உங்கள் Android சாதனத்தில் SD கார்டை அமைக்கத் தொடங்கும்போது, போர்டபிள் சேமிப்பகமாகவோ அகச் சேமிப்பகமாகவோ அதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
போர்டபிள் சேமிப்பகத்திற்காக SD கார்டை நீங்கள் ஃபார்மேட் செய்யும்போது:
- படங்கள், வீடியோக்கள் போன்ற ஃபைல்களை SD கார்டில் சேமிக்கலாம்.
- SD கார்டில் ஆப்ஸை நிறுவ முடியாது.
- SD கார்டைச் சாதனங்களுக்கிடையே மாற்றிக்கொள்ளலாம்.
அகச் சேமிப்பகத்திற்காக SD கார்டை நீங்கள் ஃபார்மேட் செய்யும்போது:
- படங்கள், வீடியோக்கள் போன்ற ஃபைல்களை SD கார்டில் ஏற்றலாம்.
- SD கார்டில் ஆப்ஸை நிறுவலாம்.
- SD கார்டைச் சாதனங்களுக்கிடையே மாற்றிக்கொள்ள முடியாது.
- ஃபைல்களைச் சேமிக்க உங்கள் சாதனத்தின் சேமிப்பகத்துடன் சேர்த்து SD கார்டையும் பயன்படுத்தலாம்.
புதிய SD கார்டை அமைத்தல்
முக்கியம்: உங்கள் SD கார்டை ஃபார்மேட் செய்தால் அதிலுள்ள தரவு நிரந்தரமாக நீக்கப்படும். SD கார்டை ஃபார்மேட் செய்வதற்கு முன்பு உங்கள் ஃபைல்களைக் காப்புப் பிரதி எடுத்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் சாதனத்தில், திரையின் மேலிருந்து கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
- SD கார்டு கண்டறியப்பட்டது எனும் அறிவிப்பைத் தட்டவும்.
- பின்வரும் சேமிப்பகங்களாக உங்கள் SD கார்டை அமைக்க:
- போர்டபிள் சேமிப்பகத்திற்கு, ஃபார்மேட் செய்தல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடாப்டபிள் சேமிப்பகத்திற்கு, வேறு வழியில் ஃபார்மேட் செய்தல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் SD கார்டு ஃபார்மேட் செய்யப்பட்டதும், உள்ளடக்கத்தை நகர்த்துவதற்கோ உள்ளடக்கத்தைப் பிறகு நகர்த்துவதற்கோ நீங்கள் தேர்வுசெய்துகொள்ளலாம்.
போர்டபிள் சேமிப்பகத்திலிருந்து அடாப்டபிள் சேமிப்பகத்திற்கு மாற்றுவதற்காக உங்கள் SD கார்டை மீண்டும் ஃபார்மேட் செய்தல்
முக்கியம்: உங்கள் SD கார்டை ஃபார்மேட் செய்தால் அதிலுள்ள தரவு நிரந்தரமாக நீக்கப்படும். SD கார்டை ஃபார்மேட் செய்வதற்கு முன்பு உங்கள் ஃபைல்களைக் காப்புப் பிரதி எடுத்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
- சேமிப்பகம் SD கார்டு என்பதைத் தட்டவும்.
- மேல் வலதுபுறத்தில், மெனு சேமிப்பக அமைப்புகள் ஃபார்மேட் செய்தல் வேறு வழியில் ஃபார்மேட் செய்தல் ஃபார்மேட் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அடாப்டபிள் சேமிப்பகத்திலிருந்து போர்டபிள் சேமிப்பகத்திற்கு மாற்றுவதற்காக உங்கள் SD கார்டை மீண்டும் ஃபார்மேட் செய்தல்
முக்கியம்: உங்கள் SD கார்டை ஃபார்மேட் செய்தால் அதிலுள்ள தரவு நிரந்தரமாக நீக்கப்படும். SD கார்டை ஃபார்மேட் செய்வதற்கு முன்பு உங்கள் ஃபைல்களைக் காப்புப் பிரதி எடுத்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் மொபைலின் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
- சேமிப்பகம் SD கார்டு என்பதைத் தட்டவும்.
- மேல் வலதுபுறத்தில், மெனு ஃபார்மேட் செய்தல் கார்டை ஃபார்மேட் செய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.