உங்கள் Google கணக்கில் உள்நுழையாமல் போவதைத் தவிர்த்தல்

மின்னஞ்சல்கள், ஆவணங்கள், படங்கள், Play Store பர்ச்சேஸ்கள் போன்ற முக்கியமான உள்ளடக்கங்கள் உங்கள் Google கணக்கில் இருக்கும். பின்வரும் சூழல்களில் உங்களால் கணக்கில் உள்நுழைய முடியாதபோது மீட்புத் தகவலையும் காப்புப் பிரதிகளையும் பயன்படுத்தி உங்கள் கணக்கைப் பாதுகாக்கலாம்:

  • கடவுச்சொல் மறந்துவிட்டது
  • மொபைல் தொலைந்துவிட்டது
  • கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது

படி 1: மீட்புத் தகவலை வழங்குவதன் மூலம் கணக்கைப் பாதுகாக்கவும்

உங்கள் கணக்கு பூட்டப்பட்டுவிட்டால் அதை மீட்டெடுக்க மீட்புத் தகவல் உதவும்.

மீட்பு மொபைல் எண்ணைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

  1. உங்கள் Google கணக்கின் மீட்பு மொபைல் எண் பிரிவில் உள்நுழையவும்.
  2. இங்கே நீங்கள்:
    • மீட்பு மொபைல் எண்ணைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • மீட்பு மொபைல் எண்ணை மாற்றலாம்: மொபைல் எண்ணிற்கு அடுத்துள்ள மாற்றுவதற்கான Edit ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
    • மீட்பு மொபைல் எண்ணை நீக்கலாம்: மொபைல் எண்ணிற்கு அடுத்துள்ள நீக்குவதற்கான Delete ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் மீட்பு மொபைல் எண்ணை நீக்குவதால் மற்ற Google சேவைகள் அதைப் பயன்படுத்துவது நிறுத்தப்படாது. மொபைல் எண்களை நிர்வகிக்க உங்கள் கணக்கிற்குச் செல்லவும்.

எந்த மொபைல் எண்ணைப் பயன்படுத்துவது?

உங்கள் மொபைல் எண்:

  • மெசேஜ்களைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்
  • உங்களுடையதாக மட்டுமே இருக்க வேண்டும்
  • நீங்கள் அதை வழக்கமாகப் பயன்படுத்துவதுடன் உங்களிடம் எப்போதும் இருக்க வேண்டும்

மீட்பு மின்னஞ்சல் முகவரியைச் சேர்த்தல் அல்லது மாற்றுதல்

  1. உங்கள் Google கணக்கில் மீட்பு மின்னஞ்சல் முகவரிப் பிரிவுக்குச் செல்லவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. இங்கே நீங்கள்:
    • மீட்பு மின்னஞ்சல் முகவரியைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
    • மீட்பு மின்னஞ்சல் முகவரியை மாற்றலாம் அல்லது நீக்கலாம்: மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்துள்ள திருத்து ஐகானை திருத்து தேர்ந்தெடுக்கவும்.
  3. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

எந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவது?

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மின்னஞ்சல் முகவரி:

  • நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்
  • உங்கள் Google கணக்கில் உள்நுழையப் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி அல்லாத வேறு மின்னஞ்சல் முகவரியாக இருக்க வேண்டும்

மீட்புத் தகவல் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?

மீட்பு மொபைல் எண்

பின்வரும் வழிகளில் மீட்பு மொபைல் எண்ணைப் பயன்படுத்தலாம்:

  • கடவுச்சொல் மறந்துவிட்டாலோ வேறு ஏதேனும் காரணத்தால் உள்நுழைய முடியவில்லை என்றாலோ கணக்கை மீட்டெடுக்க உதவுவதற்கு
  • உங்கள் அனுமதியின்றி உங்கள் கணக்கைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு
  • கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடு கண்டறியப்பட்டால் அதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு

உங்கள் கணக்கில் நீங்கள் சேர்த்துள்ள வேறொரு மொபைல் எண்ணும் மீட்பு மொபைல் எண்ணும் ஒன்றாக இருந்தால் அது வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படலாம். மொபைல் எண்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

மீட்பு மின்னஞ்சல் முகவரி

மீட்பு மின்னஞ்சல் முகவரி இவற்றுக்கெல்லாம் பயன்படுத்தப்படலாம்:

  • கடவுச்சொல்லை மறந்துவிட்டாலோ வேறு காரணத்திற்காக உள்நுழைய முடியவில்லை என்றாலோ கணக்கை மீட்டெடுக்க உதவுவதற்கு
  • கணக்கில் சந்தேகத்திற்குரிய செயல்பாடு நடந்தால் அதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு
  • சேமிப்பிடம் நிரம்பவுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு

படி 2: உள்நுழைவதற்கான கூடுதல் வழிகளை அமைத்திடுங்கள்

நீங்கள் உள்நுழைவதற்கான கூடுதல் வழிகளைச் சேர்த்து, கணக்கு உங்களுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தலாம்.
கடவுச்சொல்லை மட்டுமே பயன்படுத்தி உள்நுழைந்தால்
நீங்கள் கடவுச்சொல்லுக்குப் பதிலாக மொபைலைப் பயன்படுத்தி உள்நுழையலாம். நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் உள்நுழைய வேறு வழி இருப்பது உதவிகரமானது.
இருபடிச் சரிபார்ப்பைப் பயன்படுத்தினால்

நீங்கள்தான் உள்நுழைகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த கூடுதல் வழிகளைச் சேருங்கள்

மொபைல் அறிவிப்புகளை அமைத்தல்

உள்நுழைய, உங்கள் மொபைலுக்கு Google அனுப்பும் அறிவிப்பைத் தட்டவும். உங்கள் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்த மொபைல் அறிவிப்புகள் உதவுகின்றன, குறியீட்டை டைப் செய்து உறுதிப்படுத்துவதைவிட இந்த முறை விரைவானது.

மாற்றுக் குறியீடுகளைச் சேமித்தல்

உங்கள் மொபைலை நீங்கள் பயன்படுத்த முடியாதபோது உங்கள் கணக்கில் உள்நுழைய மாற்றுக் குறியீடுகள் உதவுகின்றன. மாற்றுக் குறியீடுகளை ஒரு சாதனத்தில் நீங்கள் பதிவிறக்கிக்கொள்ளலாம் அல்லது அவற்றை அச்சிட்டு ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.

ஆப்ஸில் இருந்து குறியீடுகளைப் பெறுதல்

மெசேஜ்களைப் பெற முடியாதபோது கூட குறியீடுகளைப் பெற்று உங்கள் கணக்கில் நீங்கள் உள்நுழையலாம். உங்கள் மொபைலில் குறியீடுகளைப் பெற Google Authenticator ஆப்ஸை நிறுவுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பாதுகாப்பு விசையை அமைத்தல்

உங்கள் Google கணக்கில் உள்நுழைவதற்குப் பயன்படக்கூடிய இரண்டாவது படிகளுக்கான விருப்பங்களில் பாதுகாப்பு விசைகள் மிகவும் பாதுகாப்பானவை. பாதுகாப்பு விசையைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவர் என்றால்

நீங்கள் புதிதாக ஓர் இடத்திலிருந்து உள்நுழையும்போது, நீங்கள்தான் உள்நுழைகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த கூடுதலாக ஒரு படியை மேற்கொள்ளுமாறு Google உங்களிடம் கேட்கலாம். பயணத்தின்போது எளிதாகவும் பாதுகாப்பாகவும் உள்நுழைய இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

1. உங்கள் மீட்புத் தகவலை மாற்றுங்கள்

உங்கள் மீட்பு மொபைல் எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் உங்களால் இப்போதும் பயன்படுத்த முடிவதை உறுதிசெய்துகொள்ளவும். இதனால், கணக்கில் நீங்கள் உள்நுழைய முடியாதபோது அதில் மீண்டும் உள்நுழைய நாங்கள் உதவ முடியும்.

2. Set up a way to prove it’s you

பயணத்தின்போது உங்கள் கணக்கைப் பயன்படுத்த, புறப்படும் முன் உங்கள் மீட்பு மொபைலை அமைக்கவும். பயணத்தின்போது இந்த மொபைலை உங்களுடன் எடுத்துச்செல்லவும்.

மெசேஜில் பெறும் சரிபார்ப்புக் குறியீடுகளைப் பயன்படுத்தி கணக்கு உங்களுடையதுதான் என்பதை உறுதிப்படுத்துங்கள்

பயணத்தின்போது உங்கள் மீட்பு மொபைலில் மெசேஜ்களைப் பெற முடிவதை உறுதிசெய்துகொள்ளவும்.

மொபைல் அறிவிப்புகளைப் பயன்படுத்தி கணக்கு உங்களுடையதுதான் என்பதை உறுதிப்படுத்துங்கள்

மொபைல் அறிவிப்புகளைப் பயன்படுத்த, உங்கள் மீட்பு மொபைலில் இணைய இணைப்பு செயலில் இருக்க வேண்டும்.

கடவுச்சொல்லை மட்டுமே பயன்படுத்தி உள்நுழைந்திருந்தால்:

பயணத்திற்கு முன்பு உங்கள் மீட்பு மொபைலில் உங்கள் Google கணக்கைச் சேர்த்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

இருபடிச் சரிபார்ப்பைப் பயன்படுத்தினால்:

  1. பயணத்திற்கு முன்பு மொபைல் அறிவிப்புகளை அமைப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  2. பயணத்தின்போது உங்கள் மீட்பு மொபைல் அல்லது Google ஆப்ஸில் உள்நுழைந்த நிலையிலேயே இருக்கவும்.

3. நீங்கள்தான் உள்நுழைகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த கூடுதல் வழிகளைச் சேருங்கள்

இருபடிச் சரிபார்ப்பு இயக்கப்பட்டிருந்தால் நீங்கள்தான் உள்நுழைகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த கூடுதல் வழிகளைச் சேர்க்கலாம்.

படி 3: உங்கள் கணக்கை மேலும் பாதுகாப்பாக மாற்றுங்கள்

இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்கள் கணக்கில் நீங்கள் மட்டுமே உள்நுழைய முடியும் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

சிக்கல்களைச் சரிசெய்தல்

உள்நுழைய முடியவில்லை

கணக்கு மீட்டெடுப்புப் பக்கத்திற்குச் சென்று உங்களால் முடிந்தவரை கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளியுங்கள். இந்த உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

பின்வரும் சூழல்களில் கணக்கு மீட்டெடுப்புப் பக்கத்தைப் பயன்படுத்தவும்:

  • நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால்.
  • வேறொருவர் உங்கள் கடவுச்சொல்லை மாற்றியிருந்தால்.
  • வேறொருவர் உங்கள் கணக்கை நீக்கியிருந்தால்.
  • வேறு காரணத்திற்காக உங்கள் கணக்கில் உள்நுழைய முடியவில்லை என்றால்.

உதவிக்குறிப்பு: நீங்கள் சரியான கணக்கில்தான் உள்நுழைய முயல்கிறீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ள, உங்கள் பயனர்பெயரை மீட்டெடுக்க முயலவும்.

மீட்புத் தகவலை மாற்ற முடியவில்லை

நீங்கள் உள்நுழையும் முறையில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறாக இருந்தால் உங்கள் மீட்புத் தகவலை மாற்றுவதற்கான விருப்பம் காட்டப்படாமல் போகலாம். நீங்கள்:

  • உள்நுழைவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் சாதனத்தில் இருந்து மீண்டும் முயலவும்.
  • வழக்கமாக உள்நுழையும் இடத்தில் இருந்து மீண்டும் முயலவும்.
  • தற்போது பயன்படுத்தும் சாதனத்தில் இருந்து அடுத்த வாரம் மீண்டும் முயலவும்.
Android iPhone & iPad
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4415264590476697079
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false