கடவுச்சொல்லுக்குப் பதிலாக கடவுச்சாவியைப் பயன்படுத்தி உள்நுழைதல்

கடவுச்சாவிகள் என்பவை கடவுச்சொற்களுக்கான ஓர் எளிமையான, பாதுகாப்பான மாற்று வழியாகும். கடவுச்சாவியின் மூலம் உங்கள் கைரேகை, முக ஸ்கேன் அல்லது சாதனத் திரைப் பூட்டை ('பின்') பயன்படுத்தி உங்கள் Google கணக்கில் உள்நுழையலாம்.

ஃபிஷிங் போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிரான உறுதியான பாதுகாப்பைக் கடவுச்சாவிகள் வழங்குகின்றன. ஒருமுறை ஒரு கடவுச்சாவியை உருவாக்கிவிட்டால் அதைப் பயன்படுத்தி உங்கள் Google கணக்கிலும், சில மூன்றாம் தரப்பு ஆப்ஸ், சேவைகள் ஆகியவற்றிலும் சுலபமாக உள்நுழையலாம் மற்றும் முக்கியமான மாற்றங்களைச் செய்யும்போது அதைச் செய்வது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தலாம்.

முக்கியம்:

  • உங்கள் கணக்கில் இருபடிச் சரிபார்ப்பு இயக்கப்பட்டிருந்தாலோ மேம்பட்ட பாதுகாப்புத் திட்டம் பதிவுசெய்யப்பட்டிருந்தாலோ, சாதனம் உங்களிடம்தான் உள்ளது என்பதைக் கடவுச்சாவி உறுதிப்படுத்துவதால் இந்த இரண்டாவது அங்கீகரிப்புப் படி தவிர்க்கப்படும்.
  • கைரேகை, முகம் காட்டித் திறத்தல் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் உங்கள் பயோமெட்ரிக் டேட்டா, சாதனத்தில் மட்டுமே இருக்கும், ஒருபோதும் Google உடன் பகிரப்படாது.

கடவுச்சாவியை உருவாக்கத் தேவையானவை

இந்தச் சாதனங்களில் கடவுச்சாவிகளை உருவாக்கலாம்:

  • குறைந்தபட்சம் Windows 10, macOS Ventura அல்லது ChromeOS 109 பதிப்பில் இயங்கும் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்
  • குறைந்தபட்சம் iOS 16 அல்லது Android 9 பதிப்பில் இயங்கும் மொபைல் சாதனம்
  • FIDO2 நெறிமுறையை ஆதரிக்கும் வன்பொருள் பாதுகாப்பு விசை

உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் கீழ்க்காணும் ஆதரிக்கப்படும் உலாவிகளில் ஏதேனும் ஒன்றும் இருக்க வேண்டும்:

  • Chrome 109 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு
  • Safari 16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு
  • Edge 109 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு
  • FireFox 122 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு

கடவுச்சாவியை உருவாக்கிப் பயன்படுத்த, நீங்கள் இவற்றை இயக்க வேண்டும்:

  • திரைப் பூட்டு
  • புளூடூத்
    • வேறொரு கம்ப்யூட்டரில் உள்நுழைய உங்கள் மொபைலில் கடவுச்சாவியைப் பயன்படுத்த விரும்பினால் இது பொருந்தும்.
  • iOS அல்லது macOSஸில்: iCloud Keychainனை இயக்க வேண்டும்.
    • உங்கள் Apple சாதனத்தில் கடவுச்சாவியை அமைக்கும்போது, ஏற்கெனவே நீங்கள் iCloud Keychainனை இயக்கியிருக்காவிட்டால் அதை இயக்குமாறு உங்களிடம் கேட்கப்படும். iCloud Keychainனை அமைப்பது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, இங்கே செல்லவும்.

உதவிக்குறிப்பு: கடவுச்சாவிகளைப் பயன்படுத்துவதில் சிறப்பான அனுபவத்தைப் பெற, உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டமும் உலாவியும் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் உலாவியின் அடிப்படையில், மறைநிலைப் பயன்முறையில் உங்களால் கடவுச்சாவிகளை உருவாக்கவோ பயன்படுத்தவோ முடியாமல் போகலாம்.

Google Workspaceஸிற்கான கடவுச்சாவிகள்

பள்ளி அல்லது பணியிடத்தில் வழங்கப்பட்ட Google Workspace கணக்கை நீங்கள் பயன்படுத்தினால், வெறும் கடவுச்சாவியை மட்டும் பயன்படுத்தி உங்களால் உள்நுழைய முடியாமல் போகலாம். இருந்தாலும், உங்கள் சாதனங்களில் கடவுச்சாவிகளை நீங்கள் உருவாக்கலாம். ஆனால், Google உங்கள் அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்தக் கோரும் கணக்கு மீட்டெடுப்பு, சில முக்கியமான செயல்களைச் செய்தல் போன்றவற்றுக்கான இருபடிச் சரிபார்ப்பில் மட்டுமே அவற்றை உங்களால் பயன்படுத்த முடியும்.

"முடிந்தால் கடவுச்சொல் சரிபார்ப்பைத் தவிர்" கணக்கு அமைப்புகள் பக்கத்தில், வெறும் கடவுச்சாவியை மட்டும் பயன்படுத்தி உள்நுழைய உங்கள் நிர்வாகி உங்களை அனுமதித்துள்ளாரா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

Workspace நிர்வாகிகள் இங்கு மேலும் தெரிந்துகொள்ளலாம்.

கடவுச்சாவிகளை அமைத்தல்

முக்கியம்: கடவுச்சாவியை உருவாக்கும்போது, அதை முதன்மையாகக் கருதும் கடவுச்சொல் இல்லா உள்நுழைவு அனுபவத்திற்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளவும். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தனிப்பட்ட சாதனங்களில் மட்டும் கடவுச்சாவிகளை உருவாக்கவும். ஒரு சாதனத்தில் ஒருமுறை நீங்கள் கடவுச்சாவியை உருவாக்கிவிட்டால், அந்தச் சாதனத்தில் உங்கள் Google கணக்கில் இருந்து நீங்கள் வெளியேறிவிட்டாலும், உங்கள் சாதனத்தை அன்லாக் செய்யக்கூடிய எவராலும் கடவுச்சாவியைப் பயன்படுத்தி உங்கள் Google கணக்கில் உள்நுழைய முடியும்.

கடவுச்சாவியை அமைக்க, உங்கள் Google கணக்கில் உள்நுழைய வேண்டியிருக்கலாம் அல்லது உள்நுழைவது நீங்கள்தான் என உறுதிப்படுத்த வேண்டியிருக்கலாம்.

கடவுச்சாவியை உருவாக்குதல்
உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் கடவுச்சாவியை உருவாக்க:
  1. https://myaccount.google.com/signinoptions/passkeys தளத்திற்குச் செல்லவும்.
  2. கடவுச்சாவியை உருவாக்கு அதன் பிறகு தொடர்க என்பதைத் தட்டவும்.
    • உங்கள் சாதனத்தை அன்லாக் செய்ய வேண்டியிருக்கலாம்.

பல சாதனங்களில் கடவுச்சாவிகளை உருவாக்க ஒவ்வொரு சாதனத்திலும் இந்தப் படிகளைச் செய்யவும்.

FIDO2 திறனுள்ள வெளிப்புற USB பாதுகாப்பு விசையில் கடவுச்சாவியை உருவாக்க:

  1. https://myaccount.google.com/signinoptions/passkeys தளத்திற்குச் செல்லவும்.
  2. கடவுச்சாவியை உருவாக்கு அதன் பிறகு வேறொரு சாதனத்தைப் பயன்படுத்து என்பதைத் தட்டவும்.
  3. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
    • உங்கள் வன்பொருள் பாதுகாப்பு விசையைச் செருகி அதன் பின்னை வழங்க வேண்டும் அல்லது விசையின் மீதுள்ள கைரேகை சென்சாரைத் தொட வேண்டும்.

உதவிக்குறிப்புகள்:

  • உங்கள் முதல் கடவுச்சாவியை உருவாக்கியபிறகு, கடவுச்சாவிகளை ஆதரிக்கும் எந்தவொரு சாதனத்திலும் நீங்கள் உள்நுழையும்போது, அந்தச் சாதனத்தில் கடவுச்சாவியை உருவாக்குமாறு கேட்கப்படும்.
  • உங்கள் கணக்கைப் பிற பயனர்கள் அணுக வேண்டாம் என நீங்கள் நினைத்தால் பலர் பயன்படுத்தும் சாதனத்தில் கடவுச்சாவியை உருவாக்க வேண்டாம்.

உங்கள் கடவுச்சாவியைப் பயன்படுத்தி உள்நுழைதல்

நீங்கள் ஏற்கெனவே கடவுச்சாவியை உருவாக்கியுள்ள சாதனத்தில் உங்கள் கணக்கில் உள்நுழைய:

Android சாதனத்தில் இருந்து வெளியேறியபிறகு, மாற்று முறையைப் பயன்படுத்தி மீண்டும் உள்நுழைய வேண்டும். நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது உங்கள் அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கும் வகையில் ஏதேனும் முக்கியமான செயல்களைச் செய்யும்போது அந்த Android சாதனத்தில் உள்ள கடவுச்சாவியையே பயன்படுத்தலாம்.

Android அல்லாத பிற சாதனங்களில் உங்கள் கணக்கில் மீண்டும் உள்நுழையவும், உள்நுழைந்திருக்கும்போது உங்கள் அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும் கடவுச்சாவியைப் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் சாதனத்தில் Google உள்நுழைவுப் பக்கத்தில் உங்கள் பயனர்பெயரை வழங்கவும்.
  2. அந்தச் சாதனத்தில் உங்கள் கணக்கிற்காக ஏற்கெனவே கடவுச்சாவியை உருவாக்கியிருந்தால், அந்தச் சாதனத்தின் கடவுச்சாவியின் மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு Google உங்களிடம் கேட்கும்.
    • சாதனத்தை அன்லாக் செய்து உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த, திரையில் தோன்றும் கடவுச்சாவிக்கான அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
      • உங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் உலாவியைப் பொறுத்து, காட்டப்படும் UI மாறுபடும்.
    • அரிதான சில நேரங்களில், சாதனத்தில் கடவுச்சாவி இருந்தாலும் கடவுச்சொல்லை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.
      • கடவுச்சாவிக்கான ப்ராம்ப்ட்டைப் பெற முயற்சிப்பதற்கு, "வேறு வழியில் முயற்சிக்கவும்" விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.
கம்ப்யூட்டரில் உங்கள் கணக்கில் உள்நுழைய மொபைல் சாதனத்தில் உருவாக்கிய கடவுச்சாவியைப் பயன்படுத்தலாம்:
உங்களிடம் Android அல்லது iOS மொபைல் சாதனத்தில் கடவுச்சாவி இருந்தால், வேறொரு மொபைல் சாதனத்திலோ கம்ப்யூட்டரிலோ உள்நுழைய அந்தக் கடவுச்சாவியைப் பயன்படுத்தலாம்.
  1. கம்ப்யூட்டரில் Google உள்நுழைவுப் பக்கத்தில் உங்கள் பயனர்பெயரை வழங்கவும்.
  2. கடவுச்சொல் புலத்திற்குக் கீழே உள்ள வேறு வழியில் முயற்சிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் கடவுச்சாவியைப் பயன்படுத்துங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. திரையில் உள்ள QR குறியீட்டைக் கண்டறியவும்.
    • வன்பொருள் பாதுகாப்பு விசையில் உருவாக்கப்பட்ட கடவுச்சாவியைப் பயன்படுத்த விரும்பினால், "USB பாதுகாப்பு விசை" அல்லது அதற்கு நிகரான வேறொன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
  5. QR குறியீட்டை ஸ்கேன் செய்ய, உங்கள் மொபைலில் உள்ள QR குறியீடு ஸ்கேனர் ஆப்ஸைப் பயன்படுத்தவும்.
    • iOS சாதனங்களில்: சாதனத்தில் உள்ள கேமரா ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.
    • Google Pixel ஃபோன்களில்: சாதனத்தில் உள்ள QR குறியீடு ஸ்கேனரைப் பயன்படுத்தலாம்.
    • பிற Android சாதனங்களில்: சாதனத்தின் இயல்புநிலை கேமரா ஆப்ஸ் அல்லது சிஸ்டத்தின் QR குறியீடு ஸ்கேனரைப் பயன்படுத்தி QR குறியீட்டை உங்களால் ஸ்கேன் செய்ய முடியவில்லை என்றால், Google Lensஸைப் பயன்படுத்தலாம்.
  6. மொபைலில் தோன்றும், கடவுச்சாவியைப் பயன்படுத்து என்பதைத் தட்டவும்.
    • மொபைலில் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த, கைரேகை, முகம் காட்டித் திறத்தல் அல்லது ஃபோன் பின்னை வழங்குதல் போன்ற ஒன்றைச் செய்யுமாறு உங்களிடம் கேட்கப்படும்.
    • அடுத்தமுறை இதே கம்ப்யூட்டர் மற்றும் மொபைலைப் பயன்படுத்தி உள்நுழையும்போது, அடையாளச் சரிபார்ப்புச் செயல்முறையை நிறைவுசெய்யுமாறு உங்கள் மொபைலில் அறிவிப்பு தானாகவே காட்டப்படும்.

உதவிக்குறிப்பு: உள்நுழைந்த பிறகு, கம்ப்யூட்டரில் கடவுச்சாவியை உருவாக்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். உங்கள் கணக்கைப் பிற பயனர்கள் அணுக வேண்டாம் என நீங்கள் நினைத்தால் பலர் பயன்படுத்தும் சாதனத்தில் கடவுச்சாவியை உருவாக்க வேண்டாம்.

கடவுச்சாவிகளைச் சரிபார்த்தல்

  1. https://myaccount.google.com/signinoptions/passkeys தளத்திற்குச் செல்லவும்.
  2. உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்படி கேட்கப்படலாம்.
    • உதவிக்குறிப்பு: பல கணக்குகளில் உள்நுழைந்திருந்தால், நீங்கள் விரும்பும் கணக்கில் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதை உறுதிசெய்துகொள்ளவும்.

உங்கள் கணக்கில் ஏற்கெனவே கடவுச்சாவிகள் இருந்தால் அவை இங்கே பட்டியலிடப்பட்டிருக்கும்.

  • உதவிக்குறிப்பு: இந்தக் கணக்கின் மூலம் உள்நுழைந்த Android மொபைல் உங்களிடம் இருந்தால் கடவுச்சாவிகள் உங்களுக்காகத் தானாகவே பதிவுசெய்யப்பட்டு இருக்கலாம்.

கடவுச்சாவிகளை அகற்றுதல் அல்லது அவற்றுக்கான ஒப்புதல்களை நீக்குதல்

கடவுச்சாவியை அகற்றுதல்
நீங்கள் கடவுச்சாவியை உருவாக்கிய சாதனத்தைத் தொலைத்துவிட்டாலோ பலர் பயன்படுத்தும் சாதனத்தில் கடவுச்சாவியைத் தவறுதலாக உருவாக்கியிருந்தாலோ உங்கள் Google கணக்கில் அந்தக் கடவுச்சாவியின் பயன்பாட்டைச் செல்லாததாக மாற்ற வேண்டும்.

நீங்கள் உருவாக்கிய கடவுச்சாவியை அகற்றுதல்

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
    • நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. "நீங்கள் Google இல் உள்நுழைவது எப்படி" என்பதற்குக் கீழே உள்ள கடவுச்சாவிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அகற்ற விரும்பும் கடவுச்சாவியைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. ஐகானைத் தட்டவும்.

தானாகவே Android உருவாக்கிய கடவுச்சாவியை அகற்றுதல்

உங்கள் Android சாதனத்தில் தானாக உருவாக்கப்பட்ட கடவுச்சாவியை அகற்ற, அந்தச் சாதனத்தை உங்கள் Google கணக்கில் இருந்து அகற்றவும்.

  1. எனது Google கணக்கு என்பதற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள வழிசெலுத்தல் பேனலில், பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் சாதனங்கள் பேனலில், அனைத்துச் சாதனங்களையும் நிர்வகியுங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சாதனத்தைத் தேர்ந்தெடுத்து and then வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. ஒரே சாதனப் பெயருடன் பல்வேறு அமர்வுகள் காட்டப்பட்டால் அவை அனைத்தும் ஒரே சாதனத்தில் இருந்தோ பல்வேறு சாதனங்களில் இருந்தோ காட்டப்படலாம். ஒரு சாதனத்திற்குக் கணக்கு அணுகல் இல்லை என்பதை உறுதிசெய்ய விரும்பினால் அந்தச் சாதனப் பெயரில் காட்டப்படும் அனைத்து அமர்வுகளில் இருந்தும் வெளியேறவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் கணக்கிற்கான அணுகல் உள்ள சாதனங்களை google.com/devices தளத்தில் பார்க்கலாம்.

கடவுச்சாவிகளைப் பயன்படுத்தி உள்நுழைவதற்கான ஒப்புதல்களை நீக்குதல்
கடவுச்சாவி மூலம் உள்நுழைவதற்கான ஒப்புதலை நீக்கினாலும், உங்கள் கணக்கில் அனைத்து கடவுச்சாவிகளும் தொடர்ந்து தக்கவைக்கப்படும். இனிவரும் உள்நுழைவுகள் அனைத்திற்கும் உள்ளமைவின்படி உங்கள் கடவுச்சொல்லும் இருபடிச் சரிபார்ப்பும் (விருப்பத்திற்குரியது) தேவைப்படும்.
உள்நுழைவு முறையாகக் கடவுச்சாவிகளுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை நீக்கி உங்களது முந்தைய உள்நுழைவு முறைக்குத் திரும்ப, உங்கள் கணக்கு அமைப்புகளில் இந்த விருப்பத்தை மாற்றவும்.
  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
    • நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. பாதுகாப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. முடிந்தால் கடவுச்சொல் சரிபார்ப்பைத் தவிர் என்பதை முடக்கவும்.

உதவிக்குறிப்பு: முதல் முறையாகக் கடவுச்சாவியை உருவாக்கும்போது, அதை முதன்மையாகக் கருதும் கடவுச்சொல் இல்லா உள்நுழைவு அனுபவத்திற்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள். கடவுச்சாவி இல்லாமல் உங்கள் Google கணக்கில் உள்நுழைவதற்கும், வேறொரு உள்நுழைவு முறையைத் தேர்ந்தெடுப்பதற்கும் வேறு வழியில் முயற்சிக்கவும் என்பதைத் தட்டவும். "வேறு வழியில் முயற்சிக்கவும்" விருப்பத்தை நீங்கள் அடிக்கடி தேர்வுசெய்தால், அதன்பிறகு உங்கள் மறைமுக விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில் கடவுச்சாவி சவால்களைக் காட்டுவதை Google குறைத்துக்கொள்ளும். தொடர்ந்து கடவுச்சாவிகளைப் பயன்படுத்தி உள்நுழைவதன் மூலம் நீங்கள் இதை மாற்றலாம்.

தொலைந்த அல்லது காணாமல்போன கடவுச்சாவி தொடர்பான சிக்கலைச் சரிசெய்தல்

சாதனம் தொலைந்துவிட்டது அல்லது திருடப்பட்டுவிட்டது
  1. வேறு ஏதேனும் சாதனத்தில் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. தொலைந்த அல்லது திருடப்பட்ட சாதனத்திற்குத் தொடர்புடைய கடவுச்சாவியை அகற்றவும்.
கடவுச்சாவி இல்லாமலோ கிடைக்காமலோ இருத்தல்

உங்கள் கணக்கில் கடவுச்சாவிகள் இருந்தும், உள்நுழைவின்போது கடவுச்சாவி வழங்கப்படவில்லை என்றால் இவற்றை உறுதிசெய்யவும்:

  • கடவுச்சாவி உள்ள சாதனத்தின் திரைப் பூட்டு இயக்கப்பட்டிருப்பது
    • உங்கள் சாதனத்தின் திரைப் பூட்டு முடக்கப்பட்டிருந்தால் மீண்டும் அதை இயக்கும் வரை அந்தச் சாதனத்தில் உங்களால் கடவுச்சாவியைப் பயன்படுத்த முடியாது.
  • myaccount.google.com/security தளத்தில் உங்கள் பாதுகாப்பு அமைப்புகளில் "முடிந்தால் கடவுச்சொல் சரிபார்ப்பைத் தவிர்" என்ற விருப்பம் இயக்கப்பட்டிருப்பது.


கடவுச்சாவி இல்லாமல் உங்கள் Google கணக்கில் உள்நுழைய, வேறு வழியில் முயற்சிக்கவும் என்பதைத் தட்டி கடவுச்சாவி சவாலைத் தவிர்க்கவும். அதன்பிறகு முந்தைய உள்நுழைவு விருப்பங்களைப் பயன்படுத்தவும்.

உதவிக்குறிப்பு: "வேறு வழியில் முயற்சிக்கவும்" விருப்பத்தை நீங்கள் அடிக்கடி தேர்வுசெய்தால், உங்கள் மறைமுக விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில் கடவுச்சாவி சவால்களைக் காட்டுவதை Google குறைத்துக்கொள்ளும். தொடர்ந்து கடவுச்சாவிகளைப் பயன்படுத்தி உள்நுழைவதன் மூலம் நீங்கள் இதை மாற்றலாம்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10141064537949261579
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false