குக்கீகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

Chrome, Safari போன்ற உலாவியில் உங்கள் Google கணக்கைப் பயன்படுத்த, குக்கீகளை இயக்கியிருக்கவில்லை எனில் அவற்றை இயக்கவும்.

கவனத்திற்கு: குக்கீகள் முடக்கப்பட்டுள்ளன என்ற செய்தியைப் பெற்றால், உங்கள் கணக்கைப் பயன்படுத்த குக்கீகளை இயக்க வேண்டும்.

Chrome ஆப்ஸில்

குக்கீகள் தானாகவே இயக்கப்படும். நீங்கள் அதை முடக்கும் வரை இயக்கத்திலேயே இருக்கும். குக்கீகளை அழிப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

Safari ஆப்ஸில்

  1. குக்கீகளை இயக்க/முடக்க அதற்கான வழிமுறையைப் பின்பற்றவும்.
  2. பிறகு 5 நிமிடங்கள் காத்திருந்து Safari ஆப்ஸைத் திறக்கவும்.

பிற உலாவிகளில்

வழிமுறைகளுக்கு உங்கள் உலாவிக்கான உதவி இணையதளத்தைப் பார்க்கவும்.

குக்கீகள் எதற்கு உதவுகின்றன?

குக்கீகள் என்பன நீங்கள் பார்வையிடும் தளங்களால் உருவாக்கப்படும் ஃபைல்கள் ஆகும். நீங்கள் உலாவிய தகவல்களைச் சேமிப்பதன் மூலம் உங்கள் ஆன்லைன் அனுபவத்தை அவை எளிதாக்குகின்றன. குக்கீகள் மூலம் தளங்கள்:

  • உங்களை உள்நுழைந்த நிலையிலேயே வைத்திருக்கலாம்
  • உங்கள் தள விருப்பத்தேர்வுகளை நினைவில் வைத்திருக்கலாம்
  • நீங்கள் இருக்கும் இடத்திற்குப் பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்கலாம்

எங்கள் சேவைகளை மேம்படுத்த குக்கீகளைப் பயன்படுத்துவோம். மேலும் தெரிந்துகொள்ள, எங்களின் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.

சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்கள் Google கணக்கைப் பயன்படுத்த முடியாமல் இருந்து, குக்கீகள் முடக்கப்பட்டுள்ளன என்ற செய்தியைப் பெற்றால்:

  1. குக்கீகளை இயக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையைப் பின்பற்றவும்.
  2. மீண்டும் உள்நுழைய முயலவும்.

அதற்குப் பிறகும் பிழைச் செய்தி காட்டப்பட்டால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சாத்தியமான சில தீர்வுகளைப் பயன்படுத்திப் பார்க்கவும். ஒவ்வொன்றையும் முயன்றபிறகு உள்நுழைய முயலவும்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3947565939004861855
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false