உங்கள் பர்ச்சேஸ்கள், முன்பதிவுகள், சந்தாக்கள் ஆகியவற்றைக் கண்டறிதல்

Search, Maps, டிஜிட்டல் அசிஸ்டண்ட்டுகள் ஆகியவற்றின் மூலம் நீங்கள் செய்த பர்ச்சேஸ்களும் முன்பதிவுகளும் உங்கள் Google கணக்கில் இருக்கும். வேலைகளை நீங்கள் எளிதாகச் செய்து முடிக்க உதவ இந்தத் தகவல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

  1. உங்கள் Google கணக்கைத் திறக்கவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. இடதுபுறத்தில் உள்ள Wallet மற்றும் சந்தாக்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. செயல்பாடுகளின் பட்டியலைப் பார்க்க, பர்ச்சேஸ்களை நிர்வகியுங்கள், சந்தாக்களை நிர்வகியுங்கள், அல்லது முன்பதிவுகளை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேலும் விவரங்களைப் பெற ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் இது போன்றவற்றைச் செய்யலாம்:
    • டெலிவரியைக் கண்காணித்தல்.
    • சந்தாவைப் புதுப்பித்தல்.
    • முன்பதிவை ரத்துசெய்தல்.

முக்கியம்: நீங்கள் 13 வயதிற்குட்பட்டவராகவோ உங்கள் நாட்டில் பொருத்தமான வயதிற்குட்பட்டவராகவோ இருந்தால், உங்கள் Google கணக்கு Family Link மூலம் பெற்றோரால் நிர்வகிக்கப்படும். உங்கள் Google கணக்கில் பர்ச்சேஸ்கள், சந்தாக்கள் அல்லது முன்பதிவுகள் எதுவும் காட்டப்படாது.

உதவிக்குறிப்பு: குடும்ப உறுப்பினர்கள் குடும்ப பேமெண்ட் முறை மூலம் செய்துள்ள அனைத்து பர்ச்சேஸ்களின் பட்டியலையும் Google Playயின் பில்லிங் அமைப்பின் மூலம் குடும்ப நிர்வாகி பார்க்கலாம். குடும்ப பேமெண்ட் முறை பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பர்ச்சேஸ்களும் முன்பதிவுகளும் எங்கிருந்து வருகின்றன என்று தெரிந்துகொள்ளுதல்

Search, Maps, டிஜிட்டல் அசிஸ்டண்ட்டுகள் ஆகியவற்றின் மூலம் நீங்கள் செய்த பர்ச்சேஸ்களும் முன்பதிவுகளும் உங்கள் Google கணக்கில் இருக்கும். உதாரணமாக, Search மூலம் செய்யப்பட்ட உணவு ஆர்டர்கள் அல்லது Google ஷாப்பிங் ஆர்டர்கள்.

ஆர்டர் எங்கிருந்து வந்தது என்பதைத் தெரிந்துகொள்ள:

  1. ஆர்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள தகவல் தகவல் அதன் பிறகு இது எங்கிருந்து வந்தது? என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பர்ச்சேஸ்களையும் முன்பதிவுகளையும் நீக்குதல்

பர்ச்சேஸ்களை நீக்குதல்
  1. உங்கள் Google கணக்கில் பர்ச்சேஸ்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. நீங்கள் வாங்கிய ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பர்ச்சேஸை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
முன்பதிவுகளை நீக்குதல்
  1. உங்கள் Google கணக்கில் முன்பதிவுகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. முன்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. முன்பதிவை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உங்கள் பர்ச்சேஸ்களையும் முன்பதிவுகளையும் Google ஏன் ஒரே இடத்தில் காட்டுகிறது என்று தெரிந்துகொள்ளுதல்

முக்கியம்: உங்கள் பர்ச்சேஸ்கள், முன்பதிவுகள், சந்தாக்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களுடன் சேர்த்து, மற்ற Google சேவைகளில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளும் சேமிக்கப்படலாம். உதாரணமாக, Search மூலம் ஒரு தயாரிப்பைக் கண்டறிந்து அதை வாங்கினால், அந்தத் தயாரிப்பிற்கான தேடல்கள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படக்கூடும்.

செயல்களைச் செய்து முடிப்பதற்கு உதவும் வகையில் உங்கள் பர்ச்சேஸ்களையும் முன்பதிவுகளையும் Google கணக்கில் சேமிக்கிறோம்.

இணைத்துள்ள சந்தாக்களை நிர்வகித்தல்

சந்தாக்களுக்கு இவற்றை உதாரணங்களாகக் கூறலாம்:

  • Google Play சந்தாக்கள்
  • YouTube சந்தாக்கள்
  • உங்கள் Google கணக்குடன் நீங்கள் இணைக்கும் News சந்தாக்கள்
Google அல்லாதவற்றில் இருந்து சந்தாவைச் சேர்த்தல்

உங்கள் Google கணக்கில் சந்தாவை இணைக்கலாம்.

சந்தாவை இணைத்த பிறகு, Google உங்கள் அனுபவங்களை இதுபோல் பிரத்தியேகமாக்கலாம்:

  • கணக்கில் உள்நுழையாமலேயே செய்திக் கட்டுரைகளைக் கண்டறியலாம்.
  • உங்கள் தேடல் முடிவுகளில் பிரிண்ட் சந்தாக்கள் மூலம் செய்திக் கட்டுரைகளைக் கண்டறியலாம்.
இணைத்துள்ள சந்தாவை அகற்றுதல்

Google கணக்கில் சந்தா விவரங்களைக் காட்ட விரும்பவில்லை எனில் சந்தாக்களுக்குச் சென்று இணைப்பை நீக்குஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் சந்தா ரத்துசெய்யப்படாது அல்லது மாற்றப்படாது. ஆனால் அதன் பிறகு Google தயாரிப்புகளில் உங்கள் சந்தாவின் அடிப்படையில் பிரத்தியேகமாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்க இயலாது.

உங்கள் பர்ச்சேஸ்களையும் முன்பதிவுகளையும் யாரெல்லாம் பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளுதல்

உங்கள் பர்ச்சேஸ்கள், முன்பதிவுகள், சந்தாக்கள் ஆகியவற்றை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். உங்கள் தனியுரிமையையும் பாதுகாப்பையும் Google எப்படி உறுதிப்படுத்துகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
12782038142360978815
true
உதவி மையத்தில் தேடுக
false
true
true
true
true
true
70975
false
false
false
false