யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும், பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதை மாற்றுதல்

சில Google சேவைகளைப் பயன்படுத்தும்போது தொடர்புகள் பரிந்துரைக்கப்படும். உதாரணமாக, Gmailலில் புதிதாக மின்னஞ்சல் அனுப்ப 'பெறுநர்' புலத்தில் ஒருவரின் பெயரை டைப் செய்யும்போதே பரிந்துரைகள் காட்டப்படும். யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும், பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

பரிந்துரைகளில் இடம்பெறுபவர்கள்

உங்கள் தொடர்புகள் மற்றும் உரையாடல்கள் தொடர்பான பல்வேறு செயல்களின் (தொடர்பு நட்சத்திரமிடப்பட்டிருப்பது, சமீபத்தில் தொடர்பிற்கு மின்னஞ்சல் அனுப்பியது போன்றவை) அடிப்படையில் பரிந்துரைகள் காட்டப்படுகின்றன. நீங்கள் தொடர்புகளில் சேர்த்துள்ளவர்களும் பரிந்துரைக்கப்படும் தொடர்புகளில் அடங்குவர். நீங்கள் Google சேவைகளில் தொடர்புகொண்டவர்கள் "பிற தொடர்புகளில்" தானாகவே சேமிக்கப்படுவார்கள்.

Gmail, Photos போன்ற சில ஆப்ஸில் எதையேனும் டைப் செய்வதற்கு அல்லது தேடுவதற்கு முன்பே பரிந்துரைக்கப்படும் தொடர்புகள் காட்டப்படலாம்.

உதவிக்குறிப்புகள்:

யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துதல்

நீங்களே தொடர்புகளைச் சேர்த்தல்
  1. Google Contactsஸில் உள்நுழையவும். நீங்கள் சேர்த்துள்ள தொடர்புகளின் பட்டியல் காட்டப்படும்.
  2. மேலே இடதுபுறத்தில் உள்ள சேர்தொடர்பை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. சேர்க்க வேண்டியவரின் தொடர்புத் தகவலை டைப் செய்யவும்.
  4. சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பிறரைத் தொடர்புகொள்ளும்போது அவர்களின் தொடர்புத் தகவலைச் சேமித்தல்

Google தயாரிப்புகளில் பிறரைத் தொடர்புகொள்ளும்போது அவர்களது தொடர்புத் தகவலைத் தானாகச் சேமிக்கலாம். அதில் அடங்குபவை:

  • பெயர்கள்
  • மின்னஞ்சல் முகவரிகள்
  • ஃபோன் எண்கள்

இந்த அமைப்பு இயக்கப்பட்டிருந்தால் இவர்களின் தொடர்புத் தகவலை நீங்கள் தொடர்ந்து வைத்துக்கொள்ள முடியும்:

  • Gmailலில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பியவர்கள்.
  • Driveவில் ஆவணம் போன்ற எதையேனும் நீங்கள் பகிர்ந்தவர்கள்.
  • Google Photosஸில் உள்ள பகிர்ந்த ஆல்பங்கள் போன்ற உள்ளடக்கத்தை உங்களுடன் பகிர்பவர்கள்.
  • நீங்கள் அங்கம் வகிக்கும் நிகழ்வுகள் அல்லது குழுக்களில் உள்ளவர்கள்.
  • தெரிந்தவர் என்று நீங்கள் குறிப்பவர்கள்.
  • நீங்கள் ஏற்றுக்கொண்ட கேலெண்டர் அழைப்புகளை அனுப்பியவர்கள்.

தானாகச் சேமிக்கப்படுவதைத் தொடங்குதல் அல்லது நிறுத்துதல்

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. நபர்களும் பகிர்தலும் என்பதைத் தட்டவும்.
  3. "தொடர்புகள்" பேனலில் உள்ள நீங்கள் தொடர்புகொண்டதன் அடிப்படையில் சேமிக்கப்பட்ட தொடர்புத் தகவல் என்பதைத் தட்டவும்.
  4. பிறரைத் தொடர்புகொள்ளும் போது, தொடர்புத் தகவலைச் சேமிக்கவும் என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.
  5. Gmailலைப் பயன்படுத்தினால், நீங்கள் மின்னஞ்சல் அனுப்புபவர்களின் தொடர்புத் தகவலை Gmail சேமிக்கலாமா என்பதைத் தேர்வுசெய்யவும்:
    1. கம்ப்யூட்டரில் Gmail அமைப்புகளுக்குச் செல்லவும்.
    2. "தானாக நிரப்புவதற்காகத் தொடர்புகளை உருவாக்கு" என்பதற்குக் கீழே ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
    3. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மாற்றங்களைச் சேமி என்பதைத் தட்டவும்.

சேமித்த தொடர்புகளைப் பரிந்துரைகளில் இருந்து மறைத்தல்

பரிந்துரைக்கப்படும் தொடர்புகளை மறைத்தல் அல்லது காட்டுதல்

Gmail, Photos போன்ற சில Google சேவைகளில், பரிந்துரைக்கப்படும் தொடர்பை நிரந்தரமாக நீக்காமல் மறைக்கலாம்.

  1. பிரவுசரில் Gmail அல்லது Photosஸைத் திறக்கவும்.
    • Gmailலில்: மேல் இடதுபுறத்தில் உள்ள எழுது என்பதைக் கிளிக் செய்யவும்.
    • Photos:
      1. படத்தையோ ஆல்பத்தையோ தேர்ந்தெடுக்கவும்.
      2. பகிர் Share என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. பரிந்துரைகள் காட்டப்பட, "பெறுநர்:" பட்டியில் ஒரு பெயரை டைப் செய்யவும்.
  3. நீங்கள் மறைக்க விரும்பும் தொடர்பின் மீது வலது கிளிக் செய்யவும்.
  4. பரிந்துரையை மறை என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. மறைக்கப்பட்ட பரிந்துரைக்கப்படும் தொடர்பைப் பார்க்க:
    1. அவர் பெயரை டைப் செய்யவும்.
    2. மறைக்கப்பட்ட பரிந்துரைகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புகளில் மாற்றங்கள் செய்தல் அல்லது அகற்றுதல்

பரிந்துரைகளில் இடம்பெறுபவர்களை அகற்ற, இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

நீங்கள் சேர்த்துள்ள தொடர்புகள்
  1. Google Contactsஸில் உள்நுழையவும்.
  2. தொடர்பின் மீது கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.
  3. இங்கே இவற்றைச் செய்யலாம்:
    • தகவலை மாற்றுதல்: மேலே வலதுபுறத்தில் திருத்து அதன் பிறகு சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • தொடர்பை அகற்றுதல்: மேலே வலதுபுறத்தில், மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தானாகச் சேமிக்கப்பட்ட தொடர்புகள்
  1. Google Contactsஸில் உள்நுழையவும்.
  2. இடதுபுறத்தில், பிற தொடர்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. தொடர்பின் மீது கிளிக் செய்யவும் அல்லது தட்டவும்.
  4. இங்கே இவற்றைச் செய்யலாம்:
    • தகவலை மாற்றுதல்: மேலே வலதுபுறத்தில் திருத்து அதன் பிறகு சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • தொடர்பை அகற்றுதல்: மேலே வலதுபுறத்தில், மூன்று புள்ளி மெனுவை மேலும் கிளிக் செய்து அதன் பிறகு நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அந்தத் தொடர்பு மீண்டும் சேர்க்கப்படுவதைத் தவிர்க்க, தானாகச் சேமிப்பதை நிறுத்துவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
14199973488473086833
true
உதவி மையத்தில் தேடுக
false
true
true
true
true
true
70975
false
false
false
false