கடவுச்சொற்களைச் சேமித்தல், நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல்

Google Password Manager உதவியுடன் உங்கள் ஆன்லைன் கணக்குகள் அனைத்திற்கும் வலிமையான, தனித்துவமான கடவுச்சொல்லை எளிதாகப் பயன்படுத்தலாம். நீங்கள் Google Password Managerரைப் பயன்படுத்தும்போது கடவுச்சொற்களை உங்கள் Google கணக்கிலோ சாதனத்திலோ சேமிக்கலாம்.

முக்கியம்: கடவுச்சொற்களை Google கணக்கில் சேமிக்கும்போது வலிமையான கடவுச்சொற்களை மட்டுமே Google Password Manager பரிந்துரைக்கும்.

Google Password Managerரைப் பயன்படுத்தி நீங்கள்:

  • Google கணக்கில் வலிமையான, தனித்துவமான கடவுச்சொற்களை உருவாக்கிச் சேமிக்கலாம். இதனால் கடவுச்சொற்களை நினைவில்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
  • உள்ளமைந்த பாதுகாப்பு அம்சத்தின் மூலம், உங்களின் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் அனைத்தையும் பாதுகாக்கலாம்.
  • தளங்களிலும் ஆப்ஸிலும் தானாகவே கடவுச்சொற்களை நிரப்பலாம்.

உங்களின் ஆன்லைன் பாதுகாப்பை Google Password Manager எப்படி மேம்படுத்துகிறது?

A safer way to manage your passwords

கணக்குகளை அனுமதியின்றி வேறொருவர் பயன்படுத்துவதற்கான மிகவும் பொதுவான காரணங்களில் கடவுச்சொற்கள் திருடப்படுவதும் ஒன்றாகும்.

உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, Google Password Managerரைப் பயன்படுத்தி நீங்கள்:

  • வலிமையான, தனித்துவமான கடவுச்சொற்களுக்கான பரிந்துரையைப் பெற்று அவற்றை உங்கள் Google கணக்கில் சேமிக்கலாம். இதன் மூலம், ஒரு கடவுச்சொல் திருடப்படுவதால் பல கணக்குகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
  • களவாடப்பட்ட கடவுச்சொற்கள் குறித்த அறிவிப்பைப் பெறலாம். நீங்கள் சேமித்துள்ள கடவுச்சொற்களை யாரேனும் இணையத்தில் வெளியிட்டால், களவாடப்பட்ட கடவுச்சொற்களை Google Password Managerரின் உதவியுடன் மாற்றலாம்.
  • அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க உதவி பெறலாம். உங்கள் கடவுச்சொற்கள் என்க்ரிப்ஷன் செயல்முறையைப் பயன்படுத்தி Googleளின் உள்ளமைந்த பாதுகாப்பு அம்சத்தின் மூலம் சேமிக்கப்படுகின்றன.

உதவிக்குறிப்பு: நீங்கள் சேமித்த கடவுச்சொற்களை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்க மீட்புத் தகவலைச் சேர்க்கலாம், இருபடிச் சரிபார்ப்பை இயக்கலாம்.

Google Password Managerரைப் பயன்படுத்துதல்

தொடங்குதல்

உங்களின் அனைத்து சாதனங்களிலும் கடவுச்சொற்களைப் பயன்படுத்த இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:

கடவுச்சொற்களைச் சேமித்தல் மற்றும் பயன்படுத்துதல்

Chrome மூலம் கடவுச்சொற்களை உருவாக்குதல், சேமித்தல் மற்றும் நிரப்புதல்

ஒரு தளத்தில் புதிய கணக்கை உருவாக்கும்போது வலிமையான, தனித்துவமான கடவுச்சொல்லை Chrome பரிந்துரைக்கும். பரிந்துரைக்கப்படும் கடவுச்சொல்லை நீங்கள் பயன்படுத்தினால் அது தானாகவே சேமிக்கப்படும்.

ஒரு தளத்தில் புதிய கடவுச்சொல்லை டைப் செய்தால் அதைச் சேமிக்க வேண்டுமா என்று Chrome கேட்கும். சேமிக்க வேண்டுமெனில், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  • டைப் செய்த கடவுச்சொல்லைப் பார்க்க, மாதிரிக்காட்சி ஐகானை Preview கிளிக் செய்யவும்.
  • அந்தப் பக்கத்தில் பல கடவுச்சொற்கள் இருந்தால் கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்யவும். நீங்கள் சேமிக்க விரும்பும் கடவுச்சொல்லைத் தேர்வுசெய்யவும்.
  • உங்கள் பயனர்பெயர் நிரப்பப்படாமலோ தவறாகவோ இருந்தால் "பயனர்பெயர்" என்பதற்கு அடுத்துள்ள வாக்கியப் பெட்டியைத் தட்டவும். சேமிக்க விரும்பும் பயனர்பெயரை டைப் செய்யவும்.
  • வேறொரு கடவுச்சொல்லைச் சேமிக்க வேண்டுமெனில் "கடவுச்சொல்" என்பதற்கு அடுத்துள்ள வாக்கியப் பெட்டியைக் கிளிக் செய்யவும். சேமிக்க விரும்பும் கடவுச்சொல்லை டைப் செய்யவும். அதன் பிறகு சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கான வாய்ப்பை Chrome வழங்கவில்லை எனில்

மெசேஜ் தானாகவே காட்டப்படாதபோது நீங்களே கடவுச்சொல்லைச் சேமித்தல்

  1. கம்ப்யூட்டரில் Chrome உலாவியை Chrome திறக்கவும்.
  2. இணையதளத்திற்கான கடவுச்சொல்லைச் சேமிக்க அந்த இணையதளத்தில் உங்கள் தகவலை வழங்கவும்.
  3. முகவரிப் பட்டியின் வலதுபுறத்தில் உள்ள கடவுச்சொற்கள் ஐகானை Passwords கிளிக் செய்து அதன் பிறகுசேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

கடவுச்சொற்கள் ஐகான் Passwords காட்டப்படவில்லை எனில், உங்கள் கடவுச்சொல்லை நீக்கிவிட்டு மீண்டும் உள்நுழைய முயலவும்.

'கடவுச்சொற்களைச் சேமிப்பதற்குக் கேள்' என்பதை இயக்குதல் அல்லது முடக்குதல்

இயல்பாகவே, உங்கள் கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கு Chrome கேட்கும். கடவுச்சொல் சேமிப்பை உங்கள் Google கணக்கில் இயக்கலாம்/முடக்கலாம் அல்லது Chromeமில் இதைச் செய்ய:

  1. கம்ப்யூட்டரில் Chrome உலாவியை Chrome திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவர ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு கடவுச்சொற்கள் ஐகானை Passwords கிளிக் செய்யவும்.
  3. கடவுச்சொற்களைச் சேமிப்பதற்குக் கேள் என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.

Chromeமில் சேமிக்கப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைதல்

இதற்குமுன் ஓர் இணையதளத்திற்குச் சென்றபோது Chromeமில் உங்கள் கடவுச்சொல்லைச் சேமித்திருந்தால் நீங்கள் உள்நுழைய Chrome உதவும்.

  1. கம்ப்யூட்டரில் நீங்கள் முன்பு சென்றிருந்த தளங்களில் ஒன்றுக்குச் செல்லவும்.
  2. தளத்தின் உள்நுழைவுப் படிவத்திற்குச் செல்லவும்.
    • ஒரு தளத்திற்கு ஒரேயொரு பயனர்பெயரையும் அதற்கான கடவுச்சொல்லையும் சேமித்திருந்தால்: Chrome அவற்றைத் தானாகவே உள்நுழைவுப் படிவத்தில் நிரப்பிவிடும்.
    • ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் சேமித்திருந்தால்: பயனர்பெயர் புலத்தைத் தேர்ந்தெடுத்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் உள்நுழைவு தகவல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

Google Password Managerருக்கு மாறுதல்

நீங்கள் வேறொரு சேவையில் இருக்கும் கடவுச்சொற்களை Google கணக்கிற்குப் பதிவிறக்கலாம்.

கடவுச்சொற்களை நிர்வகித்தலும் பாதுகாத்தலும்

சேமித்த கடவுச்சொற்களைப் கண்டறிதல், நீக்குதல், பதிவிறக்குதல்

சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் உள்ள கணக்குகளின் பட்டியலைக் கண்டறிய, passwords.google.com என்ற தளத்திற்குச் செல்லவும் அல்லது உங்கள் சாதனத்தில் உள்ள Google Password Managerரில் கடவுச்சொற்களைப் பார்க்கவும்.

  • கடவுச்சொல்லைக் கண்டறிய: கணக்கைத் தேர்ந்தெடுத்து, மாதிரிக்காட்சி ஐகானை Preview கிளிக் செய்யவும்.
  • கடவுச்சொல்லை நீக்க: கணக்கைத் தேர்ந்தெடுத்து, நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கடவுச்சொற்களைப் பதிவிறக்க: அமைப்புகள் ஐகானை Settings கிளிக் செய்து அதன் பிறகுகடவுச்சொற்களைப் பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பாதுகாப்பற்ற கடவுச்சொற்கள் உள்ளனவா என்று பார்த்தல்

நீங்கள் சேமித்த கடவுச்சொற்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் சரிபார்த்து, இவற்றில் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா எனக் கண்டறியலாம்:

  • இணையத்தில் வெளியாகி இருத்தல்
  • தரவு மீறல் காரணமாகப் பாதுகாப்பை இழந்திருத்தல்
  • வலுவற்றதாகவும் எளிதாக யூகிக்கக்கூடியதாகவும் இருத்தல்
  • பல கணக்குகளில் பயன்படுத்தப்பட்டிருத்தல்

நீங்கள் சேமித்த கடவுச்சொற்களைச் சரிபார்க்க, கடவுச்சொல் சரிபார்ப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.

கடவுச்சொல் சரிபார்ப்பு குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

Password Manager அமைப்புகளை மாற்றுதல்
  1. passwords.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இங்கு உங்கள் அமைப்புகளை நிர்வகிக்கலாம்.
    • கடவுச்சொற்களைச் சேமிப்பதற்குக் கேள்: Android, Chrome ஆகியவற்றில் கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கான அறிவிப்புகளை நிர்வகிக்கலாம்.
    • குறிப்பிட்ட சில தளங்கள் அல்லது ஆப்ஸுக்கான கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கான அறிவிப்புகளை நிர்வகித்தல்: குறிப்பிட்ட சில தளங்களுக்கான கடவுச்சொற்களை 'ஒருபோதும் சேமிக்க வேண்டாம்' என்று தேர்வுசெய்யலாம். கடவுச்சொல்லைச் சேமிக்குமாறு கேட்கப்படும்போது 'ஒருபோதும் வேண்டாம்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இந்தக் கடவுச்சொல்லைச் சேமிக்க விரும்பினால், அந்தத் தளம் அல்லது ஆப்ஸிற்கு அடுத்துள்ள அகற்றுவதற்கான ஐகானை Remove தேர்ந்தெடுக்கவும்.
    • தானியங்கு உள்நுழைவு: நீங்கள் சேமித்த தகவல்களைப் பயன்படுத்தி தளங்களிலும் ஆப்ஸிலும் தானாகவே உள்நுழையலாம். உள்நுழைவதற்கு முன்பாக உறுதிப்படுத்த வேண்டுமெனில் தானியங்கு உள்நுழைவை நீங்கள் முடக்கலாம்.
    • கடவுச்சொல் எச்சரிக்கைகள்: நீங்கள் சேமித்த கடவுச்சொற்கள் ஆன்லைனில் கண்டறியப்படும்போது அறிவிப்பைப் பெறலாம்.
    • சாதனத்திற்குள்ளான என்க்ரிப்ஷன்: Google Password Managerரில் சேமிக்கப்படும் முன்பு கடவுச்சொற்கள் உங்கள் சாதனத்தில் என்க்ரிப்ஷன் செய்யப்படும். உங்கள் சாதனத்தில் கடவுச்சொற்களை என்க்ரிப்ஷன் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த அம்சம் Workspace பயனர்களுக்குக் கிடைக்காது.

Google Password Manager உங்கள் தரவை எப்படிக் கையாளுகிறது?

உங்கள் சாதனத்தில் சேவைகளைச் செயல்படுத்த Google Password Manager குறிப்பிட்ட சில தகவல்களைச் சேகரிக்கிறது. இந்தச் செயல்பாடுகளில் சில Google Play சேவைகளைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, பகுப்பாய்விற்காகவும் பிழையறிந்து திருத்துவதற்காகவும் பின்வரும் தகவல்களை Google Password Manager சேகரிக்கிறது:

  • ஆப்ஸில் கிடைக்கும் பக்கப்பார்வைகளும் தட்டல்களும்
  • சிதைவின் பதிவுகள்
  • கண்டறிதல்

தொழில்துறையில் சிறந்து விளங்கும் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் மூலம் உங்களின் ஒத்திசைக்கப்பட்ட தரவு எப்போதும் பாதுகாக்கப்படும். தரவு மீறல் ஏற்படுவதை இது குறைக்கும். தொழில்துறையில் சிறந்து விளங்கும் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10135146610583445737
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false