உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் உள்ள ஆடியோ ரெக்கார்டிங்குகளை நிர்வகித்தல்

Google Search, Assistant, Maps ஆகியவற்றுடன் நீங்கள் பேசும்போது Google சேவையகங்களில் உள்ள உங்கள் Google கணக்கில் குரல் மற்றும் ஆடியோ செயல்பாட்டை Google சேமிக்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். Google தனது ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களையும் அவற்றைப் பயன்படுத்தும் Google சேவைகளையும் உருவாக்கவும் மேம்படுத்தவும் உங்கள் குரல் மற்றும் ஆடியோ உதவும்.

இந்தக் ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பை நீங்கள் இயக்கும் வரை அது முடக்கப்பட்டு இருக்கும்.

முக்கியம்: பிற அமைப்புகளின் அடிப்படையில் ஆடியோ ரெக்கார்டிங்குகள் வேறு இடங்களிலும் சேமிக்கப்படலாம்.

‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பை இயக்குதல் அல்லது முடக்குதல்

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழுள்ள இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு என்பதைத் தட்டவும்.
  4. "குரல் மற்றும் ஆடியோ செயல்பாட்டைச் சேர்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.

இந்தக் ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பு முடக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் உள்நுழைந்திருந்தாலும் Google Search, Assistant, Maps ஆகியவற்றுடன் பேசும் ஆடியோ ரெக்கார்டிங்குகள் Google சேவையகங்களில் உள்ள உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படாது. ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பை முடக்கினால் ஏற்கெனவே சேமிக்கப்பட்ட ஆடியோ ரெக்கார்டிங்குகள் நீக்கப்படாது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்குகளை நீக்கிக்கொள்ளலாம்.

உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்குகளைக் கண்டறிதல் அல்லது நீக்குதல்

ஆடியோ ரெக்கார்டிங்குகளைக் கண்டறிதல்

முக்கியம்: பிற அமைப்புகளின் அடிப்படையில் ஆடியோ ரெக்கார்டிங்குகள் வேறு இடங்களிலும் சேமிக்கப்படலாம்.

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழுள்ள இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அதன் பிறகு செயல்பாட்டை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும். இந்தப் பக்கத்தில்:
    • உங்கள் முந்தைய செயல்பாடுகளின் பட்டியலைப் பார்க்கலாம்: ஆடியோ ஐகானுடன் Speak இருப்பவை ரெக்கார்டிங்கைக் கொண்டிருக்கும்.
    • ரெக்கார்டிங்கைப் பிளே செய்யலாம்: ஆடியோ ஐகானுக்கு Speak அடுத்துள்ள விவரங்கள் அதன் பிறகு ரெக்கார்டிங்கைக் காட்டு என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு பிளே செய்வதற்கான ஐகானை இயக்கு கிளிக் செய்யவும்.

பல ஆடியோ ரெக்கார்டிங்குகள்: Google Assistant வசதியுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள் உங்கள் ஆடியோவைச் செயலாக்கியிருந்தால், செயல்பாட்டுடன் தொடர்புடைய பல ஆடியோ ரெக்கார்டிங்குகள் காட்டப்படலாம். எந்தச் சாதனம் உங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் எங்கள் தொழில்நுட்பங்களை மேம்படுத்த இந்த ஆடியோவைப் பயன்படுத்துகிறோம்.

"டிரான்ஸ்கிரிப்ட் இல்லை" என்ற மெசேஜ் காட்டப்பட்டால் அந்தச் செயல்பாட்டின்போது பின்புல இரைச்சல் அதிகமாக இருந்திருக்கலாம்.

Google Takeout மூலம், உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள ஆடியோவைப் பதிவிறக்கலாம். ஆடியோவையும் பிற Google தரவையும் எப்படிப் பதிவிறக்குவது என அறிக.

உதவிக்குறிப்பு: கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்க, ‘எனது செயல்பாடுகள்’ பக்கத்தில் உங்கள் செயல்பாடுகளின் விவரங்கள் முழுவதையும் பார்க்க கூடுதல் சரிபார்ப்புப் படி தேவைப்படுமாறு நீங்கள் அமைக்க முடியும்.

உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டிலிருந்து ஆடியோ ரெக்கார்டிங்குகளை நீக்குதல்

முக்கியம்: பிற அமைப்புகளின் அடிப்படையில் ஆடியோ ரெக்கார்டிங்குகள் வேறு இடங்களிலும் சேமிக்கப்படலாம்.

ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் நீக்குதல்

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழுள்ள இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு and then செயல்பாட்டை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் முந்தைய செயல்பாடுகளின் பட்டியல் இந்தப் பக்கத்தில் காட்டப்படும். ஆடியோ ஐகானுடன் Speak இருப்பவை ரெக்கார்டிங்கைக் கொண்டிருக்கும்.
  4. நீக்க விரும்பும் செயல்பாட்டிற்கு அடுத்துள்ள மேலும் More and then நீக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரே நேரத்தில் அனைத்தையும் நீக்குதல்

முக்கியம்: இந்தப் படிகளைச் செய்தால் ரெக்கார்டிங் இருப்பவை மட்டுமல்லாமல் ‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடுகள்’ அமைப்பில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்தும் நீக்கப்படும்.

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழுள்ள இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு and then செயல்பாட்டை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் முந்தைய செயல்பாடுகளின் பட்டியல் இந்தப் பக்கத்தில் காட்டப்படும். ஆடியோ ஐகானுடன் Speak இருப்பவை ரெக்கார்டிங்கைக் கொண்டிருக்கும்.
  4. உங்கள் செயல்பாட்டுக்கு மேலே உள்ள நீக்கு and then இதுவரை அனைத்தும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

ஆடியோ ரெக்கார்டிங்குகளைத் தானாகவே நீக்குதல்

முக்கியம்: இந்தப் படிகள் ஆடியோ ரெக்கார்டிங்கைக் கொண்டிருப்பவை மட்டுமல்லாது உங்கள் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடுகள் அனைத்திற்கும் ‘தானாக நீக்கும்’ விருப்பத்தை இயக்குகின்றன.

  1. கம்ப்யூட்டரில் உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள தரவு & தனியுரிமை என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழுள்ள இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அதன் பிறகு செயல்பாட்டை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் செயல்பாடுகளுக்கு மேலே உள்ள தேடல் பட்டியில் மேலும் More அதன் பிறகு செயல்பாட்டை இவ்வளவு காலம் வைத்திரு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. உங்கள் செயல்பாட்டை எவ்வளவு காலம் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு அடுத்து அதன் பிறகு உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

Googleளின் ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்கள், அவற்றைப் பயன்படுத்தும் சேவைகள் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் Google சேவையகங்களில் இருக்கும் உங்கள் ஆடியோ ரெக்கார்டிங்குகள் இனி தேவைப்படாது எனும்போது நீங்கள் தேர்வுசெய்யும் கால வரம்பிற்கு முன்னதாகவே Google அவற்றை நீக்கக்கூடும். உதாரணத்திற்கு, நாளடைவில் சில மொழிகளுக்குக் குறைவான ஆடியோ மட்டுமே தேவைப்படக்கூடும்.

‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பு - ஓர் அறிமுகம்

நீங்கள் Google சேவைகளுடன் பேசும்போது அந்த ஆடியோவைச் செயலாக்கி உங்களுக்குப் பதிலளிக்க Google அதன் ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும். உதாரணமாக, குரல் மூலம் தேடுவதற்காக மைக் ஐகானைத் தொட்டால் Googleளின் ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்கள் நீங்கள் கூறுவதைச் சொற்களாகவும் சொற்றொடர்களாகவும் மாற்றும். Search அவற்றை ஓர் இன்டெக்ஸில் தேடி பொருத்தமான முடிவுகளை உங்களுக்கு வழங்கும்.

Google தளங்கள், ஆப்ஸ், சேவைகள் ஆகியவற்றில் நீங்கள் செய்பவற்றை Google சேவையகங்களில் உள்ள உங்கள் Google கணக்கில் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு சேமிக்கும். இவற்றில் இருப்பிடம் போன்ற தொடர்புடைய தகவல்களும் அடங்கும். குறிப்பிட்ட சில செயல்பாடுகள் சேமிக்கப்படாமல் போகலாம்.

இந்தக் ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பை (விருப்பத்திற்குரியது) பயன்படுத்துவதன் மூலம் Google Search, Assistant, Maps ஆகியவற்றுடன் நீங்கள் பேசும்போது ‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ மூலம் ஆடியோ ரெக்கார்டிங்குகளையும் நீங்கள் சேமிக்கலாம். இந்தக் ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பை நீங்கள் இயக்கும் வரை அது முடக்கப்பட்டு இருக்கும்.

நீங்கள் Search, Assistant, Maps ஆகியவற்றில் எந்தச் சாதனத்தில் உள்நுழைந்திருந்தாலும் இந்த அமைப்பு செயல்படும். உதாரணமாக, Google Assistant ஆப்ஸ், Google Home ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆகிய இரண்டிலும் Assistantடில் உள்நுழைந்திருந்தால் இந்த அமைப்பு செயல்படும்.

ஆடியோ ரெக்கார்டிங்குகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களையும் அவற்றைப் பயன்படுத்தும் Google Assistant போன்ற Google சேவைகளையும் உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது சேமிக்கப்பட்ட ஆடியோவை Google பயன்படுத்தும்.

ஆடியோ மதிப்பாய்வுச் செயல்முறை

சில ஆடியோ தொழில்நுட்ப மேம்பாடுகளுக்காக, இந்த அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது Google சேவையகங்களில் சேமிக்கப்பட்ட ஆடியோவின் மாதிரிகளைப் பயிற்சிபெற்ற மதிப்பாய்வாளர்கள் பகுப்பாய்வு செய்வார்கள். அவர்கள் அவற்றைக் கேட்டு, எழுத்தாக்கம் செய்து விரிவுரையைச் சேர்ப்பார்கள். இதனால் ஆடியோவை Google சேவைகள் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, இரைச்சலாக இருக்கும் சூழலிலோ குறிப்பிட்ட மொழியிலோ ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்தச் செயலாக்கத்தின் ஒரு பகுதியாக உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். உதாரணமாக, ஆடியோவை மதிப்பாய்வாளர்கள் பகுப்பாய்வு செய்யும்போது அதை உங்கள் கணக்கிற்குத் தொடர்பற்றதாக மாற்றுகிறோம்.

பயனர்கள் சொல்வதைச் சேவைகள் நன்றாகப் புரிந்துகொள்ள இந்தச் செயலாக்கம் உதவுகிறது. உதாரணமாக, தரவு அதிகமுள்ள மொழிகளில் இருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்ட ஆடியோவைப் பயன்படுத்தி ஒற்றை மாடலுக்குப் பயிற்சி அளித்து, தரவு குறைவாக உள்ள மொழிகளுக்கான தன்னியக்கப் பேச்சு அறிதல் தொழில்நுட்பத்தை Google மேம்படுத்தியது. இது ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள பேச்சுக்களை நிகழ்நேரத்தில் கண்டறிய உதவியது.

குரல் தொழில்நுட்பங்கள்

முக்கியம்: ஜூன் 6, 2022க்குப் பிறகு நீங்கள் ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பை இயக்கினால் இந்தத் தகவல் பொருந்தும்.

Voice Match போன்ற Googleளின் சில ஆடியோ தொழில்நுட்பங்களால் ஒரே மாதிரியான குரல்களை அடையாளம் காண முடியும், குரல்களைப் பிரித்தறிய முடியும் அல்லது தனித்துவமான குரல் மூலம் இந்தத் தொழில்நுட்பங்களை மேம்படுத்த முடியும். Google Assistantடில் நீங்கள் Voice Match அம்சத்தைப் பயன்படுத்துவதுடன் ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பையும் இயக்கியிருந்தால் Googleளின் குரல் தொழில்நுட்பங்களையும், அவற்றைப் பயன்படுத்தும் Google சேவைகளையும் உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் சேமிக்கப்பட்ட ஆடியோவில் உள்ள உங்களின் குரல் மாதிரியையும் Google தற்காலிகமாகச் செயலாக்கலாம். பிற அமைப்புகளில் உங்கள் குரல் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என அறிக.

இந்தச் செயலாக்கத்தின் ஒரு பகுதியாக உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். உதாரணமாக, சேமித்த ஆடியோவில் இருந்து உங்கள் குரல் மாதிரி பகுப்பாய்வு செய்யப்பட்டால் அது உங்கள் கணக்கிற்குத் தொடர்பற்றதாக மாற்றப்பட்டு எங்களின் ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களை மேம்படுத்தத் தற்காலிகமாகச் செயலாக்கப்பட்டு அதன்பிறகு நீக்கப்படும். இந்த மாதிரியான குரல் செயலாக்கம் ஒவ்வொன்றுக்கும் 7 நாட்கள் வரை ஆகலாம். சில அதிகார எல்லைகளில் குரல் பதிவுகள் பயோமெட்ரிக் தரவாகக் கருதப்படக்கூடும்.

இந்தக் ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது

உங்களின் ‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ அமைப்பில் இந்தக் ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பு இயக்கப்பட்டிருந்தால் Google Search, Assistant, Maps ஆகியவற்றுடன் நீங்கள் பேசும்போது உங்கள் Google கணக்கில் ஆடியோ ரெக்கார்டிங்குகளை Google சேமிக்கும்.

இயக்கச் செயல்பாட்டை உங்கள் சாதனம் கண்டறியும்போது ஆடியோ சேமிக்கப்படும். “Ok Google” எனக் கூறுவது, நீங்கள் இயக்கும் துரிதச் சொற்றொடர், தொடர்ச்சியான உரையாடல்கள், மைக் ஐகானை அழுத்துவது போன்ற வெவ்வேறு வகையான இயக்கச் செயல்பாடுகளைச் சாதனங்கள் ஆதரிக்கக்கூடும். கோரிக்கையை முழுமையாகப் பெற, சில சாதனங்கள் இயக்கச் செயல்பாட்டிற்கு முன்பான சில வினாடிகளின் ஆடியோவையும் சேமிக்கும்.

சில சமயங்களில் உங்கள் சாதனம் தவறுதலான இயக்கச் செயல்பாட்டைக் கண்டறிந்தால் (உதாரணமாக, “Ok Google” என்பது போன்ற சத்தம்) ஆடியோ சேமிக்கப்படக்கூடும். எதிர்பாராத இயக்கச் செயல்பாடுகளைக் குறைக்கும் வகையில் எங்கள் சிஸ்டங்களை மேம்படுத்தத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

இணைய இணைப்பு இல்லாமல் உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தினால் நீங்கள் மீண்டும் ஆன்லைனுக்கு வரும்போது ஆடியோ உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படலாம்.

இந்தக் ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பு முடக்கப்பட்டிருக்கும்போது

இந்தக் ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பை நீங்கள் முடக்கினால் Google Search, Assistant, Maps ஆகியவற்றுடன் பேசும்போது Google சேவையகங்களில் உள்ள உங்கள் Google கணக்கில் 'இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு' மூலம் ஆடியோ ரெக்கார்டிங்குகளை Google சேமிக்காது. Google சேவைகளுடன் நீங்கள் பேசும்போது உங்களுக்குப் பதிலளிப்பதற்காக உங்கள் ஆடியோவை Google தொடர்ந்து செயலாக்கும்.

’குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பை முடக்கினால் பிற Assistant ஆடியோ அமைப்புகள் முடக்கப்படாது.

’குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பு முடக்கப்பட்டிருந்தால், இந்த அமைப்பு இயக்கத்தில் இருந்தபோது ஏற்கெனவே சேமிக்கப்பட்ட ஆடியோவை Voice Match போன்ற குரல் தொழில்நுட்பங்களை மேம்படுத்த Google பயன்படுத்தாது. முன்னர் சேமிக்கப்பட்ட ஆடியோவை நீங்கள் நீக்காத வரை பிற ஆடியோ தொழில்நுட்பங்களை மேம்படுத்த அது தொடர்ந்து பயன்படுத்தப்படக்கூடும்.

activity.google.com என்ற தளத்தில் ‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ அமைப்பிற்குச் சென்று முன்னர் சேமிக்கப்பட்ட ஆடியோவை நீங்கள் நீக்கலாம்.

ஆடியோ ரெக்கார்டிங்குகள் சேமிக்கப்படக்கூடிய வேறு இடங்கள்

இந்தக் ‘குரல் மற்றும் ஆடியோ செயல்பாடு’ அமைப்பு இவற்றில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது:

  • Google Voice, YouTube போன்ற பிற Google சேவைகள் மூலம் சேமிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் ஆடியோ.
  • உங்களின் தனிப்பட்ட Voice Matchசை அமைத்து அதை மேம்படுத்துவது, உங்கள் சாதனத்தில் ஆடியோ தொழில்நுட்பங்களைப் பிரத்தியேகமாக்குவது போன்ற காரணங்களுக்காக உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும் ஆடியோ.

ஃபெடரேட்டட் லேர்னிங் அல்லது எஃபிமெரல் லேர்னிங் மூலம் ஆடியோ ரெகக்னிஷன் தொழில்நுட்பங்களை மேம்படுத்த, இந்த அமைப்பால் கட்டுப்படுத்தப்படாத பிற மெஷின் லேர்னிங் செயலாக்கங்கள் பயன்படுத்தப்படலாம்.

பேச்சு மாடல்களை Google எப்படி மேம்படுத்துகிறது என்று மேலும் அறிக.

தொடர்புடைய தகவல்கள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6906113951779031152
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false