கடவுச்சொல் எச்சரிக்கையின் மூலம் ஃபிஷிங்கைத் தடுத்தல்

Gmail அல்லது YouTubeல் நீங்கள் சேமித்த தகவல்கள் உட்பட உங்கள் Google கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க கடவுச்சொல் எச்சரிக்கை உதவுகிறது.

உங்கள் Chrome உலாவியில் கடவுச்சொல் எச்சரிக்கை நீட்டிப்பைச் சேர்த்தால், Google அல்லாத தளங்களில் உள்நுழைய உங்கள் Google கடவுச்சொல் பயன்படுத்தப்படும்போது தானியங்கு எச்சரிக்கைகளைப் பெறுவீர்கள்.

கடவுச்சொல் எச்சரிக்கையை இயக்குதல்
  1. Google Chromeமில் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. Chrome ஸ்டோருக்குச் சென்று கடவுச்சொல் எச்சரிக்கை நீட்டிப்பைப் பதிவிறக்கவும்.
  3. திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  4. தொடங்குவதற்கு உங்கள் Google கணக்கில் மீண்டும் உள்நுழையவும்.

கடவுச்சொல் எச்சரிக்கையை Chrome உலாவியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

குறிப்பு: நீங்கள் Google Workspace நிர்வாகியாக இருந்தால், கடவுச்சொல் எச்சரிக்கையை உங்கள் நிறுவனம் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இங்கு மேலும் அறிக.

கடவுச்சொல் எச்சரிக்கையை முடக்குதல்
  1. Google Chromeமில் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. மேல் வலதுபுறத்தில் மூன்று புள்ளி மெனுவை மேலும் தேர்ந்தெடுக்கவும்.

  3. கூடுதல் கருவிகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. நீட்டிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நீட்டிப்புகள் பட்டியலில் கடவுச்சொல் எச்சரிக்கை என்பதைக் கண்டறியவும்.
  6. அகற்று அகற்றுவதற்கான ஐகான் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
கடவுச்சொல் எச்சரிக்கை எப்படிச் செயல்படுகிறது?

கடவுச்சொல் எச்சரிக்கையை இயக்கிய பிறகு, Google அல்லாத தளங்களில் உள்நுழைய உங்கள் Google கணக்கின் கடவுச்சொல் எப்போது பயன்படுத்தப்பட்டாலும் உங்களுக்கு விழிப்பூட்டல் அனுப்பப்படும்.

விழிப்பூட்டலை நீங்கள் நிராகரிக்கலாம் அல்லது அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம். உதாரணத்திற்கு, உங்கள் கணக்கு விவரம் வேறு யாரிடமாவது இருப்பதாக நீங்கள் நினைத்தால் உங்கள் கடவுச்சொல்லை மாற்றலாம்.

கடவுச்சொல் எச்சரிக்கை உங்கள் கடவுச்சொல்லையோ கீபோர்டில் நீங்கள் டைப் செய்வதையோ நிரந்தரமாகச் சேமிக்காது, யாருக்கும் அனுப்பாது என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்கள் Google கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பது பற்றி மேலும் அறிக.

உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லை எப்போது பயன்படுத்தலாம்?

Gmail, YouTube, Chrome, Play போன்ற Google தொடர்பான ஆப்ஸ் மற்றும் சேவைகளில் உள்நுழைய உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம். ஆனால் அதே கடவுச்சொல்லை Google அல்லாத தளத்தில் பயன்படுத்தும்போது கடவுச்சொல் எச்சரிக்கை அனுப்பப்படும்.

உங்கள் அனைத்து கணக்குகளுக்கும் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தினால் உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லை மாற்றுமாறு பரிந்துரைக்கிறோம். இல்லையென்றால், உங்களின் ஏதேனும் ஒரு கணக்கு அபகரிக்கப்பட்டால் அனைத்து கணக்குகளும் அபகரிக்கப்படலாம்.

கடவுச்சொல் எச்சரிக்கை பற்றிய கேள்விகள் உள்ளதா? இங்கே பாருங்கள்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12513607351417279038
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false