'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பை நிர்வகித்தல்

வரும் மாதங்களில், இதுவரை சென்ற இடங்கள் அமைப்பின் பெயர் காலப்பதிவு என்று மாற்றப்படும். உங்கள் கணக்கில் 'இதுவரை சென்ற இடங்கள்' இயக்கப்பட்டிருந்தால் உங்கள் ஆப்ஸிலும் கணக்கு அமைப்புகளிலும் 'காலப்பதிவு' காட்டப்படலாம். மேலும் அறிக.

'இதுவரை சென்ற இடங்கள்' என்பது ஒரு Google கணக்கு அமைப்பாகும். நீங்கள் பின்வருவனவற்றை நினைவுகூர உதவும் வகையில் ஒரு தனிப்பட்ட வரைபடமான ‘காலப்பதிவை’ இது உருவாக்குகிறது: 

  • நீங்கள் செல்லும் இடங்கள்
  • இடங்களைச் சென்றடைவதற்கான வழிகள்
  • நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள்

நீங்கள் செல்லும் இடங்களின் அடிப்படையில் Google முழுவதிலும் பிரத்தியேகமான அனுபவங்களையும் இது உங்களுக்கு வழங்குகிறது.

'இதுவரை சென்ற இடங்கள்' இயக்கப்பட்டிருக்கும்போது, Google ஆப்ஸ் பயன்பாட்டில் இல்லை என்றாலும் உங்கள் சாதனத்தின் துல்லியமான இருப்பிடம் இவற்றில் தொடர்ந்து சேமிக்கப்படும்:

  • உங்கள் சாதனங்கள் 
  • Google சேவையகங்கள்

Google அனுபவங்களை எல்லோருக்கும் பயனுள்ளதாக்க, இவற்றுக்காக உங்கள் தரவை நாங்கள் பயன்படுத்தக்கூடும்:

  • அடையாளம் நீக்கப்பட்ட இருப்பிடத் தரவின் அடிப்படையில் தகவல்களைக் காட்டுதல். உதாரணம்:
    • பரபரப்பான நேரங்கள்
    • சுற்றுச்சூழல் குறித்த புள்ளிவிவரங்கள்
  • மோசடியையும் தவறான பயன்பாட்டையும் கண்டறிந்து தடுத்தல்.
  • விளம்பரத் தயாரிப்புகள் போன்ற Google சேவைகளை உருவாக்குதல் மேம்படுத்துதல்.
  • நீங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை இயக்கியிருந்தால், விளம்பரத்தின் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்டோர்களுக்கு வருகிறார்களா என்பதைத் தீர்மானிக்க பிசினஸ்களுக்கு உதவுதல்.
    • பிசினஸ்களுடன் அடையாளம் நீக்கப்பட்ட கணிப்புகளை மட்டுமே பகிர்கிறோம், தனிப்பட்ட தரவை அல்ல.
    • நீங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் பொதுவான பகுதி, IP முகவரி ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல் இந்தச் செயல்பாட்டில் அடங்கலாம்.

இருப்பிடத் தரவை Google எப்படிப் பயன்படுத்துகிறது என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

'இதுவரை சென்ற இடங்கள்' குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை:

  • 'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பு இயல்பாகவே முடக்கப்பட்டிருக்கும். நீங்கள் இந்த அமைப்பை இயக்கினால் மட்டுமே நாங்கள் அதைப் பயன்படுத்த முடியும்.
  • உங்கள் Google கணக்கின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளுக்குச் சென்று 'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பை எப்போது வேண்டுமானாலும் முடக்கிக்கொள்ளலாம்.
  • நீங்கள் 'இதுவரை சென்ற இடங்கள்' தரவைச் சரிபார்க்கலாம் நிர்வகிக்கலாம். நீங்கள்:
    • நீங்கள் சென்ற இடங்களை உங்கள் Google Maps காலப்பதிவில் சரிபார்க்கலாம்.
    • உங்கள் 'இதுவரை சென்ற இடங்கள்' தரவை எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம் நீக்கலாம்.
கவனத்திற்கு: இந்தப் படிகளில் சிலவற்றை Android 8.0 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செய்ய முடியும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என அறிந்துகொள்ளுங்கள்.

'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பை இயக்குதல்/முடக்குதல்

'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பை உங்கள் கணக்கில் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் உங்கள் நிர்வாகி இந்த அமைப்பை உங்களுக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மற்ற பயனரைப் போல உங்களாலும் 'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பைப் பயன்படுத்த முடியும்.

  1. உங்கள் Google கணக்கின் "இதுவரை சென்ற இடங்கள்" பிரிவிற்குச் செல்லவும்.
  2. உங்கள் கணக்கோ சாதனங்களோ 'இதுவரை சென்ற இடங்களை' Googleளிடம் தெரியப்படுத்தலாமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உங்கள் கணக்கிலும் அனைத்துச் சாதனங்களிலும்: மேற்புறத்தில், இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை இயக்கு/முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • குறிப்பிட்ட சாதனத்தில் மட்டும்: "இந்தச் சாதனம்" அல்லது "இந்தக் கணக்கு உள்ள சாதனங்கள்" என்பதற்குக் கீழேயுள்ள, சாதனத்தை இயக்கு/முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இதுவரை சென்ற இடங்கள் இயக்கப்பட்டிருக்கும்போது:

இவற்றின் மூலம் உங்கள் இருப்பிடத்தை Google கணிக்கலாம்:

  • வைஃபை, மொபைல் நெட்வொர்க்குகள் போன்ற சிக்னல்கள்
  • GPS
  • சென்சார் தகவல்

உங்கள் சாதனத்தின் இருப்பிடமும் அவ்வப்போது பின்னணியில் பயன்படுத்தப்படலாம். இதுவரை சென்ற இடங்கள் இயக்கப்பட்டிருக்கும்போது, Google ஆப்ஸ் பயன்பாட்டில் இல்லை என்றாலும் உங்கள் சாதனத்தின் துல்லியமான இருப்பிடம் இவற்றில் தொடர்ந்து சேமிக்கப்படும்:

  • உங்கள் சாதனங்கள்
  • Google சேவையகங்கள்

உங்கள் Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது, "இந்தக் கணக்கு உள்ள சாதனங்கள்" அமைப்பு இயக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களின் இதுவரை சென்ற இடங்கள் தரவும் சேமிக்கப்படும். இந்த அமைப்பை உங்கள் Google கணக்கின் ‘இதுவரை சென்ற இடங்கள்’ அமைப்புகளில் பார்க்கலாம்.

எந்தெந்தச் சாதனங்களின் இருப்பிடத் தரவு இதுவரை சென்ற இடங்கள் பதிவில் சேமிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் சாதனத்தில் உள்ள பிற இருப்பிடச் சேவைகளுக்கான அமைப்புகள் மாறாது. உதாரணங்கள்:

'இதுவரை சென்ற இடங்கள்' முடக்கப்பட்டிருக்கும்போது

உங்கள் சாதனத்தின் இருப்பிடம் உங்கள் 'இதுவரை சென்ற இடங்கள்' பதிவில் சேமிக்கப்படாது.

  • முந்தைய ‘இதுவரை சென்ற இடங்கள்’ தரவு உங்கள் கணக்கில் இருக்கக்கூடும். இதை நீங்களே எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.
  • உங்கள் சாதனத்தில் உள்ள பிற இருப்பிடச் சேவைகளுக்கான அமைப்புகள் மாறாது. உதாரணங்கள்:
  • இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு போன்ற அமைப்புகள் இயக்கப்பட்டிருந்து, நீங்கள் 'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பை முடக்கினாலோ அந்த அமைப்பில் இருந்து தரவை நீக்கினாலோ பிற Google தளங்கள், ஆப்ஸ், சேவைகள் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்துவதன் ஒரு பகுதியாக இருப்பிடத் தரவை உங்கள் Google கணக்கு தொடர்ந்து சேமிக்கலாம். நீங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் பொதுவான பகுதி, IP முகவரி ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல் இந்தச் செயல்பாட்டில் அடங்கலாம்.

இதுவரை சென்ற இடங்களை நீக்குதல்

Google Maps காலப்பதிவிலுள்ள இதுவரை சென்ற இடங்களின் தகவல்களை நிர்வகிக்கலாம் நீக்கலாம். இதுவரை சென்ற இடங்கள் அனைத்தையும் நீக்கும்படியோ அதன் பகுதிகளை நீக்கும்படியோ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

கவனத்திற்கு: காலப்பதிவிலிருந்து 'இதுவரை சென்ற இடங்கள்' தொடர்பான தகவல்களை நீக்கிவிட்டால் அதை மீண்டும் பார்க்க முடியாது.

இதுவரை சென்ற இடங்களைத் தானாக நீக்குதல்

3, 18 அல்லது 36 மாதங்களுக்கும் மேலாக இருக்கும் 'இதுவரை சென்ற இடங்கள்' பதிவைத் தானாக நீக்கும்படி நீங்கள் தேர்வுசெய்யலாம்.

இதுவரை சென்ற இடங்களில் சிலவற்றையோ அனைத்தையுமோ நீக்கிய பிறகு என்ன நடக்கும்?

'இதுவரை சென்று இடங்கள்' தரவில் சிலவற்றையோ அனைத்தையுமோ நீக்கினால் Google முழுவதிலும் உள்ள பிரத்தியேகமான அனுபவங்களின் தரம் குறையலாம் அல்லது அவற்றை இழக்க நேரிடலாம். உதாரணமாக, நீங்கள் இவற்றை இழக்க நேரிடலாம்:

  • நீங்கள் செல்லும் இடங்களின் அடிப்படையிலான பரிந்துரைகள்
  • போக்குவரத்து நெரிசல் இன்றி வீட்டிற்கோ பணிக்கோ செல்ல ஏற்ற நேரம் குறித்த நிகழ்நேரத் தகவல்கள்

கவனத்திற்கு: இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு போன்ற பிற அமைப்புகளை இயக்கியிருந்து, இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை இடைநிறுத்தியிருந்தாலோ அதிலுள்ள இருப்பிடத் தரவை நீக்கியிருந்தாலோ, பிற Google தளங்கள், ஆப்ஸ் மற்றும் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது நடைபெறும் செயலாக்கத்தின் ஒரு பகுதியாக உங்கள் Google கணக்கில் இருப்பிடத் தரவு தொடர்ந்து சேமிக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது Search, Maps ஆகியவற்றில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருப்பிடத் தரவு சேமிக்கப்படலாம். அத்துடன், கேமரா ஆப்ஸ் அமைப்புகளைப் பொறுத்து உங்கள் படங்களில் அவை சேர்க்கப்படலாம். நீங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் பொதுவான பகுதி, IP முகவரி ஆகியவற்றின் மூலம் பெறப்படும் உங்கள் இருப்பிடம் குறித்த தகவல் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் அடங்கும்.

இதுவரை சென்ற இடங்களுக்கான 'உபயோகம் & பிழை கண்டறிதல்' தகவல் பற்றித் தெரிந்துகொள்ளுதல்

நீங்கள் 'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பை இயக்கியதும், 'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பில் எது சரியாகச் செயல்படுகிறது, எது சரியாகச் செயல்படவில்லை என்பது குறித்த பிழை கண்டறிதல் தகவல்களை உங்கள் சாதனம் Googleளுக்கு அனுப்பக்கூடும். Google சேகரிக்கும் தகவல்களை Googleளின் தனியுரிமைக் கொள்கையின் கீழ் செயலாக்குகிறது.

 

 

 

பிற இருப்பிட அமைப்புகள் குறித்து மேலும் அறிக

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

9663762259643022784
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
false
false
false
false