஸ்கேனிங்கை இயக்கவும்/முடக்கவும்.

Android 11 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகள்

  1. திரையின் மேலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும். 
  2. இருப்பிடம் என்பதைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
    • இருப்பிடம் என்பதைக் கண்டறியவில்லை எனில்:
      1. திருத்து மாற்றுவதற்கான ஐகான் அல்லது அமைப்புகள் என்பதைத் தட்டவும். 
      2. இருப்பிடம்  என்பதை உங்கள் விரைவு அமைப்புகள் மெனுவிற்கு இழுக்கவும்.
  3. வைஃபை ஸ்கேனிங் மற்றும் புளூடூத் ஸ்கேனிங் என்பதைத் தட்டவும். 
  4. வைஃபை ஸ்கேனிங் மற்றும் புளூடூத் ஸ்கேனிங்கை இயக்கவும்/முடக்கவும்.

அவசரச் சூழல்களில் உங்கள் இருப்பிடத் தகவலை அனுப்புதல்

பதிலளிப்பவர்கள் உங்களை விரைவாகக் கண்டறிய, நீங்கள் அவசர உதவி எண்ணை அழைக்கும்போதோ அதற்கு மெசேஜ் அனுப்பும்போதோ (உதாரணமாக, அமெரிக்காவில் 911 என்ற எண்ணையோ ஐரோப்பாவில் 112 என்ற எண்ணையோ அழைத்தல்) உங்கள் மொபைலின் இருப்பிடம் அவர்களுடன் பகிரப்படலாம்.

உங்கள் நாடு/பிராந்தியத்தில் உள்ள மொபைல் நெட்வொர்க்கில் Android அவசரச் சூழ்நிலைக்கான இருப்பிடச் சேவை (ELS - Emergency Location Service) வேலை செய்யும் பட்சத்தில் ELSஸை நீங்கள் முடக்காமல் இருந்தால் மீட்புப் பணியாளர்களுக்கு ELS மூலம் அதன் இருப்பிடத்தை உங்கள் மொபைல் தானாகவே அனுப்பும். ELS முடக்கப்பட்டிருந்தாலும், அவசர உதவி எண்ணை அழைக்கும்போதோ அதற்கு மெசேஜ் அனுப்பும்போதோ சாதனத்தின் இருப்பிடத்தை உங்கள் மொபைல் நிறுவனம் அனுப்பக்கூடும்.

Androidன் அவசரச் சூழ்நிலைக்கான இருப்பிடச் சேவையை இயக்குதல் அல்லது முடக்குதல்

அவசர சூழ்நிலைக்கான இருப்பிடச் சேவையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இயக்கலாம்/முடக்கலாம். பெரும்பாலான சாதனங்களில் Google Play சேவைகள் உதவியுடன் அவசர சூழ்நிலைக்கான இருப்பிடச் சேவை கிடைக்கிறது

Android 12 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில்

  1. உங்கள் சாதனத்தின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்க, திரையின் மேலிருந்து கீழ்நோக்கி இருமுறை ஸ்வைப் செய்யவும்.
  2. அமைப்புகள்  அதன் பிறகு பாதுகாப்பு & அவசர அழைப்பு என்பதைத் தட்டவும்.
  3. அவசரச் சூழ்நிலைக்கான இருப்பிடச் சேவை அம்சத்தை இயக்கவும்/முடக்கவும்.

Android 11 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகள்

  1. திரையின் மேலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
  2. இருப்பிடம் என்பதைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.
    • இருப்பிடம் என்பதைக் கண்டறியவில்லை எனில்:
      1. திருத்து மாற்றுவதற்கான ஐகான் அல்லது அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
      2. இருப்பிடம் என்பதை உங்கள் விரைவு அமைப்புகள் மெனுவிற்கு இழுக்கவும்.
  3. மேம்பட்டது அதன் பிறகு அவசரச் சூழ்நிலைக்கான இருப்பிடச் சேவை என்பதைத் தட்டவும்.
  4. அவசரச் சூழ்நிலைக்கான இருப்பிடச் சேவையை இயக்கவும் அல்லது முடக்கவும்.
 
அவசரச் சூழ்நிலைக்கான இருப்பிடச் சேவை எப்படிச் செயல்படுகிறது?

உள்ளூர் அவசர உதவி எண்ணை அழைக்கும்போதோ அதற்கு மெசேஜ் அனுப்பும்போதோ மட்டுமே ELS அம்சம் வேலை செய்யும்.

அவசர அழைப்பின்போது, சாதனத்தின் துல்லியமான இருப்பிடத்தைப் பெறுவதற்காக Google இருப்பிடத் துல்லியத்தையும் பிற தகவல்களையும் ELS அம்சம் பயன்படுத்தக்கூடும். உங்கள் சாதனத்தின் Wi-Fi அமைப்பு முடக்கப்பட்டிருந்தால், அதை ELS அம்சம் இயக்கக்கூடும்.

அவசரகாலச் சேவைகள் உங்களைக் கண்டறிய உதவும் நோக்கத்திற்காக, உங்கள் மொபைல் அதன் இருப்பிடத்தை அங்கீகரிக்கப்பட்ட அவசரகாலக் கூட்டாளர்களுக்கு அனுப்பும். உங்கள் இருப்பிடம் உங்கள் மொபைலில் இருந்தே நேரடியாக அவசரகாலக் கூட்டாளர்களுக்கு அனுப்பப்படும்.

ELS அம்சம் செயல்பாட்டில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அவசர அழைப்பு/மெசேஜ் நிறைவைடைந்த பிறகு, ELS அம்சம் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைப் பகுப்பாய்வு செய்யும் நோக்கத்திற்காக அடையாளம் நீக்கப்பட்ட பயன்பாடு மற்றும் பகுப்பாய்வுத் தரவை உங்கள் மொபைல் Googleளுக்கு அனுப்பக்கூடும். உங்கள் அடையாளமும் அங்கீகரிக்கப்பட்ட அவசரகாலக் கூட்டாளர்களுக்கு அனுப்பப்படும் இருப்பிடமும் இந்தத் தகவல்களில் இருக்காது.

உதவிக்குறிப்பு: அங்கீகரிக்கப்பட்ட அவசரகாலச் சேவைக் கூட்டாளர்களுக்கு ELS உங்கள் இருப்பிடத்தை அனுப்புவதும் நீங்கள் Google Maps மூலம் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்வதும் ஒன்றல்ல. Google Maps மூலம் இருப்பிடத்தைப் பகிர்வது குறித்து அறிக.

Androidன் பழைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் எனில்

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

2610228651016260748
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
false
false