ஆடியோ சாதன மாற்றத்தை ஆதரிக்கும் ஹெட்ஃபோன்களைப் பல Android சாதனங்களுடன் இணைக்கலாம். 'ஆடியோ சாதன மாற்றம்' அம்சம் இயக்கப்பட்டிருந்தால் ஹெட்ஃபோன்களை நீங்கள் பயன்படுத்துவதற்கேற்ப சாதனங்களுக்கிடையே உங்கள் ஹெட்ஃபோன்கள் தடையின்றி மாறும். ஆடியோ மாறும்போது Android சாதனத்தில் உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.
தேவைகள்
- Android 8 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் Google Play சேவைகளைக் கொண்ட சாதனங்களில் 'ஆடியோ சாதன மாற்றம்' அம்சம் ஆதரிக்கப்படுகிறது. .
- ஆடியோ சாதன மாற்றம் இயக்கப்பட்ட ஹெட்ஃபோன்களை Android மொபைல், டேப்லெட் போன்ற ஒவ்வொரு ஆடியோ சாதனத்திலும் துரித இணைப்பைப் பயன்படுத்தி ஒரே Google கணக்கில் இணைத்திருக்க வேண்டும். .
'ஆடியோ சாதன மாற்றம்' அம்சத்தை இயக்குதலும் முடக்குதலும்
'ஆடியோ சாதன மாற்றம்' அம்சம் இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும்.
முக்கியம்: ஆடியோ சாதன மாற்றத்தைப் பயன்படுத்த, ஒவ்வொரு சாதனத்திலும் ஒரே Google கணக்கில் உள்நுழைந்து ஒவ்வொரு சாதனத்தையும் உங்கள் கணக்குடன் ஒத்திசைக்க வேண்டும்.
- Android சாதனத்தில், அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
- இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் என்பதைத் தட்டவும்.
- சாதனத்திற்கு அடுத்துள்ள, அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
- ஆடியோ சாதன மாற்றம் என்பதைத் தட்டவும்.
- இந்த அம்சத்தை இயக்க/முடக்க ஆடியோ சாதன மாற்றத்தைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.