பிற மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளில் உங்கள் Google கணக்கு செயல்படும் விதத்தைக் குக்கீகள் பாதிக்கலாம்.
முக்கியம்: குக்கீகள் முடக்கப்பட்டுள்ளன என்ற மெசேஜ் காட்டப்பட்டால், உங்கள் கணக்கைப் பயன்படுத்த குக்கீகளை இயக்க வேண்டும்.
குக்கீகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள் உருவாக்கும் ஃபைல்களே குக்கீகள் எனப்படும். உங்கள் வருகை குறித்த தகவல்களைச் சேமிப்பதன் மூலம் உங்கள் ஆன்லைன் அனுபவத்தை அவை எளிதாக்குகின்றன. உதாரணமாக, தளங்கள்:
- உங்களை உள்நுழைந்த நிலையிலேயே வைத்திருக்கலாம்
- உங்கள் தள விருப்பத்தேர்வுகளை நினைவில் வைத்திருக்கலாம்
- நீங்கள் இருக்கும் இடத்திற்குப் பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்கலாம்
இரண்டு வகையான குக்கீகள் உள்ளன:
- முதல் தரப்புக் குக்கீகள்: நீங்கள் பார்வையிடும் தளம் உருவாக்குபவை. அதாவது முகவரிப் பட்டியில் உள்ள தளம். இந்தக் குக்கீகள் சாதனத்தில் உள்ள தளத் தரவின் ஒரு வகையாகும். சாதனத்தில் உள்ள தளத் தரவு குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
- மூன்றாம் தரப்புக் குக்கீகள்: பிற தளங்கள் உருவாக்குபவை. நீங்கள் பார்வையிடும் தளங்கள் பிற தளங்களில் உள்ள உள்ளடக்கத்தை (படங்கள், விளம்பரங்கள், வார்த்தைகள் போன்றவை) உட்பொதிக்கலாம். உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க குக்கீகளையும் பிற தரவையும் இந்தத் தளங்கள் சேமிக்கலாம்.
Google தனது சேவைகளை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. குக்கீகள் பயன்படுத்தப்படும் விதம் குறித்துத் தனியுரிமைக் கொள்கையில் தெரிந்துகொள்ளுங்கள்.
Chromeமில்
இயல்பாகவே நீங்கள் மூன்றாம் தரப்புக் குக்கீகளை அனுமதிக்கலாம் அல்லது தடுக்கலாம்.
- கம்ப்யூட்டரில் Chrome உலாவியை திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மூன்றாம் தரப்புக் குக்கீகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உதவிக்குறிப்பு: நீங்கள் கண்காணிப்புத் தடுப்பு சோதனையில் பங்கேற்றிருந்தால், இதற்குப் பதிலாக ”கண்காணிப்புத் தடுப்பு” வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
- மூன்றாம் தரப்புக் குக்கீகளை அனுமதி.
- மறைநிலைப் பயன்முறையில் மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தடு.
- மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தடு.
- மூன்றாம் தரப்புக் குக்கீகளைத் தடுத்தால், விதிவிலக்குகள் பட்டியலில் அனுமதிக்கப்பட்ட தளங்களைத் தவிர பிற தளங்களின் மூன்றாம் தரப்புக் குக்கீகள் அனைத்தும் தடுக்கப்படும்.
Chromeமில் கூடுதல் குக்கீ அமைப்புகளை எப்படி மாற்றுவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பிற உலாவிகளில்
வழிமுறைகளுக்கு உங்கள் உலாவிக்கான உதவி இணையதளத்தைப் பார்க்கவும்.
சிக்கல்களைச் சரிசெய்தல்
உங்கள் Google கணக்கு மூலம் மூன்றாம் தரப்பு இணையதளத்தில் உள்நுழைய முடியாதபோது குக்கீகள் முடக்கப்பட்டுள்ளன என்ற மெசேஜ் காட்டப்பட்டால்:
- குக்கீகளை இயக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- மீண்டும் உள்நுழைய முயலவும்.
அதற்குப் பிறகும் பிழைச் செய்தி காட்டப்பட்டால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சாத்தியமான சில தீர்வுகளைப் பயன்படுத்திப் பார்க்கவும். ஒவ்வொன்றையும் முயன்றபிறகு உள்நுழைய முயலவும்.
- புதிய உலாவிச் சாளரத்தைத் திறக்கவும்.
- உலாவியின் தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழிக்கவும். தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் எப்படி அழிப்பது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
- தனிப்பட்ட முறையில் உலாவவும். Chromeமில் தனிப்பட்ட முறையில் எப்படி உலாவுவது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
- உங்கள் உலாவியின் தனியுரிமை அமைப்புகளை மாற்றவும். தனியுரிமை அமைப்புகளை எப்படி மாற்றுவது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.