யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும், பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதை மாற்றுதல்

சில Google சேவைகளைப் பயன்படுத்தும்போது தொடர்புகள் பரிந்துரைக்கப்படும். உதாரணமாக, Gmailலில் புதிதாக மின்னஞ்சல் அனுப்ப 'பெறுநர்' புலத்தில் ஒருவரின் பெயரை டைப் செய்யும்போதே பரிந்துரைகள் காட்டப்படும். யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும், பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

பரிந்துரைகளில் இடம்பெறுபவர்கள்

உங்கள் தொடர்புகள் மற்றும் உரையாடல்கள் தொடர்பான பல்வேறு செயல்களின் (தொடர்பு நட்சத்திரமிடப்பட்டிருப்பது, சமீபத்தில் தொடர்பிற்கு மின்னஞ்சல் அனுப்பியது போன்றவை) அடிப்படையில் பரிந்துரைகள் காட்டப்படுகின்றன. நீங்கள் தொடர்புகளில் சேர்த்துள்ளவர்களும் பரிந்துரைக்கப்படும் தொடர்புகளில் அடங்குவர். நீங்கள் Google சேவைகளில் தொடர்புகொண்டவர்கள் "பிற தொடர்புகளில்" தானாகவே சேமிக்கப்படுவார்கள்.

உதவிக்குறிப்பு: தொடர்புகள் தானாகச் சேமிக்கப்படுவதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

யாரெல்லாம் தொடர்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துதல்

நீங்களே தொடர்புகளைச் சேர்த்தல்
  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் தொடர்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபுறத்தில் உள்ள, சேர் கேள்வியைச் சேர் என்பதைத் தட்டவும்.
  3. சேர்க்க வேண்டியவரின் தொடர்புத் தகவலை டைப் செய்யவும்.
  4. சேமி என்பதைத் தட்டவும்.
பிறரைத் தொடர்புகொள்ளும்போது அவர்களின் தொடர்புத் தகவலைச் சேமித்தல்

நீங்கள் தொடர்புகொள்பவர்களின் தொடர்புத் தகவல் குறிப்பிட்ட சில Google சேவைகளில் தானாகச் சேமிக்கப்பட வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு:

  • Gmailலில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் நபர்கள்.
  • Driveவில் உள்ள ஆவணம் போன்ற எதையேனும் நீங்கள் பகிர்ந்த நபர்கள்.
  • உங்களுடன் நிகழ்வுகள், குழுக்கள் அல்லது உள்ளடக்கத்தில் (எ.கா.Google Photosஸில் உள்ள பகிர்ந்த ஆல்பம்) தொடர்புடையவர்கள்.
  • தெரிந்தவர் என நீங்கள் குறித்துள்ளவர்கள்.

தானாகச் சேமிக்கப்படுவதைத் தொடங்குதல் அல்லது நிறுத்துதல்

  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  2. மேற்புறத்தில் உள்ள நபர்கள் & பகிர்தல் என்பதைத் தட்டவும்.
  3. "தொடர்புகள்" என்பதற்குக் கீழே உள்ள தொடர்புகொண்டதன் மூலம் சேமிக்கப்பட்ட தொடர்புத் தகவல் என்பதைத் தட்டவும்.
  4. நான் தொடர்புகொள்பவர்களின் தொடர்புத் தகவலைச் சேமி என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.
  5. Gmailலைப் பயன்படுத்தினால், நீங்கள் மின்னஞ்சல் அனுப்புபவர்களின் தொடர்புத் தகவலை Gmail சேமிக்கலாமா என்பதைத் தேர்வுசெய்யவும்:
    1. கம்ப்யூட்டரில் Gmail அமைப்புகளுக்குச் செல்லவும்.
    2. "தானாக நிரப்புவதற்காகத் தொடர்புகளை உருவாக்குதல்" என்பதற்குக் கீழே ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
    3. பக்கத்தின் கீழ்ப்பகுதியில் மாற்றங்களைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புகளைத் திருத்துதல் அல்லது அகற்றுதல்

தொடர்புகளைத் திருத்த அல்லது அகற்ற இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

நீங்கள் சேர்த்துள்ள தொடர்புகள்
  1. உங்கள் Android சாதனத்தில் Contacts ஆப்ஸை திறக்கவும்.
  2. தொடர்பைத் தட்டவும்.
    • தகவலை மாற்றுதல்:
      1. மேலே வலதுபுறத்தில், திருத்துவதற்கான ஐகானை திருத்து தட்டவும்.
      2. தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
      3. மேலே வலதுபுறத்தில், சேமி என்பதைத் தட்டவும்.
    • தொடர்பை அகற்றுதல்: மேலே வலதுபுறத்தில், மூன்று புள்ளி மெனுவை மேலும் தட்டி அதன் பிறகு நீக்கு என்பதைத் தட்டவும்.
தானாகச் சேமிக்கப்பட்ட தொடர்புகள்
  1. உங்கள் Android சாதனத்தில் Contacts ஆப்ஸை திறக்கவும்.
  2. மேலே, தேடல் பட்டியைத் தட்டவும்.
    • நீங்கள் திருத்த விரும்பும் தொடர்பைத் தேடவும்.
  3. தேடல் முடிவுகளின் 'பிற தொடர்புகள்' பிரிவில், நீங்கள் சரிபார்க்க விரும்பும் தொடர்பைத் தட்டவும்.
  4. மேலே வலதுபுறத்தில், தொடர்புகளில் சேர் அதன் பிறகு  திருத்து என்பதைத் தட்டவும்.
    • தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
  5. மேலே வலதுபுறத்தில், சேமி என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்புகள்: 

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12830980251047697808
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false