உங்களுக்குச் சொந்தமில்லாத சாதனத்தில் உள்நுழைதல்

உங்களுக்குச் சொந்தமில்லாத கம்ப்யூட்டர், மொபைல், டேப்லெட் ஆகியவற்றில் தற்காலிகமாக உள்நுழையும்போது மறைநிலை உலாவல் சாளரத்தைப் பயன்படுத்தவும்.

உதாரணமாக:

  • லைப்ரரி, இண்டர்நெட் கஃபே போன்றவற்றில் உள்ள, பலர் பயன்படுத்தக்கூடிய பொதுவான கம்ப்யூட்டர்
  • உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் இருந்து இரவல் வாங்கிய சாதனம்

உங்கள் நம்பிக்கைக்குரியவர்களுடன் நீங்கள் ஒரு சாதனத்தையோ உலாவியையோ பகிர்ந்துகொண்டால், அதைப் பலர் பயன்படுத்தத்தக்க வகையில் அமைக்கலாம். Chrome உலாவியைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தனிப்பட்ட முறையில் உலாவுதல்

பிறர் பயன்படுத்தும் சாதனத்தில் நீங்கள் உள்நுழைந்தால், கீழே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். இதனால் பிறர்:

  • உங்கள் Google கணக்கைப் பயன்படுத்த முடியாது
  • நீங்கள் தேடியவை என்ன என்பதையும், நீங்கள் பார்த்த தளங்கள் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள முடியாது
  • உங்கள் கணக்கில் உள்நுழைந்துள்ளீர்களா என்பதைப் பார்க்க முடியாது

Chromeமில்

  1. கம்ப்யூட்டரில் Chrome உலாவியைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவர ஐகானை சுயவிவரம் கிளிக் செய்யவும்.
  3. கெஸ்ட் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. www.google.com போன்ற Google சேவைக்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  5. இணையத்தைப் பயன்படுத்திய பிறகு "கெஸ்ட் பயன்முறை" உலாவிச் சாளரத்தை மூடவும். இதுவரை இணையத்தில் பார்த்தவை, குக்கீகள், தளத் தரவு ஆகியவை நீக்கப்படும்.

Chromeமில் கெஸ்ட் பயன்முறையைப் பயன்படுத்தி உள்நுழையும்போது:

  • நீங்கள் பார்க்கும் தளங்கள், உங்கள் தேடல்கள் மற்றும் பிற செயல்பாடுகள் உலாவிப் பதிவில் சேமிக்கப்படாது.
  • உங்கள் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் பயன்படுத்தப்படும் என்பதால், அதே செயல்பாடுகள் வழக்கம் போல உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும்.
  • நீங்கள் கெஸ்ட் பயன்முறையை விட்டு வெளியேறியதும் குக்கீகள் நீக்கப்படும்.

Chromeமில் கெஸ்ட் பயன்முறையைப் பயன்படுத்துவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Chromebookகில்: ஒரு கெஸ்ட்டாக Chromebookகைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிற உலாவிகளில்

கவனத்திற்கு: மறைநிலையில் உலாவுவது உலாவிகளைப் பொறுத்து மாறுபடலாம். மறைநிலை உலாவலைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றும்போது அதுகுறித்த விவரங்களைப் படித்துப் பார்க்கவும்.

  1. கம்ப்யூட்டரில் Safari போன்ற உலாவியைத் திறக்கவும்.
  2. மறைநிலைச் சாளரத்தைத் திறக்கவும். இதை எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்ள உங்கள் உலாவியைத் தேர்ந்தெடுக்கவும்:
  3. www.google.com போன்ற Google சேவைக்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  4. இணையத்தைப் பயன்படுத்திய பிறகு, மறைநிலைச் சாளரங்கள் அனைத்தையும் மூடவும் அல்லது அவற்றிலிருந்து வெளியேறவும். கணக்கிலிருந்து வெளியேற:
    1. www.google.com போன்ற Google சேவைக்குச் செல்லவும்.
    2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம், பெயரின் முதலெழுத்து அல்லது மின்னஞ்சல் முகவரியைக் கிளிக் செய்யவும்.
    3. வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.

தனிப்பட்ட முறையில் உலாவ முடியவில்லை என்றால்

  1. Chrome போன்ற உலாவியைத் திறக்கவும்.
  2. உள்நுழையும் முன்பும் வெளியேறிய பின்பும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13270982811599265345
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false