பாதுகாப்பு குறைவான ஆப்ஸும் உங்கள் Google கணக்கும்

செப்டம்பர் 30, 2024 முதல், உள்நுழைவதற்குப் பயனர்பெயரும் கடவுச்சொல்லும் மட்டுமே தேவைப்படுகின்ற பாதுகாப்பு குறைவான ஆப்ஸ், மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது சாதனங்களில் Google Workspace கணக்குகளைப் பயன்படுத்த முடியாது. சரியான தேதிகளைத் தெரிந்துகொள்ள Google Workspace அறிவிப்புகள் பக்கத்தைப் பாருங்கள். உங்கள் Google கணக்கின் மூலம் ஒரு குறிப்பிட்ட ஆப்ஸைத் தொடர்ந்து பயன்படுத்த, கடவுச்சொல் தரவைப் பகிராத, மிகவும் பாதுகாப்பான அணுகல் வகையைப் பயன்படுத்த வேண்டும். 'Google மூலம் உள்நுழைவு' அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

எங்களின் பாதுகாப்புத் தரநிலைகளை ஆப்ஸோ தளமோ பூர்த்திசெய்யவில்லை எனில் அதில் இருந்து உங்கள் கணக்கில் உள்நுழைய முயலும் அனைவரையும் Google தடுக்கக்கூடும். பாதுகாப்பு குறைவான ஆப்ஸைப் பயன்படுத்தினால் ஹேக்கர்கள் உங்கள் கணக்கை எளிதாக ஹேக் செய்யக்கூடும் என்பதால் இந்த ஆப்ஸில் இருந்து உள்நுழைவதைத் தடுப்பது உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

மிகவும் பாதுகாப்பான ஆப்ஸைப் பயன்படுத்துதல்

பாதுகாப்பு குறைவான உள்நுழைவுத் தொழில்நுட்பத்தை ஓர் ஆப்ஸ் பயன்படுத்தினால் உங்கள் Google கணக்கின் மூலம் அந்த ஆப்ஸைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.

பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை மட்டும் பயன்படுத்தும் ஆப்ஸ் உங்கள் Google கணக்கை அணுக முயலும்போது பிழைகள் காட்டப்படும். இதுபோன்ற பிழைகள் காட்டப்படலாம்:

  • "தவறான பயனர்பெயர்”
  • "தவறான கடவுச்சொல்"
  • "உள்நுழைய முடியவில்லை"

“Google மூலம் உள்நுழைவு” விருப்பத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு மூன்றாம் தரப்பு ஆப்ஸில் இருந்தும் உங்கள் Google கணக்கில் உள்நுழையலாம். சில நேரங்களில் உங்கள் சாதனத்தில் இருந்து Google கணக்கை அகற்றிவிட்டு, மீண்டும் சேர்க்க வேண்டியிருக்கலாம்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8121622204959097638
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false