உங்கள் சாதனங்களில் பன்முனை ஹெட்ஃபோன்களை அமைத்தல்

பன்முனை ஹெட்ஃபோன்கள் மூலம் நீங்கள் ஒரே சமயத்தில் 2 புளூடூத் சாதனங்களுடன் இணைத்து அவற்றில் எந்த ஆடியோ சாதனத்தைப் பிளே செய்ய வேண்டும் என்பதையும் தேர்வுசெய்யலாம். எனவே, நீங்கள் ஒரு சாதனத்தில் மீடியாவைப் பிளே செய்துகொண்டிருந்தால், இணைக்கப்பட்டுள்ள மற்றொரு சாதனத்தில் பெறப்படும் அழைப்புகளுக்கு உங்கள் ஹெட்ஃபோன்களால் மாற முடியும்.

தேவைகள்

  • புளூடூத் மூலம் 2 சாதனங்களுடன் இணையக்கூடிய ஹெட்ஃபோன்கள்.
  • Google Play சேவைகளுடன் கூடிய Android 8 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் இயங்கும் சாதனங்கள்.

பன்முனைப் பயன்முறையை இயக்குதல்

  1. உங்கள் Android சாதனத்தில், அமைப்புகள் அதன் பிறகு இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் என்பதைத் தட்டவும்.
  2. உங்கள் சாதனத்திற்கு அடுத்துள்ள 'அமைப்புகள் ' என்பதைத் தட்டவும்.
  3. பன்முனை அதன் பிறகு பன்முனைப் பயன்முறையைப் பயன்படுத்து என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் இணைக்க விரும்பும் 2 ஆடியோ சாதனங்களுடன் உங்கள் ஹெட்ஃபோன்களை இணைக்கவும்.
    • உங்கள் ஹெட்ஃபோன்கள் இணைக்கப்பட்டிருப்பதை ஆடியோ சாதனத்திலுள்ள புளூடூத் அமைப்புகளில் உறுதிசெய்துகொள்ளவும்.

உங்கள் ஹெட்ஃபோன்களை இரண்டு ஆடியோ சாதனங்களுடன் இணைத்தல்

முக்கியம்: நீங்கள் இணைக்க விரும்பும் 2 ஆடியோ சாதனங்களுடன் இதற்கு முன்பே உங்கள் ஹெட்ஃபோன்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் ஹெட்ஃபோன்கள் இணைக்கப்பட்ட பிறகு 2 சாதனங்களுக்கும் இடையே அவற்றால் தானாக மாற முடியும்.

முதல் முறையாக உங்கள் சாதனங்களை இணைக்க:

  1. முதல் சாதனத்தின் புளூடூத் அமைப்புகளுக்குச் சென்று அதை உங்கள் ஹெட்ஃபோன்களுடன் இணைக்கவும்.
  2. இரண்டாம் சாதனத்தின் புளூடூத் அமைப்புகளுக்குச் சென்று அதை உங்கள் ஹெட்ஃபோன்களுடன் இணைக்கவும்.

மற்றொரு சாதனத்திலுள்ள மீடியாவிற்கு மாறுதல்

உங்கள் ஹெட்ஃபோன்களில் ஆடியோ சாதனங்களுக்கு இடையே மாறும்போது, முதல் சாதனத்தில் மீடியா/ஆடியோவை நிறுத்துவிட்டு இரண்டாவது சாதனத்தில் மீடியா/ஆடியோவைத் தொடங்க வேண்டும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3273623143574670802
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false