கடவுச்சொற்களை உங்களின் வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்துதல்

இவற்றில் ஒன்றைச் செய்வதன் மூலம், உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களைப் பயன்படுத்தி வெவ்வேறு சாதனங்களில் இருந்து ஆப்ஸிலும் தளங்களிலும் உள்நுழையலாம்:

  • Androidல் Chromeமில் ஒத்திசைவை இயக்குதல்
  • கம்ப்யூட்டரில் Chromeமில் உள்நுழைதல்

கடவுச்சொற்களை உங்கள் Google கணக்கில் சேமித்தல்

கடவுச்சொற்களைச் சேமிப்பதற்குக் கேள் அமைப்பு இயக்கப்பட்டிருந்தால், Android, Chrome ஆகியவற்றில் இருந்து தளங்களிலோ ஆப்ஸிலோ நீங்கள் உள்நுழையும்போது கடவுச்சொற்களைச் சேமிக்கும்படி உங்களிடம் கேட்கப்படும்.

அந்தத் தளம் அல்லது ஆப்ஸிற்கான உங்கள் கடவுச்சொல்லைச் சேமிக்க, சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் சாதனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்குகளில் நீங்கள் உள்நுழைந்திருந்தால், அவற்றில் எதில் கடவுச்சொல்லைச் சேமிக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

சேமித்துள்ள உங்கள் கடவுச்சொற்களை passwords.google.com தளத்திலோ Chrome உலாவியிலோ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிர்வகிக்கலாம்.

கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கான அறிவிப்புகளை நிர்வகித்தல்

தளங்களுக்கான கடவுச்சொற்களை நினைவில் வைத்துக்கொள்வதற்கும், உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களின் மூலம் நீங்கள் தானாகவே உள்நுழைய உதவுவதற்கும் Chromeமை நீங்கள் அனுமதிக்கலாம்.

"கடவுச்சொற்களைச் சேமிப்பதற்குக் கேள்" அமைப்பு இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் முடக்கலாம், மீண்டும் இயக்கலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Chromeமைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில், மூன்று புள்ளி மெனு ஐகானை ஒழுங்கமைத்தல் அதன் பிறகு தேர்ந்தெடுத்து பிறகு கடவுச்சொற்கள் மற்றும் தன்னிரப்பி அதன் பிறகு Google Password Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கடவுச்சொற்களைச் சேமிப்பதற்குக் கேள் என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.

குறிப்பிட்ட சில தளங்கள் அல்லது ஆப்ஸுக்கான கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கான அறிவிப்புகளை நிர்வகித்தல்

குறிப்பிட்ட சில தளங்களுக்கான கடவுச்சொற்களை ஒருபோதும் சேமிக்க வேண்டாம் என்று தேர்வுசெய்யலாம். கடவுச்சொல்லைச் சேமிக்கும்படி உங்களிடம் கேட்கப்படும்போது ஒருபோதும் வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, அந்தக் கடவுச்சொல்லைச் சேமிக்க வேண்டுமா என்று உங்களிடம் கேட்கப்படாது.

கடவுச்சொல்லைச் சேமிக்க வேண்டுமா என்று உங்களிடம் எப்போதுமே கேட்காத தளங்களை நீங்கள் பார்க்கலாம் நிர்வகிக்கலாம்:

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Chromeமைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில், மூன்று புள்ளி மெனு ஐகானை ஒழுங்கமைத்தல் அதன் பிறகு தேர்ந்தெடுத்து பிறகு கடவுச்சொற்கள் மற்றும் தன்னிரப்பி அதன் பிறகு Google Password Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கடவுச்சொற்களைச் சேமிப்பதற்கான அறிவிப்புகளை எப்போதுமே காட்டாத இணையதளங்கள் "நிராகரிக்கப்பட்ட தளங்களும் ஆப்ஸும்" என்பதற்குக் கீழே காட்டப்படும். தளத்தை அகற்ற, அகற்றுவதற்கான ஐகானை அகற்று தேர்ந்தெடுக்கவும்.

தானியங்கு உள்நுழைவை நிர்வகித்தல்

நீங்கள் சேமித்துள்ள தகவல்களின் மூலம் தளங்களிலும் ஆப்ஸிலும் தானாகவே உள்நுழையலாம். தளத்திலோ ஆப்ஸிலோ உள்நுழைவதற்கு முன் அதை உறுதிப்படுத்தும்படி Chrome உங்களிடம் கேட்க வேண்டும் என்றால், தானாக உள்நுழைதல் அமைப்பை முடக்கவும்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Chromeமைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில், மூன்று புள்ளி மெனு ஐகானை ஒழுங்கமைத்தல் அதன் பிறகு தேர்ந்தெடுத்து பிறகு கடவுச்சொற்கள் மற்றும் தன்னிரப்பி அதன் பிறகு Google Password Manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள அமைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. தானாக உள்நுழைதல் என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15893677712005833885
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false