Google Password Manager மூலம் உங்கள் ஆன்லைன் கணக்குகள் எல்லாவற்றுக்கும் வலுவான, தனித்துவமான கடவுச்சொற்கள் அல்லது கடவுச்சாவிகளை எளிதாக உருவாக்கிப் பயன்படுத்தலாம். மேலும், உங்கள் Google கணக்கு மற்றும் சாதனத்தில் கடவுச்சொற்களையும் கடவுச்சாவிகளையும் சேமிக்கலாம் நிர்வகிக்கலாம் பாதுகாக்கலாம்.
Google Password Managerரைப் பயன்படுத்தி நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
- ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்துதல்: உள்ளமைந்த பாதுகாப்பு அம்சங்கள் மூலம் உங்கள் உள்நுழைவுத் தகவலைப் பாதுகாக்கலாம்.
- கடவுச்சொற்களை உருவாக்கிச் சேமித்தல்: வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்கி அவற்றை உங்கள் Google கணக்கில் சேமிக்கலாம். இதனால் கடவுச்சொற்களை நினைவில்கொள்ள வேண்டியதில்லை.
- கடவுச்சாவிகளை உருவாக்கிச் சேமித்தல்: கடவுச்சாவிகளை உருவாக்கி உங்கள் Google கணக்கில் சேமிக்கலாம். கடவுச்சொற்களைக் காட்டிலும் கடவுச்சாவிகள் பாதுகாப்பானவை, பயன்படுத்த எளிதானவை.
- கடவுச்சொற்களைத் தானாக நிரப்புதல்: தளங்களிலும் ஆப்ஸிலும் கடவுச்சொற்களைத் தானாகவே நிரப்பலாம்.
உங்களின் ஆன்லைன் பாதுகாப்பை Google Password Manager எப்படி மேம்படுத்துகிறது?
A safer way to manage your passwords
கணக்குகள் அபகரிக்கப்படுவதற்கான மிகவும் பொதுவான காரணங்களில் கடவுச்சொற்கள் திருடப்படுவதும் ஒன்றாகும்.
உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, Google Password Managerரைப் பயன்படுத்தி நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
- வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பரிந்துரைத்து அவற்றை உங்கள் Google கணக்கில் சேமிக்கலாம். ஒரே கடவுச்சொல்லை மீண்டும் பயன்படுத்தினால், அந்தக் கடவுச்சொல் திருடப்படும் பட்சத்தில் பல கணக்குகள் பாதிக்கப்படலாம்.
- களவாடப்பட்ட கடவுச்சொற்கள் குறித்த அறிவிப்பைப் பெறலாம். நீங்கள் சேமித்துள்ள கடவுச்சொற்களை யாராவது இணையத்தில் வெளியிட்டால், களவாடப்பட்ட கடவுச்சொற்களை Google Password Managerரின் உதவியுடன் மாற்றலாம்.
- அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க உதவி பெறலாம். உங்கள் கடவுச்சொற்களும் கடவுச்சாவிகளும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு Googleளின் உள்ளமைந்த பாதுகாப்பு அம்சத்தின் மூலம் சேமிக்கப்படுகின்றன.
உதவிக்குறிப்பு: நீங்கள் சேமித்த உள்நுழைவுத் தகவலை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்க மீட்புத் தகவலைச் சேர்க்கலாம், இருபடிச் சரிபார்ப்பை ஆன் செய்யலாம்.
இருபடிச் சரிபார்ப்பை இயக்குதல்ு
Google Password Managerரைப் பயன்படுத்துதல்
முக்கியம்: உங்கள் Google கணக்கில் சிக்கல்கள் இருந்தால், உங்கள் Google கணக்கு அல்லது Gmailலை மீட்டெடுப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கடவுச்சொற்களையும் கடவுச்சாவிகளையும் பயன்படுத்தத் தொடங்குதல்
- கடவுச்சொல்லுக்குப் பதிலாகக் கடவுச்சாவியைப் பயன்படுத்தி உள்நுழைதல்
- உங்களின் எல்லாச் சாதனங்களிலும் கடவுச்சொற்களையும் கடவுச்சாவிகளையும் பயன்படுத்துதல்
- சாதனத்திற்குள்ளான என்க்ரிப்ஷனைப் பயன்படுத்தத் தொடங்குதல்
கடவுச்சொற்களையும் கடவுச்சாவிகளையும் நிர்வகித்தல்
Google Password Managerருக்கு மாறுதல்
- Chrome மூலம் கடவுச்சொற்களை இம்போர்ட் அல்லது எக்ஸ்போர்ட் செய்தல்
- Android சாதனங்களில் Chrome பிரவுசருக்கான தன்னிரப்பி அம்சத்தைத் தேர்வுசெய்தல்.
Google Password Managerரில் உள்நுழைதல்
உங்கள் கடவுச்சொற்களை உங்களின் எல்லாச் சாதனங்களிலும் பயன்படுத்த:
- உங்கள் Google கணக்கின் மூலம் உள்நுழைந்து, அறிவிப்பு காட்டப்படும்போது நீங்கள் சேமித்த கடவுச்சொற்களையும் கடவுச்சாவிகளையும் Chrome பயன்படுத்த அனுமதிக்கவும். Chromeமில் உள்நுழைவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- Password Manager செல்லவும்.
கடவுச்சொல் தொடர்பான சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்
நீங்கள் சேமித்த கடவுச்சொற்களைப் பார்ப்பதற்கும் மாற்றுவதற்கும் Password Manager செல்லவும்.
- உங்கள் Google கணக்கில் உள்ள பாதுகாப்பற்ற கடவுச்சொற்களை மாற்றுதல்
- கடவுச்சொற்களை Google Play சேவைகளுக்கு நகர்த்துதல்
- கடவுச்சொற்கள் மற்றும் கடவுச்சாவிகள் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்
- Chromeமில் படிவங்களைத் தானாக நிரப்புதல்
- Google Password Manager பின்னை நிர்வகித்தல்
Android ஆப்ஸிற்கு
தொடங்குதல்
முக்கியம்: இந்தப் படிகள் உங்கள் சாதனத்தில் வேறுபடலாம். இந்த அமைப்பிற்கு நேரடியாகச் செல்ல உங்கள் அமைப்புகள் ஆப்ஸில் “தன்னிரப்பிச் சேவை” எனவும் தேடலாம்.
- Android மொபைல் அல்லது டேப்லெட்டில் அமைப்புகள் ஆப்ஸைத் திறக்கவும்.
- கீழே நகர்த்தி Google
எல்லாச் சேவைகளும் என்பதைத் தட்டவும்.
- கீழே உள்ள "தன்னிரப்பி & கடவுச்சொற்கள்" பிரிவிற்குச் சென்று Google மூலம் தானாக நிரப்புதல் என்பதைத் தட்டவும்.
- Google மூலம் தானாக நிரப்பு என்பது இயக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.
- "கணக்கு" என்பதற்குக் கீழே பட்டியலிடப்பட்டுள்ள கணக்குதான் நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கு என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
உதவிக்குறிப்பு: Chrome மற்றும் Androidல் ஒரே Google கணக்கு மூலம் உள்நுழைவதால், சேமிக்கப்பட்ட உங்கள் கடவுச்சொற்களை எப்போதும் பயன்படுத்தலாம்.
வலிமையான கடவுச்சொற்களை உருவாக்கிச் சேமித்தல்
ஆப்ஸில் புதிய கணக்கை உருவாக்கும்போது வலிமையான கடவுச்சொல்லைப் பரிந்துரைத்து அதைச் சேமிக்குமாறு Android பரிந்துரைக்கும்.
- Android மொபைல் அல்லது டேப்லெட்டில் கடவுச்சொல்லை உருவாக்கும் புலத்தைத் தட்டவும்.
- கீபோர்டுக்கு மேலே உள்ள கடவுச்சொற்கள் ஐகானை
தட்டி
கடவுச்சொல்லை உருவாக்கி எனது Google கணக்கில் சேமி என்பதைத் தட்டவும்.
- உங்கள் பயனர்பெயரை டைப் செய்து கடவுச்சொல்லைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமிக்கப்பட்ட கடவுச்சொல் மூலம் உள்நுழைதல்
ஓர் ஆப்ஸிற்கான கடவுச்சொல்லை நீங்கள் ஏற்கெனவே சேமித்திருந்தால் நீங்கள் உள்நுழைய Android உதவும்.
- உள்நுழைய விரும்பும் ஆப்ஸை Android மொபைல் அல்லது டேப்லெட்டில் திறக்கவும். ஆப்ஸின் உள்நுழைவுப் பக்கத்திற்கு நீங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
- பயனர்பெயர் புலத்தைத் தட்டி பயனர்பெயரைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது டைப் செய்யவும்.
- கடவுச்சொல் புலத்தைத் தட்டவும்.
- கீபோர்டுக்கு மேலே வலதுபுறத்தில் உள்ள கடவுச்சொற்கள் ஐகானை
தட்டி
சேமித்த கடவுச்சொல்லைத் தேர்வுசெய்க என்பதைத் தட்டவும்.
- கடவுச்சொற்கள் ஐகான்
காட்டப்படவில்லை எனில் கடவுச்சொல் புலத்தை அழுத்திப் பிடித்திருக்கவும். அதன்பிறகு தன்னிரப்பி
சேமித்த கடவுச்சொல்லைத் தேர்வுசெய்க என்பதைத் தட்டவும்.
- கடவுச்சொற்கள் ஐகான்
- நீங்கள் உள்நுழைய விரும்பும் ஆப்ஸின் பெயரைத் தட்டவும்.
நம்பகமான பிரவுசரில் கடவுச்சாவிகளைப் பயன்படுத்துதல்
- கடவுச்சாவி மூலம் இணையதளங்களில் உள்நுழைவதற்கோ பதிவு செய்வதற்கோ, Google Password Managerரில் உங்கள் கடவுச்சாவியின் அனுமதிச் சான்றுகள் வேலைசெய்ய அவற்றை உங்கள் பிரவுசர் கையாள வேண்டும். நீங்கள் நம்புகின்ற பாதுகாப்பான பிரவுசரையே எப்போதும் பயன்படுத்தவும்.
- Google Password Managerரில் சேமித்துள்ள கடவுச்சாவிகளை உங்கள் பிரவுசரில் இருந்து அணுக முடியவில்லை என்றால் உங்கள் பிரவுசர் இன்னும் நம்பகமான பிரவுசராக அனுமதிக்கப்படாமல் இருக்கக்கூடும்.
கடவுச்சாவிகள் மூலம் உள்நுழைவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
Chromeமிற்கு
தொடங்குதல்
உதவிக்குறிப்புகள்:
- Google Password Managerரில் சேமித்துள்ள கடவுச்சாவிகளை உங்கள் பிரவுசரில் இருந்து அணுக முடியவில்லை என்றால் உங்கள் பிரவுசருக்கு இன்னும் அனுமதி கிடைக்காமல் இருக்கக்கூடும். கடவுச்சாவிகள் மூலம் உள்நுழைவது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
- இன்னும் அனுமதிக்கப்படாத பிரவுசர் ஆப்ஸை நீங்கள் உருவாக்கினால், Google Password Managerரில் நம்பகமான பிரவுசர் ஆப்ஸ் ஆவதற்கான கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கலாம். கோரிக்கையைச் சமர்ப்பிக்க இந்தப் படிவத்தை நிரப்பவும்.
வலிமையான கடவுச்சொற்களை உருவாக்கிச் சேமித்தல்
ஒரு தளத்தில் புதிய கணக்கை உருவாக்கும்போது வலிமையான, தனித்துவமான கடவுச்சொல்லை Chrome பரிந்துரைக்கும். பரிந்துரைக்கப்படும் கடவுச்சொல்லை நீங்கள் பயன்படுத்தினால் அது தானாகவே சேமிக்கப்படும்.
ஒரு தளத்தில் புதிய கடவுச்சொல்லை டைப் செய்தால் அதைச் சேமிக்க வேண்டுமா என்று Chrome கேட்கும். சேமிக்க வேண்டுமெனில், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- டைப் செய்த கடவுச்சொல்லைப் பார்க்க: மாதிரிக்காட்சி ஐகானை
தேர்ந்தெடுக்கவும்.
- அந்தப் பக்கத்தில் பல கடவுச்சொற்கள் இருந்தால்: கீழ்நோக்கிய அம்புக்குறியை
தேர்ந்தெடுக்கவும். சேமிக்க விரும்பும் கடவுச்சொல்லைத் தேர்வுசெய்யவும்.
- உங்கள் பயனர்பெயர் காலியாகவோ தவறாகவோ இருந்தால்: "பயனர்பெயர்" என்பதற்கு அடுத்துள்ள வாக்கியப் பெட்டியைத் தேர்ந்தெடுத்து, சேமிக்க விரும்பும் பயனர்பெயரை டைப் செய்யவும்.
- வேறொரு கடவுச்சொல்லைச் சேமிக்க வேண்டுமெனில்: "கடவுச்சொல்" என்பதற்கு அடுத்துள்ள வாக்கியப் பெட்டியைத் தேர்ந்தெடுத்து, சேமிக்க விரும்பும் கடவுச்சொல்லை டைப் செய்யவும்.
உங்கள் கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கான வாய்ப்பை Chrome வழங்கவில்லை எனில்
மெசேஜ் தானாகவே காட்டப்படாதபோது நீங்களே கடவுச்சொல்லைச் சேமித்தல்
- Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Chrome ஆப்ஸை
திறக்கவும்.
- இணையதளத்திற்கான கடவுச்சொல்லைச் சேமிக்க அந்த இணையதளத்தில் உங்கள் தகவலை வழங்கவும்.
- முகவரிப் பட்டியின் வலதுபுறத்தில் உள்ள கடவுச்சொற்கள் ஐகானை
கிளிக் செய்து
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
கடவுச்சொற்கள் ஐகான் காட்டப்படவில்லை எனில் உங்கள் கடவுச்சொல்லை நீக்கிவிட்டு மீண்டும் உள்நுழைய முயலவும்.
கடவுச்சொற்கள் சேமிக்கப்படுவதைத் தொடங்குதல் அல்லது நிறுத்துதல்
இயல்பாகவே, உங்கள் கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கு Chrome கேட்கும். கடவுச்சொல் சேமிப்பை உங்கள் Google கணக்கில் இயக்கலாம்/முடக்கலாம் அல்லது Chromeமில் இதைச் செய்ய:
- Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Chrome ஆப்ஸை
திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை
தட்டவும்.
- அமைப்புகள் ஐகானை
தட்டி
Google Password Manager என்பதைத் தட்டவும்.
- அமைப்புகள் ஐகானை
தட்டவும்.
- கடவுச்சொற்களைச் சேமிப்பதற்குக் கேள் என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.
சேமிக்கப்பட்ட கடவுச்சொல் மூலம் உள்நுழைதல்
இதற்குமுன் ஓர் இணையதளத்திற்குச் சென்றபோது உங்கள் கடவுச்சொல்லைச் சேமித்திருந்தால் நீங்கள் உள்நுழைய Chrome உதவும்.
- Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Chrome ஆப்ஸை
திறக்கவும்.
- இதற்குமுன் சென்ற தளத்திற்குச் செல்லவும்.
- தளத்தின் உள்நுழைவுப் படிவத்திற்குச் செல்லவும்.
- ஒரு தளத்திற்கு ஒரேயொரு பயனர்பெயரையும் அதற்கான கடவுச்சொல்லையும் சேமித்திருந்தால்: Chrome அவற்றைத் தானாகவே உள்நுழைவுப் படிவத்தில் நிரப்பிவிடும்.
- ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் சேமித்திருந்தால்: பயனர்பெயர் புலத்தைத் தேர்ந்தெடுத்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் உள்நுழைவுத் தகவல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் சேமித்த கடவுச்சொல்லை Chrome காட்டவில்லை என்றால்: சாத்தியமான கடவுச்சொற்களைப் பார்க்க, கடவுச்சொற்கள் ஐகானை
தட்டவும்.
உதவிக்குறிப்பு: Google Password Manager சேவையை விரைவாக அணுக, உங்கள் Password Manager அமைப்பிற்குச் சென்று முகப்புத் திரையில் ஷார்ட்கட்டைச் சேர்க்கவும்.
கடவுச்சொற்களை நிர்வகித்தலும் பாதுகாத்தலும்
சேமித்த கடவுச்சொற்களைக் கண்டறிதல், நீக்குதல், பதிவிறக்குதல்சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் உள்ள கணக்குகளின் பட்டியலைக் கண்டறிய, passwords.google.com என்ற தளத்திற்குச் செல்லவும் அல்லது உங்கள் சாதனத்தில் உள்ள Google Password Managerரில் கடவுச்சொற்களைப் பார்க்கவும்.
- கடவுச்சொல்லைக் கண்டறிய: கணக்கைத் தேர்ந்தெடுத்து, மாதிரிக்காட்சி ஐகானை
தட்டவும்.
- கடவுச்சொல்லை நீக்க: கணக்கைத் தேர்ந்தெடுத்து, நீக்கு என்பதைத் தட்டவும்.
- கடவுச்சொற்களைப் பதிவிறக்க: அமைப்புகள் ஐகானை
தட்டி
கடவுச்சொற்களைப் பதிவிறக்கு என்பதைத் தட்டவும்.
முக்கியம்:
- உங்கள் குடும்பக் குழுவில் உள்ள உறுப்பினருடன் மட்டுமே நீங்கள் கடவுச்சொல்லைப் பகிரலாம். குடும்பக் குழுவை உருவாக்குங்கள்.
- நீங்கள் Google Password Managerரைப் பயன்படுத்துவதோடு Chromeமின் சமீபத்திய பதிப்பையும் வைத்திருக்க வேண்டும்.
இயல்பாகவே, உங்கள் கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கு Chrome கேட்கும். எப்போது வேண்டுமானாலும் இந்த விருப்பத்தை இயக்கலாம் அல்லது முடக்கலாம்.
- Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Chromeமை
திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை
தட்டவும்.
- அமைப்புகள்
Password Manager என்பதைத் தட்டவும்.
- மேல் வலுதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை
தட்டவும்.
- கடவுச்சொற்களைச் சேமிப்பதற்குக் கேள் என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.
உதவிக்குறிப்புகள்:
- உங்கள் ஆன்லைன் கணக்குகள் அனைத்திற்கும் தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.
- நீங்கள் பல கணக்குகளுக்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தினால், நீங்கள் கடவுச்சொல்லைப் பகிரும் பிறரால் உங்களின் பிற கணக்குகளை அணுக முடியலாம்.
- இந்தச் சேவையை இனி பகிர விரும்பவில்லை என்றால் உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும்.
நீங்கள் சேமித்த கடவுச்சொற்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் சரிபார்த்து, இவற்றில் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா எனக் கண்டறியலாம்:
- இணையத்தில் வெளியாகி இருத்தல்
- தரவு மீறல் காரணமாகப் பாதுகாப்பை இழந்திருத்தல்
- வலுவற்றதாகவும் எளிதாக யூகிக்கக்கூடியதாகவும் இருத்தல்
- பல கணக்குகளில் பயன்படுத்தப்பட்டிருத்தல்
நீங்கள் சேமித்த கடவுச்சொற்களைச் சரிபார்க்க, கடவுச்சொல் சரிபார்ப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
- passwords.google.com தளத்திற்குச் செல்லவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள்
என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இங்கு உங்கள் அமைப்புகளை நிர்வகிக்கலாம்.
- கடவுச்சொற்களைச் சேமிப்பதற்குக் கேள்: Android, Chrome ஆகியவற்றில் கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கான அறிவிப்புகளை நிர்வகிக்கலாம்.
- குறிப்பிட்ட சில தளங்கள் அல்லது ஆப்ஸுக்கான கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கான அறிவிப்புகளை நிர்வகித்தல்: குறிப்பிட்ட சில தளங்களுக்கான கடவுச்சொற்களை 'ஒருபோதும் சேமிக்க வேண்டாம்' என்று தேர்வுசெய்யலாம். கடவுச்சொல்லைச் சேமிக்குமாறு கேட்கப்படும்போது 'ஒருபோதும் வேண்டாம்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இந்தக் கடவுச்சொல்லைச் சேமிக்க விரும்பினால், அந்தத் தளம் அல்லது ஆப்ஸிற்கு அடுத்துள்ள அகற்றுவதற்கான ஐகானை
தேர்ந்தெடுக்கவும்.
- தானியங்கு உள்நுழைவு: நீங்கள் சேமித்த தகவல்களைப் பயன்படுத்தி தளங்களிலும் ஆப்ஸிலும் தானாகவே உள்நுழையலாம். உள்நுழைவதற்கு முன்பாக உறுதிப்படுத்த வேண்டுமெனில் தானியங்கு உள்நுழைவை நீங்கள் முடக்கலாம்.
- கடவுச்சொல் எச்சரிக்கைகள்: நீங்கள் சேமித்த கடவுச்சொற்கள் ஆன்லைனில் கண்டறியப்படும்போது அறிவிப்பைப் பெறலாம்.
- சாதனத்திற்குள்ளான என்க்ரிப்ஷன்: Google Password Managerரில் சேமிக்கப்படும் முன்பு கடவுச்சொற்கள் உங்கள் சாதனத்தில் என்க்ரிப்ஷன் செய்யப்படும். உங்கள் சாதனத்தில் கடவுச்சொற்களை என்க்ரிப்ஷன் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த அம்சம் Workspace பயனர்களுக்குக் கிடைக்காது.