யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும், பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதை மாற்றுதல்

சில Google சேவைகளைப் பயன்படுத்தும்போது தொடர்புகள் பரிந்துரைக்கப்படும். உதாரணமாக, Gmailலில் புதிதாக மின்னஞ்சல் அனுப்ப 'பெறுநர்' புலத்தில் ஒருவரின் பெயரை டைப் செய்யும்போதே பரிந்துரைகள் காட்டப்படும். யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும், பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

பரிந்துரைகளில் இடம்பெறுபவர்கள்

உங்கள் தொடர்புகள் மற்றும் உரையாடல்கள் தொடர்பான பல்வேறு செயல்களின் (தொடர்பு நட்சத்திரமிடப்பட்டிருப்பது, சமீபத்தில் தொடர்பிற்கு மின்னஞ்சல் அனுப்பியது போன்றவை) அடிப்படையில் பரிந்துரைகள் காட்டப்படுகின்றன. நீங்கள் தொடர்புகளில் சேர்த்துள்ளவர்களும் பரிந்துரைக்கப்படும் தொடர்புகளில் அடங்குவர். நீங்கள் Google சேவைகளில் தொடர்புகொண்டவர்கள் "பிற தொடர்புகளில்" தானாகவே சேமிக்கப்படுவார்கள்.

உதவிக்குறிப்பு: தொடர்புகள் தானாகச் சேமிக்கப்படுவதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துதல்

நீங்களாகவே தொடர்புகளைச் சேர்த்தல்
  1. Google Contactsஸில் உள்நுழையவும். நீங்கள் சேர்த்த தொடர்புகளின் பட்டியலைப் பார்ப்பீர்கள்.
  2. மேல் இடதுபுறத்தில் 'கேள்வியைச் சேர்தொடர்பை உருவாக்கு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நபரின் தொடர்புத் தகவல்களை உள்ளிடவும்.
  4. சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பிறரைத் தொடர்புகொள்ளும்போது அவர்களின் தொடர்புத் தகவல்களைச் சேமித்தல்

Google தயாரிப்புகளில் பிறரைத் தொடர்புகொள்ளும்போது அவர்களது தொடர்புத் தகவலைத் தானாகச் சேமிக்கலாம். அதில் அடங்குபவை:

  • பெயர்கள்
  • மின்னஞ்சல் முகவரிகள்
  • ஃபோன் எண்கள்

இந்த அமைப்பு இயக்கப்பட்டிருந்தால் இவர்களின் தொடர்புத் தகவலை நீங்கள் சேமித்து வைக்க முடியும்:

  • Driveவில் உள்ள ஆவணம் போன்ற எதையேனும் நீங்கள் பகிர்ந்திருக்கும் நபர்கள்.
  • Google Photosஸில் உள்ள பகிர்ந்த ஆல்பங்கள் போன்ற உள்ளடக்கத்தை உங்களுடன் பகிர்பவர்கள்.
  • நீங்கள் அங்கம் வகிக்கும் நிகழ்வுகள் அல்லது குழுக்களில் உள்ளவர்கள்.
  • தெரிந்தவர் என நீங்கள் குறித்துள்ளவர்கள்.

தானாகச் சேமிக்கப்படுவதைத் தொடங்குதல் அல்லது நிறுத்துதல்

  1. உங்கள் Google கணக்கு பக்கத்திற்குச் செல்லவும்.
  2. இடதுபுறம் உள்ள வழிசெலுத்தல் பேனலில் நபர்களும் பகிர்தலும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "தொடர்புகள்" பேனலில் உள்ள தொடர்புகொண்டதன் அடிப்படையில் சேமிக்கப்பட்ட தொடர்புத் தகவல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நான் தொடர்புகொள்பவர்களின் தொடர்புத் தகவலைச் சேமி என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.
  5. Gmailலைப் பயன்படுத்தினால், நீங்கள் மின்னஞ்சல் அனுப்புபவர்களின் தொடர்புத் தகவலை Gmail சேமிக்கலாமா என்பதைத் தேர்வுசெய்யவும்:
    1. கம்ப்யூட்டரில் Gmail அமைப்புகளுக்குச் செல்லவும்.
    2. "தானாக நிரப்புவதற்காகத் தொடர்புகளை உருவாக்குதல்" என்பதற்குக் கீழே ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
    3. பக்கத்தின் கீழ்ப்பகுதியில், மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புகளை மாற்றுதல் அல்லது அகற்றுதல்

தொடர்புப் பரிந்துரைகள் காட்டப்படுவதை நிறுத்த, கீழுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி அவற்றை அகற்றலாம்.

நீங்கள் சேர்த்த தொடர்புகள்
  1. Google Contactsஸில் உள்நுழையவும்.
  2. ஒரு தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும்.
    • தகவல்களை மாற்றுதல்:
      1. கீழ் வலதுபுறத்தில் 'மாற்று திருத்து' என்பதைத் தட்டவும்.
      2. நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைச் செய்யவும்.
      3. மேல் வலதுபுறத்தில் சேமி என்பதைத் தட்டவும்.
    • தொடர்பை அகற்றுதல்: மேல் வலதுபுறத்தில் 'மேலும் மேலும்' அதன் பிறகு நீக்கு என்பதைத் தட்டவும்.
தானாகச் சேமிக்கப்பட்ட தொடர்புகள்
  1. Google Contactsஸில் உள்நுழையவும்.
  2. இடதுபுறத்தில் பிற தொடர்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஒரு தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும்.
    • தகவல்களை மாற்றுதல்:
      1. மேல் வலதுபுறத்தில் 'தொடர்புகளில் சேர் Add people' என்பதைத் தட்டவும்.
      2. நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைச் செய்யவும்.
      3. கீழ்ப்பகுதியில் சேமி என்பதைத் தட்டவும்.
    • தொடர்பை அகற்றுதல்:
      1. மேல் வலதுபுறத்தில், மேலும் மேலும் அதன் பிறகு நீக்கு என்பதைத் தட்டவும்.
      2. அந்தத் தொடர்பு மீண்டும் சேர்க்கப்படுவதைத் தவிர்க்க, தானாகச் சேமிப்பதை நிறுத்துவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10319408196468491040
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false