உங்கள் பிசினஸை நிர்வகிக்க உதவும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான பரிந்துரைகளை Googleளில் இருந்து நீங்கள் பெறக்கூடும். பரிந்துரைக்கப்படக்கூடிய தயாரிப்புகளில் இவை இருக்கலாம்:
- Google Business Profile
- Google Workspace
- Google Merchant Center
- Google Analytics
இந்தப் பரிந்துரைகள் இவற்றில் காட்டப்படலாம்:
- Google Search
- Gmail அல்லது iOS Gmail ஆப்ஸ்
"பிசினஸ் பிரத்தியேகமாக்கம்" அமைப்பு மூலம் இந்தப் பரிந்துரைகளைப் பிரத்தியேகமாக்கலாம்.
இவர்களுக்கான கணக்குகளில் பிசினஸ் பிரத்தியேகமாக்கம் அமைப்பைச் சேர்க்க முடியாது:
- பணி, பள்ளி அல்லது மற்றொரு குழு.
- பெற்றோர் உருவாக்கிய Google கணக்கை வைத்திருக்கும், உங்கள் நாட்டில் பொருத்தமான வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள். Google கணக்குகளுக்கான வயது வரம்புகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
பிசினஸ் பிரத்தியேகமாக்கம் அமைப்பை இயக்குதல் அல்லது முடக்குதல்
முக்கியம்: நீங்கள் Google Business Profile, Google Ads போன்ற பிசினஸ் கருவிகளை பயன்படுத்தினால் அல்லது நீங்கள் ஒரு பிசினஸ் என்று குறிப்பிட்டால், பிசினஸ் பிரத்தியேகமாக்கம் அமைப்பு முடக்கப்பட்டிருந்தால் கூட வெவ்வேறு Google தயாரிப்புகளிலும் சேவைகளிலும் பதிவு செய்யுமாறு கேட்கும் சில Google அறிவிப்புகள் அந்த பிசினஸ் தயாரிப்புகளில் தொடர்ந்து உங்களுக்குக் காட்டப்படலாம். Google Ads பிசினஸ் தரவுப் பகிர்வு குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் பிசினஸ் சம்பந்தமான Google தயாரிப்புக்குப் பதிவு செய்தால் அல்லது உங்கள் Google கணக்கை உருவாக்கியபோது அது பிசினஸை நிர்வகிக்கப் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டிருந்தால், பிசினஸ் பிரத்தியேகமாக்கம் அமைப்பு தானாகவே இயக்கப்படலாம். இதை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் முடக்கலாம்.
நீங்கள் கணக்கை உருவாக்கிய பிறகும் பிசினஸ் பிரத்தியேகமாக்கம் அமைப்பை இயக்கலாம். Google கணக்கை உருவாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- Android மொபைல் அல்லது டேப்லெட்டில் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
- Google Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
- மேலே உள்ள நபர்களும் பகிர்தலும் என்பதைத் தட்டவும்.
- "பிசினஸ் அம்சங்கள்" என்பதன் கீழ் உள்ள பிசினஸ் பிரத்தியேகமாக்கம் என்பதைத் தட்டவும்.
- பிசினஸ் பிரத்தியேகமாக்கம் என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.
பிசினஸ் அல்லது பிராண்டிற்கான ஆன்லைன் விவரத்தை உருவாக்குதல்
நீங்கள் பிசினஸ் பிரத்தியேகமாக்கம் அமைப்பை இயக்கவில்லை என்றாலும் Business Profile போன்ற பிசினஸ் சம்பந்தமான தயாரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
Business Profileலை அமைத்தல்ஒரு கடை அல்லது இருப்பிடச் சேவை பிசினஸை நீங்கள் நிர்வகித்தால் Business Profileலைப் பயன்படுத்துவது மிகச் சரியாக இருக்கக்கூடும். உங்கள் பிசினஸின் தெரிவுநிலையையும் தகவல்களையும் ஆன்லைனில் மேம்படுத்த Business Profileலைப் பயன்படுத்துவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
பிராண்டு மூலம் உள்ளடக்கத்தை வெளியிடவும் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளவும் விரும்பினால் பிராண்டு கணக்கை உருவாக்கலாம். பிராண்டு கணக்கை எப்படி உருவாக்குவது, நிர்வகிப்பது என்பதைப் பற்றி மேலும் அறிக.