உங்கள் சாதனங்களில் ஆப்ஸ் தகவலை நிர்வகித்தல்

நீங்கள் உள்நுழைந்துள்ள சாதனங்களில் நிறுவியுள்ள ஆப்ஸின் பெயர், பதிப்பு போன்ற ஆப்ஸ் தகவல்களை உங்கள் Google கணக்கில் சேமிக்கும்படி நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் Google அசிஸ்டண்ட்டையோ Google தேடலையோ பயன்படுத்தும்போது நிறுவப்பட்ட ஆப்ஸுடன் தொடர்புகொள்வதை எளிதாக்க இந்தத் தரவு பயன்படுத்தப்படும். உதாரணமாக ஒரு செயலைச் செய்து முடிக்க எந்த ஆப்ஸைப் பயன்படுத்த வேண்டும் என்று Google அசிஸ்டண்ட் புரிந்து கொள்ள இது உதவுகிறது.

  1. அசிஸ்டண்டிலுள்ள உங்கள் தரவு அல்லது தேடலிலுள்ள உங்கள் தரவு என்பதற்குச் செல்லவும்.
  2. "Google முழுவதுமான கட்டுப்பாடுகள்" என்பதன் கீழ் உங்கள் சாதனங்களிலிருக்கும் ஆப்ஸின் தகவல் என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் சாதனங்களிலிருக்கும் ஆப்ஸின் தகவல் என்பதை இயக்கவும்.

கவனத்திற்கு:Google Play அல்லது Android Backup போன்ற பிற Google சேவைகள், நிறுவப்பட்ட ஆப்ஸின் தகவல்களைச் சேமிப்பதை இந்த அமைப்பு பாதிக்காது.

உங்கள் சாதனங்களில் இருந்து ஆப்ஸ் தகவலை நீக்குதல்

அமைப்பை முடக்கும்போது உங்கள் Google கணக்கிலுள்ள சாதனங்களின் ஆப்ஸ் தகவல் நீக்கப்படும். உங்கள் சாதனங்களிலிருந்து ஆப்ஸ் நீக்கப்படாது.

உங்கள் சாதனங்களின் ஆப்ஸ் தகவல் உங்களுக்கு உதவும் விதம்

பணியை முடிப்பதற்கு எந்த ஆப்ஸைப் பயன்படுத்த வேண்டும் என்பதை Google கண்டறிய இந்தத் தரவு உதவுகிறது. உதாரணமாக உங்கள் Google அசிஸ்டண்டிடமோ ஸ்மார்ட் சாதனத்திடமோ "Hey Google மியூசிக்கைப் பிளே பண்ணு" என நீங்கள் கூறும்போது Google அசிஸ்டண்ட் மியூசிக் ஆப்ஸைத் தேர்ந்தெடுத்து திறப்பதற்கு இந்தத் தரவு உதவுகிறது.

உங்கள் சாதனங்களின் ஆப்ஸ் தகவல் இயக்கப்பட்டிருப்பதற்கான காரணம்

உங்கள் சாதன அமைப்பில் இருக்கும் ஆப்ஸ் தகவல் மூலம் சேமிக்கப்படும் தரவு முன்னதாக சாதனத் தகவல்கள் அமைப்பின் மூலம் சேமிக்கப்பட்டது. உங்கள் அனுபவம் சீரானதாக இருப்பதற்கு உங்கள் சாதனத் தகவலின் அமைப்பு இயக்கத்தில் இருந்தால் உங்கள் சாதன அமைப்பின் ஆப்ஸ் தகவலும் இயக்கப்பட்டிருக்கும். உங்கள் சாதனங்களுக்கு ஆப்ஸ் தகவலை எப்போது வேண்டுமானாலும் முடக்க முடியும்.

Android iPhone & iPad
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
734790125937373670
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false