SD கார்டைப் பயன்படுத்தத் தொடங்குதல்

உங்கள் Android சாதனத்தில் SD கார்டை அமைக்கத் தொடங்கும்போது, போர்டபிள் சேமிப்பகமாகவோ அகச் சேமிப்பகமாகவோ அதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

போர்டபிள் சேமிப்பகத்திற்காக SD கார்டை நீங்கள் ஃபார்மேட் செய்யும்போது:

  • படங்கள், வீடியோக்கள் போன்ற ஃபைல்களை SD கார்டில் சேமிக்கலாம்.
  • SD கார்டில் ஆப்ஸை நிறுவ முடியாது.
  • SD கார்டைச் சாதனங்களுக்கிடையே மாற்றிக்கொள்ளலாம்.

அகச் சேமிப்பகத்திற்காக SD கார்டை நீங்கள் ஃபார்மேட் செய்யும்போது:

  • படங்கள், வீடியோக்கள் போன்ற ஃபைல்களை SD கார்டில் ஏற்றலாம்.
  • SD கார்டில் ஆப்ஸை நிறுவலாம்.
  • SD கார்டைச் சாதனங்களுக்கிடையே மாற்றிக்கொள்ள முடியாது.
  • ஃபைல்களைச் சேமிக்க உங்கள் சாதனத்தின் சேமிப்பகத்துடன் சேர்த்து SD கார்டையும் பயன்படுத்தலாம்.

புதிய SD கார்டை அமைத்தல்

முக்கியம்: உங்கள் SD கார்டை ஃபார்மேட் செய்தால் அதிலுள்ள தரவு நிரந்தரமாக நீக்கப்படும். SD கார்டை ஃபார்மேட் செய்வதற்கு முன்பு உங்கள் ஃபைல்களைக் காப்புப் பிரதி எடுத்துக்கொள்ளுங்கள்.

  1. உங்கள் சாதனத்தில், திரையின் மேலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
  2. SD கார்டு கண்டறியப்பட்டது எனும் அறிவிப்பைத் தட்டவும்.
  3. பின்வரும் சேமிப்பகங்களாக உங்கள் SD கார்டை அமைக்க:
    • போர்டபிள் சேமிப்பகத்திற்கு, ஃபார்மேட் செய்தல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • அடாப்டபிள் சேமிப்பகத்திற்கு, வேறு வழியில் ஃபார்மேட் செய்தல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் SD கார்டு ஃபார்மேட் செய்யப்பட்டதும், உள்ளடக்கத்தை நகர்த்துவதற்கோ உள்ளடக்கத்தைப் பிறகு நகர்த்துவதற்கோ நீங்கள் தேர்வுசெய்துகொள்ளலாம்.

போர்டபிள் சேமிப்பகத்திலிருந்து அடாப்டபிள் சேமிப்பகத்திற்கு மாற்றுவதற்காக உங்கள் SD கார்டை மீண்டும் ஃபார்மேட் செய்தல்

முக்கியம்: உங்கள் SD கார்டை ஃபார்மேட் செய்தால் அதிலுள்ள தரவு நிரந்தரமாக நீக்கப்படும். SD கார்டை ஃபார்மேட் செய்வதற்கு முன்பு உங்கள் ஃபைல்களைக் காப்புப் பிரதி எடுத்துக்கொள்ளுங்கள்.

  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. சேமிப்பகம் அதன் பிறகு SD கார்டு என்பதைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில், மெனு அதன் பிறகு சேமிப்பக அமைப்புகள் அதன் பிறகு ஃபார்மேட் செய்தல் அதன் பிறகு வேறு வழியில் ஃபார்மேட் செய்தல் அதன் பிறகு ஃபார்மேட் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அடாப்டபிள் சேமிப்பகத்திலிருந்து போர்டபிள் சேமிப்பகத்திற்கு மாற்றுவதற்காக உங்கள் SD கார்டை மீண்டும் ஃபார்மேட் செய்தல்

முக்கியம்: உங்கள் SD கார்டை ஃபார்மேட் செய்தால் அதிலுள்ள தரவு நிரந்தரமாக நீக்கப்படும். SD கார்டை ஃபார்மேட் செய்வதற்கு முன்பு உங்கள் ஃபைல்களைக் காப்புப் பிரதி எடுத்துக்கொள்ளுங்கள்.

  1. உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. சேமிப்பகம் அதன் பிறகு SD கார்டு என்பதைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில், மெனு அதன் பிறகு ஃபார்மேட் செய்தல் அதன் பிறகு கார்டை ஃபார்மேட் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8898428286755807563
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false