யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும், பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதை மாற்றுதல்

சில Google சேவைகளைப் பயன்படுத்தும்போது தொடர்புகள் பரிந்துரைக்கப்படும். உதாரணமாக, Gmailலில் புதிதாக மின்னஞ்சல் அனுப்ப 'பெறுநர்' புலத்தில் ஒருவரின் பெயரை டைப் செய்யும்போதே பரிந்துரைகள் காட்டப்படும். யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும், பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

பரிந்துரைகளில் இடம்பெறுபவர்கள்

உங்கள் தொடர்புகள் மற்றும் உரையாடல்கள் தொடர்பான பல்வேறு செயல்களின் (தொடர்பு நட்சத்திரமிடப்பட்டிருப்பது, சமீபத்தில் தொடர்பிற்கு மின்னஞ்சல் அனுப்பியது போன்றவை) அடிப்படையில் பரிந்துரைகள் காட்டப்படுகின்றன. நீங்கள் தொடர்புகளில் சேர்த்துள்ளவர்களும் பரிந்துரைக்கப்படும் தொடர்புகளில் அடங்குவர். நீங்கள் Google சேவைகளில் தொடர்புகொண்டவர்கள் "பிற தொடர்புகளில்" தானாகவே சேமிக்கப்படுவார்கள்.

உதவிக்குறிப்பு: தொடர்புகள் தானாகச் சேமிக்கப்படுவதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துதல்

நீங்களாகவே தொடர்புகளைச் சேர்த்தல்
  1. உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ 'தொடர்புகள் ' என்பதைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபுறத்தில் 'சேர் கேள்வியைச் சேர்' என்பதைத் தட்டவும்.
  3. நபரின் தொடர்புத் தகவல்களை உள்ளிடவும்.
  4. சேமி என்பதைத் தட்டவும்.
பிறரைத் தொடர்புகொள்ளும்போது அவர்களின் தொடர்புத் தகவல்களைச் சேமித்தல்

குறிப்பிட்ட சில Google சேவைகளில் நீங்கள் தொடர்புகொள்பவர்களின் தொடர்புத் தகவல்கள் தானாகச் சேமிக்கப்பட வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு:

  • Driveவில் உள்ள ஆவணம் போன்ற எதையேனும் நீங்கள் பகிர்ந்துள்ளவர்கள்.
  • உங்களுடன் நிகழ்வுகள், குழுக்கள் அல்லது உள்ளடக்கத்தில் (Google Photosஸில் உள்ள பகிர்ந்த ஆல்பம் போன்றவை) பங்கேற்பவர்கள்.
  • 'தெரிந்தவர்' என நீங்கள் குறித்துள்ளவர்கள்.

தானாகச் சேமிப்பதைத் தொடங்குதல் அல்லது நிறுத்துதல்

  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  2. மேல்பகுதியில் நபர்களும் பகிர்தலும் என்பதைத் தட்டவும்.
  3. "தொடர்புகள்" என்பதற்குக் கீழ், நீங்கள் தொடர்புகொண்டதன் அடிப்படையில் சேமிக்கப்பட்ட தொடர்புத் தகவல் என்பதைத் தட்டவும்.
  4. நீங்கள் தொடர்புகொள்பவர்களின் தொடர்புத் தகவலைச் சேமித்தல் என்பதை இயக்கவும்/முடக்கவும்.
  5. Gmailலைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், நீங்கள் மின்னஞ்சல் அனுப்புபவர்களின் தொடர்புத் தகவல்களை Gmail சேமிக்கலாமா என்பதைத் தேர்வுசெய்யவும்:
    1. கம்ப்யூட்டரில் உங்கள் Gmail அமைப்புகளுக்குச் செல்லவும்.
    2. "தானாக நிரப்புவதற்குத் தொடர்புகளை உருவாக்குதல்" என்பதற்குக் கீழ் ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
    3. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புகளை மாற்றுதல் அல்லது அகற்றுதல்

தொடர்புகளை மாற்ற/அகற்ற இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

நீங்கள் சேர்த்த தொடர்புகள்
  1. உங்கள் Android சாதனத்தில் 'தொடர்புகள் ' என்பதைத் திறக்கவும்.
  2. ஒரு தொடர்பைத் தட்டவும்.
    • தகவல்களை மாற்றுதல்:
      1. மேல் வலதுபுறத்தில் உள்ள, மாற்று திருத்து என்பதைத் தட்டவும்.
      2. நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைச் செய்யவும்.
      3. மேல் வலதுபுறத்தில் சேமி என்பதைத் தட்டவும்.
    • தொடர்பை அகற்றுதல்: மேல் வலதுபுறத்தில் உள்ள, மேலும் மேலும் அதன் பிறகு நீக்கு என்பதைத் தட்டவும்.
தானாகச் சேமிக்கப்பட்ட தொடர்புகள்
  1. உங்கள் Android சாதனத்தில் 'தொடர்புகள் ' என்பதைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள தேடல் பட்டியைத் தட்டவும்.
    • நீங்கள் மாற்ற விரும்பும் தொடர்பைத் தேடவும்.
  3. தேடல் முடிவுகளின் 'பிற தொடர்புகள்' பிரிவில், நீங்கள் மாற்ற விரும்பும் தொடர்பைத் தட்டவும்.
  4. மேல் வலதுபுறத்தில் தொடர்புகளில் சேர் அதன் பிறகு மாற்று என்பதைத் தட்டவும்.
    • நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைச் செய்யவும்.
  5. மேல் வலதுபுறத்தில் சேமி என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்புகள்: 

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1907348230243313932
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false