உங்கள் Android கேமரா அல்லது மைக்ரோஃபோன் இயக்கப்பட்டுள்ளதா/முடக்கப்பட்டுள்ளதா எனத் தெரிந்துகொள்ளுதல்

ஓர் ஆப்ஸ் உங்கள் கேமராவையோ மைக்ரோஃபோனையோ பயன்படுத்தும்போது, உங்கள் Android மொபைலில் அதுகுறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள். உங்கள் மொபைலை எந்தெந்த ஆப்ஸ் அணுகலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். 

முக்கியம்: இவற்றில் சில படிகள் Android 12 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செயல்படும். எங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படியென அறிக

உங்கள் கேமராவும் மைக்ரோஃபோனும் இயக்கப்பட்டுள்ளனவா எனத் தெரிந்துகொள்ளுதல்:

  1. ஆப்ஸ் உங்கள் கேமரா/மைக்கைப் பயன்படுத்தும்போது, உங்கள் திரையின் மேல் வலது மூலையில் பச்சை நிற இண்டிகேட்டர் காட்டப்படும்.
  2. கீழே ஸ்வைப் செய்து இண்டிகேட்டரின் மீது தட்டவும்.
    • உங்கள் கேமரா/மைக்ரோஃபோனை எந்த ஆப்ஸ் அல்லது சேவை பயன்படுத்துகிறது என்பதைப் பார்க்க ஒருமுறை தட்டவும்.
    • அனுமதிகளை நிர்வகிக்க மீண்டும் தட்டவும்.

கேமரா/மைக்கை இயக்குதல் அல்லது முடக்குதல்

கேமராவையும் மைக்ரோஃபோனையும் இயக்க அல்லது முடக்க, கீழே ஸ்வைப் செய்து கேமரா/மைக் கட்டுப்பாட்டைத் தட்டவும்.

உதவிக்குறிப்புகள்:

  • கீழே ஸ்வைப் செய்வது சில சாதனங்களில் வேலை செய்யாமல் போகக்கூடும்.
  • கேமரா/மைக்ரோஃபோனை அணுகுவதில் உங்களுக்குச் சிக்கல்கள் இருந்தால், நீங்கள் அவற்றைத் தடை நீக்கிவிட்டதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

விரைவு அமைப்புகளில் உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் நிர்வகித்தல்

விரைவு அமைப்புகள் கட்டத்தில் இருந்தும் கேமரா மற்றும் மைக்ரோஃபோன் கட்டுப்பாடுகளை நீங்கள் அணுகலாம்.

  1. உங்கள் திரையின் மேல்பகுதியில் இருந்து இரண்டு முறை கீழே ஸ்வைப் செய்யவும்.
  2. கேமரா மற்றும் மைக் அணுகலை முடக்க, கேமரா/மைக்ரோஃபோன் கட்டத்தைத் தட்டவும்.
    • உங்கள் விரைவு அமைப்புகள் கட்டம் இல்லையெனில், விரைவு அமைப்புகளின் கீழ்ப்பகுதியில் 'மாற்று மாற்றுவதற்கான ஐகான்' அல்லது 'சேர் ' என்பதைத் தட்டவும்.
    • கட்டத்தைத் தொட்டு இழுத்து உங்கள் விரைவு அமைப்புகளில் சேர்க்கவும்.

தொடர்புடைய தகவல்கள்

உங்கள் Android மொபைலில் ஆப்ஸ் அனுமதிகளை மாற்றுதல்

உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்ளுதல் & புதுப்பித்தல்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16589765863519325788
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false