வயது வரம்புகளைப் பூர்த்திசெய்ய உங்கள் கணக்கில் மாற்றம் செய்தல்

உங்கள் கணக்கை நிர்வகிக்க உங்கள் கணக்கு இணைக்கப்பட்டுள்ள நாட்டிற்கான குறைந்தபட்ச வயது வரம்பை நீங்கள் அடைந்திருக்க வேண்டும்.

கணக்கை நிர்வகிப்பதற்கான வயதை நீங்கள் அடையவில்லை என்பது எங்களுக்குத் தெரியவந்தால்:

  • உங்கள் கணக்கிற்குக் கண்காணிப்பு அம்சத்தை அமைக்க அல்லது கணக்கை நிர்வகிப்பதற்கான வயது உள்ளதைச் சரிபார்க்க 14 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். இந்தச் சலுகைக் காலத்தில் உங்கள் கணக்கில் உள்நுழையலாம் வழக்கம்போல் பயன்படுத்தலாம்.
    • உங்களிடம் பள்ளி, பணி அல்லது பிற நிறுவனக் கணக்கு இருந்தால் பெற்றோர் கண்காணிப்பு அம்சத்தை அமைக்க அது தகுதிபெறாமல் போகக்கூடும். இந்தச் சூழ்நிலையில் உங்கள் கணக்கு உடனடியாக முடக்கப்படும். ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.
  • 14 நாட்களுக்குள் கண்காணிப்பு அம்சத்தை அமைக்கவில்லை என்றாலோ உங்கள் கணக்கை நிர்வகிப்பதற்கான வயது உள்ளது என்பதைச் சரிபார்க்கவில்லை என்றாலோ உங்கள் கணக்கு முடக்கப்பட்டு 30 நாட்களுக்குப் பிறகு கணக்கு விவரங்கள் நீக்கப்படும்.
முக்கியம்: உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருந்தால் நீங்கள் வெளியிட்ட உள்ளடக்கம் மறைக்கப்படும். உதாரணத்திற்கு உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருந்தால் நீங்கள் உருவாக்கிய YouTube வீடியோக்கள் காட்டப்படாது. உங்கள் கணக்கை மீண்டும் இயக்கினால் அந்த உள்ளடக்கம் காட்டப்படுவதற்குப் பல நாட்கள் வரை ஆகலாம்.

உங்கள் கணக்கிற்குக் கண்காணிப்பு அம்சத்தை அமைத்தல்

உங்கள் கணக்கை நிர்வகிப்பதற்கான வயதை நீங்கள் எட்டவில்லை எனில் உங்கள் பெற்றோர் அவர்களது Google கணக்கைப் பயன்படுத்திக் கண்காணிப்பு அம்சத்தை அமைக்கலாம். இதன் மூலம் உங்கள் கணக்கை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். பிறந்த தேதியை வழங்கியபிறகு 14 நாட்களுக்குள் கண்காணிப்பு அம்சத்தை இயக்க வேண்டும் இல்லையெனில் உங்கள் கணக்கு முடக்கப்படும். அவ்வாறு கணக்கு முடக்கப்பட்ட பிறகு 30 நாட்களுக்குள் கண்காணிப்பு அம்சத்தை இயக்க வேண்டும் இல்லையெனில் கணக்கு நீக்கப்படும்.

உதவிக்குறிப்பு: பிராண்டு கணக்கிற்குக் கண்காணிப்பு அம்சத்தை அமைக்க முடியாது. கண்காணிப்பு அம்சத்தை அமைப்பதற்கு முன்பு உங்கள் பிராண்டு கணக்கை நிர்வகிப்பவர்களை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும்.

உங்கள் கணக்கைப் பயன்படுத்துவதற்கான வயதை நீங்கள் எட்டியுள்ளதைச் சரிபார்த்தல்

குறைந்தபட்ச வயது வரம்பை நீங்கள் அடைந்திருந்தால் உங்கள் வயதை உறுதிப்படுத்த, அரசாங்கம் வழங்கியுள்ள ஐடி அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தலாம்.

உங்கள் ஐடியைப் படமெடுத்தாலோ அதன் படத்தைப் பதிவேற்றினாலோ, அது பாதுகாப்பாகச் சேமிக்கப்படுவதுடன் பொதுவிலும் வெளியிடப்படாது. உங்கள் பிறந்த தேதி சரிபார்க்கப்பட்ட பிறகு அது நீக்கப்பட்டுவிடும்.

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் எந்தவொரு தற்காலிக அங்கீகரிப்பும் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும்.

முக்கியம்: உங்கள் Google கணக்கில் உள்நுழைந்த பிறகு, செல்லுபடியாகும் ஐடியை நேரடியாகப் படமெடுப்பது அல்லது அதன் படத்தைப் பதிவேற்றுவது, கிரெடிட் கார்டு தகவல்களை வழங்குவது அல்லது பிற சரிபார்ப்பு முறைகளைப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த வழிமுறைகளைப் பெறுவீர்கள். இந்த வகையான தகவல்களை வழங்கும்படி Google ஒருபோதும் மின்னஞ்சலில் கேட்காது.

அரசாங்க ஐடியைப் பயன்படுத்தவும்

அரசாங்கம் வழங்கும் செல்லுபடியாகக்கூடிய ஐடியைப் படமெடுக்கலாம் அல்லது அதன் படத்தைப் பதிவேற்றலாம். ஐடியில் உங்கள் பிறந்த தேதி இருக்க வேண்டும். பெரும்பாலான கோரிக்கைகளை 24 மணிநேரத்திற்குள் மதிப்பாய்வு செய்துவிடுவோம், உங்கள் பிறந்த தேதி சரிபார்க்கப்பட்ட பிறகு உங்கள் ஐடி நீக்கப்பட்டுவிடும். உங்கள் அடையாள எண்ணை மறைத்து அதைத் தனிப்பட்டதாகவும் வைத்துக்கொள்ளலாம்.

உதவிக்குறிப்பு: .jpg அல்லது .png போன்ற பட ஃபைல் வடிவத்தைப் பயன்படுத்தவும். .pdf ஃபைலைப் பதிவேற்றக் கூடாது.

கிரெடிட் கார்டைப் பயன்படுத்துதல்

முக்கியம்: சில நாடுகளில் இந்த விருப்பத்தைப் பயன்படுத்த முடியாது.

உங்கள் கிரெடிட் கார்டு செல்லுபடியாகக்கூடியது என்பதை நாங்கள் உறுதிசெய்தபிறகு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கான ஒழுங்குமுறைத் தேவைகளுக்குத் தேவைப்படும் வரை மட்டுமே இந்தத் தரவை தக்கவைத்திருப்போம்.

உங்கள் பிறந்த தேதியைச் சரிபார்க்க கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் ஒரு சிறிய தொகை அங்கீகரிக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காணக்கூடும். உங்கள் கார்டும் கணக்கும் சரியானவையா என்பதை இது சரிபார்க்கிறது. இந்தத் தொகை உங்கள் கார்டில் பில் செய்யப்படாது என்பதுடன் அது விரைவில் திருப்பி அளிக்கப்படும்.

உதவிக்குறிப்பு: உங்கள் அங்கீகரிப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனில் தவறான கார்டைப் பயன்படுத்துகிறீர்களா அல்லது தவறான தகவல்களை வழங்கியுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.

உங்கள் கோரிக்கையின் நிலையைச் சரிபார்த்தல்

  • முதல் 14 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கையின் நிலையைச் சரிபார்க்கலாம். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால் சரியான கணக்கில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருந்தால் உங்கள் கோரிக்கையின் நிலையைப் பார்க்க வழக்கமான முறையில் உள்நுழையவும்.

உங்கள் கணக்கில் இருந்து தரவைப் பதிவிறக்குதல்

உங்கள் கணக்கு மீண்டும் இயக்கப்படுவதற்குக் காத்திருந்தாலோ அதை மீண்டும் இயக்க முடியவில்லை என்றாலோ சில Google சேவைகளில் இருந்து உங்கள் கணக்குத் தரவைப் பதிவிறக்கிச் சேமிக்க முடியும்.

முதல் 14 நாட்களுக்குள் உங்கள் கணக்கில் உள்நுழைந்து உங்கள் தரவைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருந்தால் சில Google சேவைகளில் இருந்து உங்கள் கணக்குத் தரவைப் பதிவிறக்கிச் சேமிக்க முடியும்.

எனது Google கணக்கை நீக்குதல்

கண்காணிப்பு அம்சத்தைச் சேர்க்கவோ பிறந்த தேதியைச் சரிபார்க்கவோ விரும்பவில்லை எனில் கணக்கு முடக்கப்படுவதற்கு முன்பு உங்கள் Google கணக்கை நீக்குவதைத் தேர்வுசெய்யலாம்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11400736308239836148
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false