Googleளில் தேடும்போது உங்கள் இருப்பிடத் தகவல் பயன்படுத்தப்படும் விதம் குறித்துப் புரிந்துகொள்ளுதலும் அதை நிர்வகித்தலும்

Maps, Search, Google Assistant போன்றவற்றைப் பயன்படுத்தி Googleளில் நீங்கள் தேடும்போது மிகவும் பயனுள்ள முடிவுகளைக் காட்ட உங்களின் தற்போதைய இருப்பிடத் தகவல் பயன்படுத்தப்படும். உதாரணமாக, காஃபி கடைகளைத் தேடினால் உங்களுக்கு அருகிலுள்ள காஃபி கடைகள் காட்டப்படும். தேடலில் உங்கள் இருப்பிடத்தை நீங்கள் சேர்க்கவில்லை என்றாலும் உங்களுக்கு அருகிலுள்ள இடங்களைக் காட்ட அது உதவும்.

நீங்கள் இருக்குமிடத்தைக் கணிக்க பல்வேறு தகவல்கள் ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன. Google சேவைகளைப் பயன்படுத்தும்போது நீங்கள் விரும்பும் தேடல் முடிவுகளைப் பெறவும் உங்களுக்கு ஏற்ற வகையில் தனியுரிமையைக் கட்டுப்படுத்தவும் உங்கள் இருப்பிட அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

அமைப்புகளை மாற்றுவதற்கு முன், இருப்பிடத் தகவல் எப்படி வேலைசெய்கிறது என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்பினால் தேடும்போது உங்கள் இருப்பிடத்தை Google எப்படித் தீர்மானிக்கிறது என்பது குறித்த தகவலைக் கீழே அறிந்துகொள்ளலாம்.

துல்லியமான உள்ளூர் முடிவுகளைப் பெற இருப்பிடத் தகவலைப் புதுப்பியுங்கள்

அருகிலுள்ள எதையேனும் தேடி அதற்கான உள்ளூர் முடிவுகள் எதையும் கண்டறிய முடியவில்லை என்றால் இவற்றைச் செய்து பாருங்கள்:

  • கோடம்பாக்கத்தில் உள்ள காஃபி ஷாப்புகள் என்பதைப் போல தேடலில் உங்களின் தற்போதைய இருப்பிடத்தைச் சேர்க்கவும்.
  • தேடும்போது உங்கள் சாதனம் இருப்பிட விவரத்தை Googleளுக்கு அனுப்புகிறதா என்பதைச் சரிபார்க்கவும். உங்கள் சாதனத்தின் இருப்பிட அமைப்புகளை நிர்வகிக்க கீழேயுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

வீட்டிலிருந்தோ பணியிடத்திலிருந்தோ தேடும்போது அந்த இடங்களிலிருந்து Google உங்களுக்கு இன்னும் சிறந்த முடிவுகளை வழங்க வீடு மற்றும் பணியிட முகவரிகளை நீங்கள் அமைக்கலாம்:

சாதனத்தின் இருப்பிட அமைப்புகளை நிர்வகித்தல்

இருப்பிடச் சேவைகள் இயக்கப்பட்டிருந்து ஆப்ஸிற்கும் உலாவிக்கும் இருப்பிட அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தால் iPhoneகள், iPadகள் ஆகியவற்றால் ஆப்ஸிற்கும் இணையதளங்களுக்கும் இருப்பிடத் தகவல்களை அனுப்ப முடியும். அமைப்புகளில் இருப்பிடச் சேவைகளை நிர்வகிப்பதன் மூலம், ஆப்ஸிற்கோ google.com உள்ளிட்ட இணையதளத்திற்கோ இருப்பிடத் தகவல் கிடைக்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

இணையதளங்களிலோ ஆப்ஸிலோ உங்களின் துல்லியமான அல்லது தோராயமான இருப்பிடத் தகவலை உங்கள் iPhone/iPad பயன்படுத்தக்கூடும். துல்லியமான இருப்பிடத்திற்கான அனுமதிகளை நீங்கள் இயக்கவில்லையென்றாலும் உள்ளூர் முடிவுகளை Google காட்டும், ஆனால் அவை நீங்கள் இருக்குமிடத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கக்கூடும்.

முக்கியம்: ஆப்ஸ் அல்லது உலாவியின் அனுமதிகளை நிர்வகிப்பதற்கு முன்பு iPhone/iPadல் இருப்பிடச் சேவைகள் இயக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். iPhone/iPadல் இருப்பிடச் சேவைகளை இயக்குவது/முடக்குவது எப்படி என அறிக.

இருப்பிட அனுமதிகளை நிர்வகித்தல்

இணையதளத்திற்கு

Chrome, Safari போன்ற இணைய உலாவியின் மூலம் இணையதளத்தைப் பார்வையிடும்போது அந்த உலாவிக்கும் google.com போன்று இருப்பிடத் தகவலைச் சார்ந்து இயங்கும் இணையதளங்களுக்கும் தனித்தனியாக இருப்பிட அனுமதிகளை இயக்கலாம்/முடக்கலாம்.

உங்கள் இருப்பிடத் தகவலுக்கான அணுகலை google.com போன்ற இணையதளத்திற்கு வழங்க விரும்பினால் உலாவி, இணையதளம் ஆகிய இரண்டிற்கும் இருப்பிட அனுமதியை இயக்கவும்.

உலாவிக்கு இருப்பிட அனுமதியை இயக்குதல்/முடக்குதல்

இருப்பிடத் தகவலை உலாவி பயன்படுத்தலாமா என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

  1. iPhone/iPadல், அமைப்புகள் Settings அதன் பிறகு தனியுரிமை அதன் பிறகு இருப்பிடச் சேவைகள் என்பதைத் தட்டவும்.
  2. Safari Websites, Chrome போன்ற உலாவி ஆப்ஸைத் தட்டவும்.
  3. உலாவி ஆப்ஸுக்கு இந்த இருப்பிட அணுகல் விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்: ஆப்ஸைப் பயன்படுத்தும்போது அனுமதி, அடுத்த முறை கேள் அல்லது ஒருபோதும் அனுமதிக்காதே.

இணையதளத்திற்கு இருப்பிட அனுமதியை இயக்குதல்/முடக்குதல்

உலாவியால் இருப்பிடத் தகவலைப் பயன்படுத்த முடியும் என்றால், அது google.com போன்ற குறிப்பிட்ட இணையதளங்களுக்கு இருப்பிடத் தகவலை அனுப்பலாமா வேண்டாமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

  1. iPhone/iPadல், Safariயைத் திறந்து google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள முகவரிப் பட்டியில் இருக்கும் இணையதள அமைப்புகள் Aa அல்லது பூட்டு Lock அதன் பிறகு இணையதள அமைப்புகள் அதன் பிறகு இருப்பிடம் என்பதைத் தட்டவும். வேறு சில உலாவிகளில் அமைப்புகள் மெனுவைச் சரிபார்க்க வேண்டியிருக்கலாம்.
  3. அனுமதி கேள், நிராகரி, அனுமதி ஆகிய விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தட்டவும்.

முக்கியம்: சில சமயங்களில் உங்கள் சாதனத்தின் தற்போதைய இருப்பிடத் தகவலைப் பெற, உலாவி அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம். தேடல் முடிவுகளை விரைவாக வழங்க, கடந்த முறை Googleளைப் பயன்படுத்தியபோது பெற்ற சாதனத்தின் இருப்பிடத் தகவலை google.com பயன்படுத்தக்கூடும். குக்கீயில் சேமிக்கப்படும் இந்த இருப்பிடத் தகவல் 6 மணிநேரத்திற்குப் பிறகு காலாவதியாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. Safariயில் குக்கீகளை நிர்வகிப்பது குறித்தோ Chromeமில் குக்கீகளை நிர்வகிப்பது குறித்தோ மேலும் அறிக.

ஆப்ஸிற்கு

Google ஆப்ஸ், Google Maps போன்ற ஆப்ஸைப் பயன்படுத்தித் தேடுகிறீர்கள் எனில் இருப்பிடத் தகவலை அந்த ஆப்ஸ் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை iPhone/iPadன் இருப்பிடச் சேவைகளுக்கான அமைப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

அருகிலுள்ள இன்னும் சிறப்பான தேடல் முடிவுகளைப் பெற விரும்பினால் நீங்கள் பயன்படுத்துகின்ற ஆப்ஸிற்கு இருப்பிட அனுமதியை வழங்கவும்.

  1. iPhone/iPadல் அமைப்புகள் Settings அதன் பிறகு தனியுரிமை அதன் பிறகு இருப்பிடச் சேவைகள் என்பதைத் தட்டவும்.
  2. Google ஆப்ஸ் Google தேடல் அல்லது Google Maps Maps போன்று தேடலை மேற்கொள்ள நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸைத் தட்டவும்.
  3. ஆப்ஸுக்கு இந்த இருப்பிட அணுகல் விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்: எப்போதும் அனுமதி, ஆப்ஸைப் பயன்படுத்தும்போது அனுமதி, அடுத்த முறை கேள் அல்லது ஒருபோதும் அனுமதிக்காதே.

தேடும்போது உங்கள் இருப்பிடத்தை Google தீர்மானிக்கும் விதம்

Maps, Search, Google Assistant போன்றவற்றைப் பயன்படுத்தி Googleளில் தேடும்போது, கிடைக்கக்கூடிய பல தகவல்களின் அடிப்படையில் உங்களின் தற்போதைய இருப்பிடம் கணிக்கப்படும்.

கவனத்திற்கு: சாதனத்தின் அனுமதிகள், கணக்கு விருப்பத்தேர்வுகள், பிற அமைப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த இருப்பிட மூலங்களில் பெரும்பாலானவற்றைக் கட்டுப்படுத்த முடியும். உங்கள் தனியுரிமையையும் இருப்பிட விவரத்தையும் உங்கள் தேர்வுகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து கீழே மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

தேடும்போது உங்கள் இருப்பிடத்தைத் தீர்மானிப்பதற்கான மூலங்கள்

Googleளில் தேடும்போது, உங்கள் இருப்பிடம் எப்படிக் கணிக்கப்பட்டது என்பதை முடிவுகள் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் பார்க்கலாம்.

சாதனத்தின் இருப்பிடம்

மொபைல்கள், கம்ப்யூட்டர்கள், வாட்ச்சுகள், அணியக்கூடிய சாதனங்கள் போன்ற பல சாதனங்கள் அவற்றின் துல்லியமான இருப்பிடத்தைக் காட்டும். Google Maps போன்ற ஆப்ஸில் வழிகளைக் காட்டுவதற்கோ அருகிலுள்ளவை தொடர்பான பயனுள்ள தேடல் முடிவுகளைப் பெற உதவுவதற்கோ இது போன்ற துல்லியமான இருப்பிட விவரம் பயன்படுகிறது. உதாரணமாக, உங்களின் துல்லியமான இருப்பிடத்தைச் சார்ந்துள்ள காஃபி ஷாப், பேருந்து நிறுத்தம், ATM போன்ற சில தேடல்கள் பொதுவாக இருப்பிட அனுமதிகள் இயக்கப்பட்டிருக்கும்போது மேலும் உதவிகரமான முடிவுகளை வழங்கும்.

மேலே உள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் தேடும்போது இருப்பிட விவரத்தைப் பயன்படுத்த வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்ய உங்கள் சாதன அடிப்படையிலான இருப்பிட அமைப்புகளை நிர்வகிக்கலாம். உங்கள் சாதனத்தைப் பொறுத்து, வழக்கம்போல் ஒவ்வொரு ஆப்ஸிற்கும் இணையதளத்திற்கும் இருப்பிடத்தை இயக்கலாம் முடக்கலாம், மேலும் உங்கள் சாதனத்திற்கே இருப்பிடத்தை இயக்கலாம் முடக்கலாம்.

Nest Audio, Nest Hub போன்ற ஸ்மார்ட் வீட்டுச் சாதனத்தைப் பயன்படுத்தினால் சாதனத்தின் இருப்பிடத்தை Google Home ஆப்ஸில் அமைக்கலாம்.

தேடல் முடிவுகளைப் பெற உங்கள் சாதன இருப்பிடம் பயன்படுத்தப்பட்டிருந்தால் தேடல் முடிவுகள் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள இருப்பிடத் தகவலில், உங்கள் சாதனத்திலிருந்து என்று காட்டப்படும்.

முக்கியம்: சில சமயங்களில் உங்கள் சாதனத்தின் தற்போதைய இருப்பிடத் தகவலைப் பெற, உலாவி அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம். தேடல் முடிவுகளை விரைவாக வழங்க கடந்த முறை Googleளைப் பயன்படுத்தியபோது பெற்ற, சாதனத்தின் இருப்பிடத் தகவலை google.com பயன்படுத்தக்கூடும். குக்கீயில் சேமிக்கப்பட்ட இந்த இருப்பிடத் தகவல் 6 மணிநேரத்திற்குப் பிறகு காலாவதியாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குக்கீகளை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.

உங்கள் Google கணக்கில் உள்ள வீடு அல்லது பணியிடத்தின் முகவரி

உங்கள் வீடு அல்லது பணியிட முகவரிகளை அமைத்தால், அவற்றில் ஏதேனும் ஒரு இடத்தில் நீங்கள் இருக்கும்போது உங்கள் இருப்பிடத்தைக் கணிக்க அவை பயன்படுத்தப்படக்கூடும்.

உங்கள் Google கணக்கில் வீடு மற்றும் பணியிட முகவரிகளை மாற்றிக்கொள்ளலாம்.

தேடல் முடிவுகளைப் பெறுவதற்காக உங்கள் வீடு அல்லது பணியிடத்தின் இருப்பிட விவரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், தேடல் முடிவுகள் பக்கத்தின் கீழே உள்ள இருப்பிடத் தகவல்களில் ‘உங்கள் இடங்கள்’ அடிப்படையிலானது (வீடு) அல்லது (பணியிடம்) எனக் காட்டப்படும்.

Google தளங்களிலும் ஆப்ஸிலும் உங்களின் முந்தைய செயல்பாடு

Google கணக்கில் உள்நுழைந்து ’இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை’ இயக்கியிருந்தால் Google தளங்கள், ஆப்ஸ், சேவைகள் ஆகியவற்றில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படக்கூடும். உங்கள் செயல்பாட்டிலிருந்து பெறப்படும் சில தகவல்கள் அச்செயலை மேற்கொள்ளும்போது நீங்கள் இருந்த பொதுவான பகுதியின் விவரத்தைக் கொண்டிருக்கலாம். உங்கள் செயல்பாடு மூலம் துல்லியமான இருப்பிட விவரம் தெரியவந்தால் உங்கள் செயல்பாட்டில் அது சேமிக்கப்படலாம்.

உங்கள் தேடலுடன் தொடர்புடைய இருப்பிடத்தைக் கணிக்க, நீங்கள் முன்பு தேடிய பகுதிகள் சில சமயங்களில் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, கோடம்பாக்கத்தில் உள்ள காஃபி ஷாப்கள் எனத் தேடிவிட்டு சலூன் கடைகள் எனத் தேடினால் கோடம்பாக்கத்தில் உள்ள சலூன் கடைகளை Google காட்டக்கூடும்.

myactivity.google.com தளத்திற்குச் சென்று உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைப் பார்க்கலாம் கட்டுப்படுத்தலாம். செயல்பாட்டை உங்கள் கணக்கில் எப்படிப் பார்ப்பது & கட்டுப்படுத்துவது என்பதை அறிக.

Google கணக்கில் உள்நுழைந்திருக்கவில்லை என்றால் உங்களுக்கு மிகவும் தொடர்புடைய முடிவுகளையும் பரிந்துரைகளையும் வழங்குவதற்கு உதவும் வகையில், நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் மேற்கொண்ட முந்தைய தேடல்களின் சில இருப்பிடத் தகவல்களை Google சேமிக்கக்கூடும். Searchசைப் பிரத்தியேகமாக்குதல் அமைப்பை முடக்கியிருந்தால், உங்கள் இருப்பிடத்தை மதிப்பிட முந்தைய தேடல்களை Google பயன்படுத்தாது. மறைநிலைப் பயன்முறையில் தேடுவதும் உலாவுவதும் எப்படி என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல் முடிவுகளைப் பெற உங்களின் முந்தைய செயல்பாடு பயன்படுத்தப்பட்டிருந்தால் தேடல் முடிவுகளின் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள இருப்பிடத் தகவல்கள் "முந்தைய செயல்பாட்டின் அடிப்படையிலானது" என்று காட்டப்படும்.

இணைய இணைப்பின் IP முகவரி

இணைய முகவரி எனவும் அழைக்கப்படும் IP முகவரி உங்கள் இணையச் சேவை வழங்குநரால் உங்கள் சாதனத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இணையத்தைப் பயன்படுத்துவதற்கு இது தேவை. உங்கள் சாதனத்திற்கும் நீங்கள் பயன்படுத்தும் இணையதளங்கள் & சேவைகளுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த IP முகவரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

IP முகவரிகள் தோராயமாகப் புவியியலை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது google.com உட்பட நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இணையதளமும் உங்கள் பொதுவான பகுதி குறித்த சில தகவல்களைப் பெறக்கூடும்.

தேடலுக்காக உங்களின் தற்போதைய பொதுவான பகுதியைக் கணக்கிடுவதற்கு உங்கள் IP முகவரி பயன்படுத்தப்பட்டிருந்தால், தேடல் முடிவுகள் பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள இருப்பிடத் தகவல்கள் உங்கள் இணைய முகவரியிலிருந்து பெறப்பட்டது எனக் காட்டும்.

முக்கியம்: IP முகவரிகள் இல்லாமல் இணையம் வேலை செய்யாது. தளங்கள், ஆப்ஸ் அல்லது Google போன்ற சேவைகளைப் பயன்படுத்தும்போது அவை பொதுவாகவே உங்கள் இருப்பிடம் குறித்த சில தகவல்களைக் கண்டறியும்.

இருப்பிடக் கட்டுப்பாடுகளும் உங்கள் தனியுரிமையும்

Googleளில் தேடும்போது நீங்கள் எந்தப் பகுதியிலிருந்து தேடுகிறீர்களோ அந்தப் பொதுவான பகுதியை Google எப்போதும் கணிக்கும். நீங்கள் இருக்கும் பொதுவான பகுதியைக் கண்டறிவதன் மூலம், தொடர்புடைய முடிவுகளை Googleளால் வழங்க முடியும். மேலும் புதிய நகரத்திலிருந்து கணக்கில் உள்நுழைவது போன்ற வழக்கத்திற்கு மாறான செயல்பாட்டைக் கண்டறிந்து உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

பொதுவான பகுதி 3 சதுர கிலோமீட்டரை விடப் பெரிதாகவும் குறைந்தபட்சம் 1000 பயனர்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்பதால் பொதுவான பகுதியில் நீங்கள் மேற்கொள்ளும் தேடலால் உங்களை அடையாளம் காண முடியாது. இது உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க உதவுகிறது. அதாவது நகரங்களுக்கு வெளியே உள்ள பொதுவான பகுதி வழக்கமாக 3 சதுர கிலோமீட்டர்களை விட மிகப் பெரிதாக இருக்கும். கணிக்கப்பட்ட பொதுவான பகுதி என்பது இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள இருப்பிடத் தகவல்களில் இருந்து கண்டறியப்படுகிறது.

சாதனத்தில் google.com தளத்திற்கோ Google ஆப்ஸிற்கோ இருப்பிட அனுமதிகளை நீங்கள் வழங்கினால் தேடும்போது சிறந்த தேடல் முடிவுகளைக் காட்டுவதற்காக உங்கள் துல்லியமான இருப்பிடத்தை Google பயன்படுத்தும். துல்லியமான இருப்பிடம் என்பது நீங்கள் இருக்குமிடத்தின் (எ.கா. ஒரு குறிப்பிட்ட முகவரி) துல்லியமான விவரமாகும்.

வீடு அல்லது பணியிட முகவரியை நீங்கள் அமைத்திருக்கும் பட்சத்தில் வீட்டிலோ பணியிடத்திலோ நீங்கள் இருப்பதாக Google கண்டறிந்தால் துல்லியமான முகவரியை Google உங்கள் தேடலுக்குப் பயன்படுத்தும்.

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4557283110536528498
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false