உங்கள் Android சாதனத்தில் 'ஆடியோ சாதன மாற்றம்' அம்சத்தை அமைத்தல்

ஆடியோ சாதன மாற்றத்தை ஆதரிக்கும் ஹெட்ஃபோன்களைப் பல Android சாதனங்களுடன் இணைக்கலாம். 'ஆடியோ சாதன மாற்றம்' அம்சம் இயக்கப்பட்டிருந்தால் ஹெட்ஃபோன்களை நீங்கள் பயன்படுத்துவதற்கேற்ப சாதனங்களுக்கிடையே உங்கள் ஹெட்ஃபோன்கள் தடையின்றி மாறும். ஆடியோ மாறும்போது Android சாதனத்தில் உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.

தேவைகள்

  • Android 8 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் Google Play சேவைகளைக் கொண்ட சாதனங்களில் 'ஆடியோ சாதன மாற்றம்' அம்சம் ஆதரிக்கப்படுகிறது. .
  • ஆடியோ சாதன மாற்றம் இயக்கப்பட்ட ஹெட்ஃபோன்களை Android மொபைல், டேப்லெட் போன்ற ஒவ்வொரு ஆடியோ சாதனத்திலும் துரித இணைப்பைப் பயன்படுத்தி ஒரே Google கணக்கில் இணைத்திருக்க வேண்டும். .

'ஆடியோ சாதன மாற்றம்' அம்சத்தை இயக்குதலும் முடக்குதலும்

'ஆடியோ சாதன மாற்றம்' அம்சம் இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும்.

முக்கியம்: ஆடியோ சாதன மாற்றத்தைப் பயன்படுத்த, ஒவ்வொரு சாதனத்திலும் ஒரே Google கணக்கில் உள்நுழைந்து ஒவ்வொரு சாதனத்தையும் உங்கள் கணக்குடன் ஒத்திசைக்க வேண்டும்.

  1. Android சாதனத்தில், அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் என்பதைத் தட்டவும்.
  3. சாதனத்திற்கு அடுத்துள்ள, அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. ஆடியோ சாதன மாற்றம் என்பதைத் தட்டவும்.
  5. இந்த அம்சத்தை இயக்க/முடக்க ஆடியோ சாதன மாற்றத்தைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1276616237356238758
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false