உங்கள் Google கணக்கு பின்னை (PIN) உருவாக்குதல் அல்லது மாற்றுதல்

சாதனத்தை அமைப்பது, ஏதேனும் பர்ச்சேஸ் செய்வது போன்ற குறிப்பிட்ட சில செயல்களை மேற்கொள்வதற்கு முன் Google கணக்கு பின்னை (PIN) டைப் செய்யும்படி சில தயாரிப்புகள் கேட்கும்.

பின்னை எப்போது பயன்படுத்துவது?

பின்வருபவை உள்ளிட்ட வேறு சில சூழல்களில் Google கணக்கு பின்னை (PIN) பயன்படுத்தும்படி உங்களிடம் கேட்கப்படும்:

  • நீங்கள் Google Playயில் பர்ச்சேஸ்களை அனுமதிக்கும்போது (கட்டாயமல்ல).
  • நீங்கள் Google Payயில் ஒருவருக்குப் பணம் அனுப்பும்போது.
  • நீங்கள் Roku பாக்ஸை அமைக்கும்போது. Google Play மூவீஸ் & டிவியைச் சேர்க்க பின்னைப் பயன்படுத்துவீர்கள்.
  • நீங்கள் Daydreamமில் Google Play மூலம் எதையேனும் வாங்கும்போது.

உங்கள் Google கணக்கு பின்னும் (PIN) Google Voice, Google Ads போன்ற பிற Google தயாரிப்புகளுக்கு நீங்கள் வைத்திருக்கக்கூடிய பின்களும் வெவ்வேறானவை.

பின்னை உருவாக்குதல்

நீங்கள் ஒரு பின்னை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகள் காட்டப்படும். இந்தப் படி பெரும்பாலும் அமைவு அல்லது பர்ச்சேஸ் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும்.

இந்த வழியிலும் நீங்கள் பின்னை உருவாக்கலாம்:

  1. உங்கள் Google கணக்கின் பின் பிரிவைத் திறக்கவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. பின்னை உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வலிமையான பின்னைத் தேர்வுசெய்து, திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
    • எளிதில் யூகிக்கக்கூடிய உங்கள் பிறந்தநாளையோ பிற எண்களையோ பயன்படுத்த வேண்டாம்.
    • வேறு இடங்களில் நீங்கள் பயன்படுத்தும் பின்னைப் பயன்படுத்த வேண்டாம்.
    • 1234, 9876 போன்று வரிசையாக உள்ள எண்களைப் பயன்படுத்த வேண்டாம்.
  4. சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னை மாற்றுதல்

  1. உங்கள் Google கணக்கைத் திறக்கவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  2. பாதுகாப்பு மற்றும் உள்நுழைவு என்பதைத் தட்டவும்.
  3. "Googleளில் எப்படி உள்நுழைகிறீர்கள்?" என்பதற்குக் கீழே உள்ள Google கணக்கு பின் (PIN) என்பதைத் தட்டவும்.
  4. பின்னை மாற்று என்பதைத் தட்டவும்.
  5. வலிமையான பின்னைத் தேர்வுசெய்து, திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  6. சேமி என்பதைத் தட்டவும்.
true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2072318268479053057
true
உதவி மையத்தில் தேடுக
false
true
true
true
true
true
70975
false
false
false
false
false