உங்கள் பர்ச்சேஸ்கள், முன்பதிவுகள், சந்தாக்கள் ஆகியவற்றைக் கண்டறிதல்

Search, Maps, Assistant ஆகியவற்றைப் பயன்படுத்தி நீங்கள் செய்த பர்ச்சேஸ்களும் முன்பதிவுகளும் உங்கள் Google கணக்கில் இருக்கும். செயல்களை நீங்கள் எளிதாகச் செய்து முடிக்க உதவும் வகையில் இந்தத் தகவல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

  1. உங்கள் Google கணக்கைத் திறக்கவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. இடதுபுறத்தில், பேமெண்ட்டுகளும் சந்தாக்களும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இவற்றின் பட்டியலைப் பார்க்க, பர்ச்சேஸ்களை நிர்வகியுங்கள்சந்தாக்களை நிர்வகியுங்கள் அல்லது முன்பதிவுகளை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மேலும் விவரங்களைப் பெற ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் இதைப் போன்ற செயல்களைச் செய்யலாம்:
    • டெலிவரியைக் கண்காணித்தல்.
    • சந்தாவைப் புதுப்பித்தல்.
    • முன்பதிவை ரத்துசெய்தல்.

முக்கியம்: நீங்கள் 13 வயதிற்குட்பட்டவராகவோ உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குட்பட்டவராகவோ இருந்தால் பெற்றோரால் Family Link மூலம் உங்கள் Google கணக்கு நிர்வகிக்கப்படும். உங்கள் Google கணக்கில் பர்ச்சேஸ்கள், சந்தாக்கள் அல்லது முன்பதிவுகள் எதுவும் காட்டப்படாது.  

உதவிக்குறிப்பு: குடும்ப உறுப்பினர்கள் குடும்ப பேமெண்ட் முறை மூலம் செய்துள்ள அனைத்து பர்ச்சேஸ்களின் பட்டியலையும் Google Playயின் பில்லிங் அமைப்பின் மூலம் குடும்ப நிர்வாகி பார்க்கலாம். குடும்ப பேமெண்ட் முறை பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பர்ச்சேஸ்களும் முன்பதிவுகளும் எங்கிருந்து வருகின்றன?

Search, Maps, Assistant ஆகியவற்றைப் பயன்படுத்தி நீங்கள் செய்த பர்ச்சேஸ்களும் முன்பதிவுகளும் உங்கள் Google கணக்கில் இருக்கும். உதாரணமாக, உங்கள் பர்ச்சேஸ்களும் முன்பதிவுகளும் இவற்றிலிருந்து வரலாம்:

  • Search/Assistant மூலம் செய்யப்பட்ட உணவு ஆர்டர்கள் அல்லது Google ஷாப்பிங் ஆர்டர்கள்
  • Search, Maps அல்லது Assistant மூலம் செய்யப்படும் உணவகம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள்; ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான முன்பதிவுகள்

ஒரு ஆர்டரின் விவரங்களைப் பார்த்து அது எங்கிருந்து வந்துள்ளது என்று தெரிந்துகொள்ள, அதைத் தேர்ந்தெடுக்கவும். மேல் வலதுபுறத்தில் உள்ள தகவல் ஐகான் தகவல்அதன் பிறகு இது எங்கிருந்து வந்தது? என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பர்ச்சேஸ்களையும் முன்பதிவுகளையும் நீக்குதல்

பர்ச்சேஸ்களை நீக்குதல்
  1. உங்கள் Google கணக்கில் பர்ச்சேஸ்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. ஒரு பர்ச்சேஸின் விவரங்களைத் தெரிந்துகொள்ள அதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பர்ச்சேஸை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. பர்ச்சேஸை அகற்ற திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
முன்பதிவுகளை நீக்குதல்
  1. உங்கள் Google கணக்கில் முன்பதிவுகள் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. ஒரு முன்பதிவின் விவரங்களைத் தெரிந்துகொள்ள அதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. முன்பதிவை அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. முன்பதிவை அகற்ற திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

முக்கியம்: உங்கள் பர்ச்சேஸ்கள், முன்பதிவுகள், சந்தாக்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களுடன் சேர்த்து, மற்ற Google சேவைகளில் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளும் சேமிக்கப்படலாம். உதாரணமாக, நீங்கள் Search மூலம் ஒரு தயாரிப்பைக் கண்டறிந்து அதைப் பர்ச்சேஸ் செய்தால் அந்தத் தயாரிப்பிற்கான தேடல்கள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கலாம்.

உங்கள் பர்ச்சேஸ்களையும் முன்பதிவுகளையும் Google ஏன் ஒரே இடத்தில் காட்டுகிறது?

செயல்களைச் செய்து முடிப்பதற்கு உங்களுக்கு உதவ உங்கள் பர்ச்சேஸ்களையும் முன்பதிவுகளையும் Google கணக்கில் ஒருங்கிணைக்கிறோம். உதாரணமாக:

  • ஒரு பர்ச்சேஸின் ஷிப்பிங் நிலை குறித்து Google Assistantடிடம் கேட்கலாம்.
  • உங்கள் விமான முன்பதிவுகளைக் காட்டுமாறு Google Assistantடிடம் கேட்கலாம் அல்லது "என்னோட ஃப்ளைட் சரியான டைம்க்கு வருமா?" போன்ற கேள்விகளைக் கேட்க Searchசைப் பயன்படுத்தலாம்.

இணைத்துள்ள சந்தாக்களை நிர்வகித்தல்

சந்தாக்களுக்கு இவற்றை உதாரணங்களாகக் கூறலாம்:

  • Google Play சந்தாக்கள்
  • YouTube சந்தாக்கள்
  • உங்கள் Google கணக்குடன் நீங்கள் இணைத்துள்ள News சந்தாக்கள்
Google அல்லாதவற்றில் இருந்து சந்தா சேவையைச் சேர்த்தல்

உங்கள் Google கணக்கில் சந்தாவை இணைக்கலாம்.

உங்கள் கணக்கில் சந்தாவை இணைத்த பிறகு, Google இவற்றைப் போன்ற செயல்களுக்கான அனுபவங்களைப் பிரத்தியேகமாக்கலாம்:

  • கணக்கில் உள்நுழையாமலோ பேமெண்ட் திரைக்குச் செல்லாமலோ கட்டுரைகளைக் கண்டறிதல்.
  • உங்கள் தேடல் முடிவுகளில் பிரிண்ட் சந்தாக்கள் மூலம் கட்டுரைகளைப் பெறுதல்.
இணைத்துள்ள சந்தாவை அகற்றுதல்

Google கணக்கில் சந்தா விவரங்களைக் காட்ட விரும்பவில்லை எனில் சந்தாக்களுக்குச் சென்று இணைப்பை நீக்குஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் சந்தா ரத்துசெய்யப்படாது அல்லது மாற்றப்படாது. ஆனால் அதன் பிறகு Google தயாரிப்புகளில் உங்கள் சந்தாவின் அடிப்படையில் பிரத்தியேகமாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்க இயலாது.

உங்கள் பர்ச்சேஸ்களையும் முன்பதிவுகளையும் யாரெல்லாம் பார்க்கலாம்?

உங்கள் பர்ச்சேஸ்கள், முன்பதிவுகள், சந்தாக்கள் ஆகியவற்றை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். உங்கள் தனியுரிமையையும் பாதுகாப்பையும் Google எப்படி உறுதிப்படுத்துகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16632564251987154762
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false