Google சேவைகள் முழுவதிலும் உங்களைப் பற்றி பிறர் எவற்றையெல்லாம் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துதல்

உங்கள் Google கணக்கில் உள்ள தகவல்கள் சிலவற்றை நீங்கள் தனிப்பட்டவையாக்கலாம் அல்லது அனைவரும் பார்க்கும்படி அமைக்கலாம். இதன் மூலம், Google சேவைகள் முழுவதிலும் உங்கள் பிறந்தநாள், ஃபோன் எண் போன்ற தகவல்களை யார் பார்க்கலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

எந்தத் தகவலைக் காட்ட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்தல்

உங்கள் Google கணக்குச் சுயவிவரம் காட்டப்படும் Google சேவைகளையோ சாதனங்களையோ பயன்படுத்தும் பிறரால் உங்கள் பெயரையும் சுயவிவரப் படத்தையும் பார்க்க முடியும்.
  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும். 
  2. மெனு  அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு எனது கணக்கு அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும். 
    • உதவிக்குறிப்பு: நீங்கள் Gmail பயன்படுத்தவில்லை எனில் myaccount.google.com தளத்திற்குச் செல்லவும்.
  3. மேலே உள்ள, தனிப்பட்ட தகவல் அதன் பிறகு என்னைப் பற்றி என்பதற்குச் செல் என்பதைத் தட்டவும்.
  4. ஒரு தகவல் வகையின் கீழ், அந்தத் தகவலை யார் பார்க்கலாம் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
  5. பின்வரும் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:
    • தகவலைத் தனிப்பட்டதாக்க, நீங்கள் மட்டும் Private, tap to edit who can see this info என்பதைத் தட்டவும். 
    • தகவலை அனைவரும் பார்க்கும்படி அமைக்க, அனைவரும் People என்பதைத் தட்டவும்.

தனிப்பட்ட தகவலைச் சேர்த்தல், திருத்துதல், அகற்றுதல்

முக்கியம்: சில தகவல்களை உங்கள் Google கணக்கில் இருந்து அகற்ற முடியாது. உதாரணமாக, உங்கள் பெயரையும் பிறந்த தேதியையும் நீங்கள் மாற்றலாம், ஆனால் அகற்ற முடியாது.
  1. iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸை திறக்கவும். 
  2. மெனு  அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு எனது கணக்கு அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும். 
    • உதவிக்குறிப்பு: நீங்கள் Gmail பயன்படுத்தவில்லை எனில் myaccount.google.com தளத்திற்குச் செல்லவும்.
  3. மேலே உள்ள, தனிப்பட்ட தகவல் அதன் பிறகு என்னைப் பற்றி என்பதற்குச் செல் என்பதைத் தட்டவும்.
  4. தகவல்களை மாற்றுதல்:
    • சேர்த்தல்: தகவலைச் சேர்க்க விரும்பும் ஒவ்வொரு வகையிலும் Add userசேர் என்பதைத் தட்டவும்.
    • திருத்துதல்: திருத்த விரும்பும் தகவலைத் தட்டி, திருத்து திருத்து என்பதைத் தட்டவும். 
      • உதவிக்குறிப்பு: உங்கள் பெயரை சமீபத்தில் மாற்றியிருந்தால் அதை மீண்டும் மாற்ற சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
    • அகற்றுதல்: நீங்கள் அகற்ற விரும்பும் தகவலைத் தட்டி அகற்று என்பதைத் தட்டவும்.
  5. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
உதவிக்குறிப்பு: கடவுச்சொல் போன்ற, கணக்கின் பிற தகவல்களை மாற்ற உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.

Google சேவைகளில் உங்கள் சுயவிவரங்களைப் பார்த்தல் & நிர்வகித்தல்

சில Google சேவைகளில், உங்கள் சுயவிவரத்தை அந்தச் சேவையைப் பயன்படுத்தும் பிற பயனர்களும் பார்க்க முடியும். சில சேவைகளுக்கான உங்கள் சுயவிவரங்களை Google கணக்கில் நீங்கள் பார்க்கலாம்.

  1. iPhone அல்லது iPadல் உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. “எனது சுயவிவரங்கள்" என்பதற்குச் செல்லவும். சுயவிவரங்களைக் காட்டு என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் சுயவிவரத் தகவலைப் பார்க்க ஒரு சேவையைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் சுயவிவரத் தகவலை நிர்வகிக்க அந்தச் சேவைக்குச் செல்லவும்.

சுயவிவரம் கண்டறிதல்

Google தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியின் மூலம் பிறர் உங்களைப் பற்றித் தேடும்போது, அவர்களுக்கு என்னவெல்லாம் காட்டப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சுயவிவரம் கண்டறிதல் உதவும். இதை அமைக்கும்போது, நீங்கள் Google சேவைகளில் தொடர்புகொள்ளாத, ஆனால் உங்கள் தொடர்புத் தகவல்களை வைத்துள்ளவர்களுக்கு உங்கள் சுயவிவரப் படமும் உங்களின் முழுப்பெயர் அல்லது சுருக்கப்பெயரும் காட்டப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கலாம். நீங்கள் ஒருவரைத் தொடர்புகொண்ட பிறகு, உதாரணமாக, Google Chatடில் உரையாடும்போது அல்லது Google Photosஸில் ஆல்பத்தைப் பகிரும்போது, உங்கள் Google கணக்கில் உள்ள உங்களின் முழுப் பெயரும் சுயவிவரப் படமும் அவர்களுக்குக் காட்டப்படும்.

சுயவிவரம் கண்டறிதல் மூலம்:

  • உங்கள் முதன்மைச் சுயவிவரத்தில் உள்ள பெயரையோ உங்கள் பெயரின் சுருக்கத்தையோ பயன்படுத்தலாம்.
  • உங்கள் சுயவிவரப் படத்தைக் காட்டலாம் அல்லது மறைக்கலாம்.

சுயவிவரம் கண்டறிதலை நிர்வகித்தல்

முக்கியம்: மொபைல் எண் மூலம் பிறர் உங்களைக் கண்டறிய மொபைல் எண் அமைப்புகளுக்குச் சென்று, பிறர் என்னை ஃபோன் எண் மூலம் கண்டறிய அனுமதி என்பதை இயக்கவும்.

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள தனிப்பட்ட தகவல் என்பதைத் தட்டவும்.
  3. "உங்கள் சுயவிவரங்கள்" என்பதன் கீழ், சுயவிவரங்களைக் காட்டு என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் படம் மற்றும் பெயருக்குக் கீழே உள்ள சுயவிவரம் கண்டறிதல் அமைப்புகளைத் தட்டவும்.
  5. சுயவிவரம் கண்டறிதல் என்பதை இயக்கவும்.
  6. உங்கள் சுயவிவரத்தில் உங்கள் பெயரும் படமும் காட்டப்படும் விதத்தை மாற்ற மாற்று என்பதைத் தட்டவும்.

உங்கள் தகவல்கள் குறித்த கூடுதல் விவரங்கள்

எந்தத் தகவலைக் காட்டலாம்?

Google சேவைகளைப் பயன்படுத்தும் பிறருக்கு நீங்கள் பின்வரும் சில தகவல்களைக் காட்டலாம் அல்லது மறைக்கலாம்:

  • உங்கள் பிறந்தநாள்
  • உங்கள் பாலினம்
  • நீங்கள் பணிபுரியும் இடம் போன்ற பணி தொடர்பான தகவல்கள்
  • தனிப்பட்ட மற்றும் பணி தொடர்புத் தகவல்
  • நீங்கள் வசித்த இடங்கள்
  • கல்வி குறித்த தகவல்

நீங்கள் தொடர்புகொள்பவர்களுக்கோ பகிர்பவர்களுக்கோ பின்வரும் தகவல்கள் காட்டப்படலாம்:

  • உங்கள் பெயர்
  • புனைப்பெயர்
  • சுயவிவரப் படம்
  • அட்டைப் படம்
  • உங்கள் Google கணக்கு மின்னஞ்சல்

உதவிக்குறிப்பு: "என்னைப் பற்றி" பக்கத்தில் உள்ள பெயரும் சுயவிவரப் படமும் பெரும்பாலான Google சேவைகளில் காட்டப்படும். சில Google சேவைகளில் நீங்கள் வேறு பெயரையோ சுயவிவரப் படத்தையோ பயன்படுத்தினாலும் அங்கேயும் அவை காட்டப்படும்.

இந்தத் தகவல் எங்கு காட்டப்படக்கூடும்?

உங்கள் Google கணக்கில் அனைவருக்கும் காட்டக்கூடிய வகையில் நீங்கள் அமைக்கும் தகவல் பின்வரும் சில இடங்களில் காட்டப்படலாம்:
  • பிறரைத் தொடர்புகொள்ளக்கூடிய Google Chat, Gmail போன்ற Google சேவைகள்.
  • உள்ளடக்கத்தை உருவாக்கக்கூடிய Maps, Play, YouTube போன்ற Google சேவைகள்.

உங்கள் தகவல்களை யாரெல்லாம் பார்க்க முடியும்?

  • தனிப்பட்டது: நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.
  • அனைவரும்: அனைவரும் பார்க்க முடியும்.
  • நீங்கள் தொடர்புகொள்பவர்கள்: நீங்கள் தொடர்புகொள்பவர்கள் பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக Chat மூலமும் Google Photosஸில் பகிரப்பட்டுள்ள பட ஆல்பங்கள் மூலமும் நீங்கள் தொடர்புகொள்பவர்கள் பார்க்க முடியும்.
  • உங்கள் நிறுவனத்தினர்: உங்கள் நிறுவனத்தில் (எ.கா. பணி, பள்ளி) உள்ள அனைவரும் பார்க்க முடியும். 
  • குடும்பத்தினர்: உங்கள் குடும்பக் குழுவில் உள்ள அனைவரும் பார்க்க முடியும்.

தொடர்புடைய தகவல்கள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7661397001529598945
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false