குக்கீகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

பிற மூன்றாம் தரப்பு ஆப்ஸ் மற்றும் சேவைகளில் உங்கள் Google கணக்கு செயல்படும் விதத்தைக் குக்கீகள் பாதிக்கலாம்.

முக்கியம்: குக்கீகள் முடக்கப்பட்டுள்ளன என்ற மெசேஜ் காட்டப்பட்டால், உங்கள் கணக்கைப் பயன்படுத்த குக்கீகளை இயக்க வேண்டும்.

குக்கீகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள் உருவாக்கும் ஃபைல்களே குக்கீகள் எனப்படும். உங்கள் வருகை குறித்த தகவல்களைச் சேமிப்பதன் மூலம் உங்கள் ஆன்லைன் அனுபவத்தை அவை எளிதாக்குகின்றன. உதாரணமாக, தளங்கள்:

  • உங்களை உள்நுழைந்த நிலையிலேயே வைத்திருக்கலாம்
  • உங்கள் தள விருப்பத்தேர்வுகளை நினைவில் வைத்திருக்கலாம்
  • நீங்கள் இருக்கும் இடத்திற்குப் பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்கலாம்

இரண்டு வகையான குக்கீகள் உள்ளன:

  • முதல் தரப்புக் குக்கீகள்: நீங்கள் பார்வையிடும் தளம் உருவாக்குபவை. அதாவது முகவரிப் பட்டியில் உள்ள தளம். இந்தக் குக்கீகள் சாதனத்தில் உள்ள தளத் தரவின் ஒரு வகையாகும். சாதனத்தில் உள்ள தளத் தரவு குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
  • மூன்றாம் தரப்புக் குக்கீகள்: பிற தளங்கள் உருவாக்குபவை. நீங்கள் பார்வையிடும் தளங்கள் பிற தளங்களில் உள்ள உள்ளடக்கத்தை (படங்கள், விளம்பரங்கள், வார்த்தைகள் போன்றவை) உட்பொதிக்கலாம். உங்கள் அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க குக்கீகளையும் பிற தரவையும் இந்தத் தளங்கள் சேமிக்கலாம்.


Google தனது சேவைகளை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. குக்கீகள் பயன்படுத்தப்படும் விதம் குறித்துத் தனியுரிமைக் கொள்கையில் தெரிந்துகொள்ளுங்கள்.

Chrome ஆப்ஸில்

குக்கீகள் தானாகவே இயக்கப்படும். நீங்கள் அதை முடக்கும் வரை இயக்கத்திலேயே இருக்கும். குக்கீகளை அழிப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.

Safari ஆப்ஸில்

  1. குக்கீகளை இயக்க/முடக்க அதற்கான வழிமுறையைப் பின்பற்றவும்.
  2. பிறகு 5 நிமிடங்கள் காத்திருந்து Safari ஆப்ஸைத் திறக்கவும்.

பிற உலாவிகளில்

வழிமுறைகளுக்கு உங்கள் உலாவிக்கான உதவி இணையதளத்தைப் பார்க்கவும்.

சிக்கல்களைச் சரிசெய்தல்

உங்கள் Google கணக்கு மூலம் மூன்றாம் தரப்பு இணையதளத்தில் உள்நுழைய முடியாதபோது குக்கீகள் முடக்கப்பட்டுள்ளன என்ற மெசேஜ் காட்டப்பட்டால்:

  1. குக்கீகளை இயக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  2. மீண்டும் உள்நுழைய முயலவும்.

அதற்குப் பிறகும் பிழைச் செய்தி காட்டப்பட்டால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சாத்தியமான சில தீர்வுகளைப் பயன்படுத்திப் பார்க்கவும். ஒவ்வொன்றையும் முயன்றபிறகு உள்நுழைய முயலவும்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15850984243101863913
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false