உங்கள் செயல்பாட்டை நீக்குதல்

Google தளங்களையும் ஆப்ஸையும் சேவைகளையும் பயன்படுத்தும்போது நீங்கள் மேற்கொள்ளும் சில செயல்பாடுகள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும். இந்தச் செயல்பாடுகளை ‘எனது செயல்பாடுகள்’ என்பதில் கண்டறிந்து நீக்கலாம், பெரும்பாலான செயல்பாடுகள் சேமிக்கப்படுவதை எந்த நேரத்திலும் நிறுத்தலாம்.

செயல்பாடுகள் அனைத்தையும் நீக்குதல்

  1. iPhone அல்லது iPadல் myactivity.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. உங்கள் செயல்பாடுகளுக்கு மேலே உள்ள நீக்கு என்பதைத் தட்டவும்.
  3. இதுவரை அனைத்தும் என்பதைத் தட்டவும்.
  4. அடுத்து அதன் பிறகு நீக்கு என்பதைத் தட்டவும்.

தனித்தனிச் செயல்பாடுகளை நீக்குதல்

உதாரணமாக, Googleளில் நீங்கள் மேற்கொண்ட தேடலோ Chromeமில் நீங்கள் பார்த்த இணையதளமோ இவற்றில் அடங்கும்:

  1. iPhone அல்லது iPadல் myactivity.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. கீழே ஸ்க்ரோல் செய்து உங்கள் செயல்பாட்டுக்குச் செல்லவும்.
  3. நீங்கள் நீக்க விரும்பும் செயல்பாட்டைக் கண்டறியவும். செயல்பாட்டைக் கண்டறிவதற்கான சில வழிகள்:
    • நாளின்படி தேடுதல்.
    • தேடுதல் அல்லது வடிப்பான்களைப் பயன்படுத்துதல்.
  4. நீக்க விரும்பும் செயல்பாட்டின் மீதுள்ள, நீக்குவதற்கான ஐகானை தட்டவும்.

தேதி/தயாரிப்பின்படி செயல்பாட்டை நீக்குதல்

  1. iPhone அல்லது iPadல் myactivity.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. கீழே ஸ்க்ரோல் செய்து உங்கள் செயல்பாட்டுக்குச் செல்லவும்.
  3. உங்கள் செயல்பாடுகளை வடிகட்டவும். ஒரே நேரத்தில் தேதியின்படியும் தயாரிப்பின்படியும் வடிகட்டலாம்.
    • தேதியின்படி வடிகட்ட: கேலெண்டர் ஐகானை event தட்டவும். பிறகு, ஒரு தேதிக்கு முன்னான செயல்பாடுகளைப் பார்க்க அந்தத் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
    • தயாரிப்பின்படி வடிகட்ட: தேடுவதற்கான ஐகானை Search தட்டவும். பிறகு, நீங்கள் சேர்க்க விரும்பும் தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். சில Google தயாரிப்புகள் ’எனது செயல்பாடுகள்’ என்பதில் செயல்பாடுகளைச் சேமிக்காது.
  4. செயல்பாட்டை நீக்கவும்.
    • நீங்கள் வடிகட்டிய செயல்பாடுகள் அனைத்தையும் நீக்க: தேடல் பட்டிக்கு அடுத்துள்ள நீக்கு அதன் பிறகு முடிவுகளை நீக்கு என்பதைத் தட்டவும்.
    • குறிப்பிட்ட செயல்பாடுகளை நீக்க: நீங்கள் நீக்க விரும்பும் செயல்பாட்டின் மீதுள்ள, நீக்குவதற்கான ஐகானை  தட்டவும்.

உங்கள் செயல்பாடுகளைத் தானாக நீக்குதல்

உங்கள் Google கணக்கில் உள்ள செயல்பாட்டில் சிலவற்றைத் தானாக நீக்க முடியும்.

  1. உங்கள் iPhone அல்லது iPadல் Gmail ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேலே வலப்புறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டி அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும். நீங்கள் Gmailலைப் பயன்படுத்தவில்லை எனில் myaccount.google.com தளத்திற்குச் செல்லவும்.
  3. மேலே உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்கு ஸ்க்ரோல் செய்யவும்.
  5. தானாக நீக்கப்பட வேண்டுமென நீங்கள் விரும்பும் செயல்பாட்டையோ செயல்பாட்டு அமைப்பையோ தட்டவும்.
  6. ஸ்க்ரோல் செய்து, தானாக நீக்குதல் என்பதைத் தட்டவும்.
  7. உங்கள் செயல்பாடுகளை எவ்வளவு காலம் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்து அதன் பிறகு அடுத்து அதன் பிறகு உறுதிப்படுத்து என்பதைத் தட்டி நீங்கள் தேர்வுசெய்ததைச் சேமிக்கவும்.

உதவிக்குறிப்பு: சில செயல்பாடுகள் நீங்கள் தேர்வுசெய்த கால வரம்பிற்கு முன்பாகவே காலாவதியாகிவிடக்கூடும். உதாரணமாக, உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் பொதுவான பகுதி, IP முகவரி ஆகியவற்றைப் பற்றிய இருப்பிடத் தகவல், 30 நாட்களுக்குப் பிறகு இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டுத் தரவில் இருந்து தானாக நீக்கப்படும்.

பிற இடங்களில் உள்ள செயல்பாடுகளை நீக்குதல்

‘எனது செயல்பாடுகள்’ அல்லாத வேறு இடங்களிலும் உங்கள் செயல்பாடுகள் சேமிக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை நீங்கள் இயக்கியிருந்தால், ‘எனது செயல்பாடுகள்’ என்பதில் சேமிக்கப்படுவதற்குப் பதிலாக அந்தச் செயல்பாடுகள் உங்கள் Maps காலப்பதிவில் சேமிக்கப்பட்டிருக்கும். நீங்கள் நீக்காத வரை 'இதுவரை சென்ற இடங்கள்' தொடர்ந்து சேமிக்கப்படும். காலப்பதிவிலோ எனது Google செயல்பாடுகள் என்பதிலோ உங்களின் 'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பைச் சரிபார்க்கலாம் மாற்றலாம்.

உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டுள்ள பிற செயல்பாடுகளை நீக்குதல்

  1. iPhone அல்லது iPadல் myactivity.google.com தளத்திற்குச் செல்லவும்.

  2. உங்கள் செயல்பாடுகளுக்கு மேலே தேடல் பட்டியில் உள்ள மூன்று புள்ளி மெனுவை More தட்டி அதன் பிறகு பிற Google செயல்பாடுகள் என்பதைத் தட்டவும்.
  3. இனி இவற்றைச் செய்யலாம்:
    • குறிப்பிட்ட செயல்பாட்டை நீக்குதல்: செயல்பாட்டுக்குக் கீழே, நீக்கு என்பதைத் தட்டவும்.
    • செயல்பாடுகளை எங்கே நீக்குவது என்று கண்டறிதல்: செயல்பாட்டுக்குக் கீழே, செல், காட்டு அல்லது நிர்வகிக்கவும் என்பதைத் தட்டவும்.

உலாவல் செயல்பாட்டை நீக்குதல்

‘எனது செயல்பாடுகள்’ என்பதில் இருந்து உங்கள் செயல்பாடுகளை நீக்கினாலும் அவை உலாவியில் சேமிக்கப்பட்டிருக்கலாம்.

உங்கள் சாதனத்தில் இருந்து Google ஆப்ஸ் தேடல்களை நீக்குதல்

iPhone அல்லது iPadல் Google ஆப்ஸைப் பயன்படுத்தினால்:

  • உங்கள் செயல்பாடுகளை எனது செயல்பாடுகள் என்பதில் இருந்து நீக்கினாலும் அவை சாதனத்தில் சேமிக்கப்பட்டிருக்கக்கூடும்.
  • நீங்கள் Google ஆப்ஸில் நீக்கும் செயல்பாடுகள் எனது செயல்பாடுகள் என்பதில் இருந்து நீக்கப்படாமல் இருக்கலாம்.

சமீபத்திய தேடல்களை நீக்குதல்

தேடல் பட்டிக்குக் கீழே தோன்றும் சமீபத்திய தேடல்களை நீக்க:

  1. iPhone அல்லது iPadல் Google ஆப்ஸைத் Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. தேடல் பட்டி அதன் பிறகு அனைத்தையும் காட்டு என்பதைத் தட்டவும்.
  3. நீங்கள் நீக்க விரும்பும் தேடலைக் கண்டறிந்து இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.
  4. நீக்கு என்பதைத் தட்டவும்.

முந்தைய தேடல்கள் அனைத்தையும் நீக்குதல்

  1. iPhone அல்லது iPadல் Google ஆப்ஸைத் Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. தேடல் பட்டி அதன் பிறகு அனைத்தையும் காட்டு என்பதைத் தட்டவும்.
  3. அனைத்தையும் அழி அதன் பிறகு சாதனத்தில் உள்ள பதிவுகளை அழி என்பதைத் தட்டவும்.

தேடல்கள் சேமிக்கப்படாமல் நிறுத்துதல்

  1. iPhone அல்லது iPadல் Google ஆப்ஸைத் Google தேடல் திறக்கவும்.
  2. கீழே வலதுபுறத்தில், மூன்று புள்ளி மெனு மேலும் அதன் பிறகு மறைநிலைப் பயன்முறையை இயக்கு என்பதைத் தட்டவும். இதுவும் தேடல் பட்டிக்குக் கீழே சமீபத்திய தேடல்கள் காட்டப்படுவதை நிறுத்தும்.

தனிப்பட்ட முறையில் தேடுவது & உலாவுவது எப்படி என்று அறிக.

முடக்குதல் & செயல்பாட்டை நீக்குதல்

‘எனது செயல்பாடுகள்’ பக்கத்தில் உள்ள பெரும்பாலான தகவல்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  3. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்குக் கீழே, நீங்கள் சேமிக்க விரும்பாத செயல்பாட்டையோ செயல்பாட்டு அமைப்பையோ தட்டவும்.
  4. நீங்கள் சேமிக்க விரும்பாத அமைப்புக்குக் கீழே உள்ள முடக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. அமைப்பை முடக்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும் அல்லது முடக்கு என்பதையோ முடக்கு & செயல்பாட்டை நீக்கு என்பதையோ தேர்வுசெய்யவும்.
    • முடக்கு & செயல்பாட்டை நீக்கு என்பதைத் தேர்வுசெய்தால் எந்தச் செயல்பாட்டை நீக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிசெய்ய அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: சில செயல்பாடுகள் ‘எனது செயல்பாடுகளில்’ சேர்க்கப்படுவதில்லை.

செயல்பாடுகள் சேமிக்கப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்துதல்

நீங்கள் தனிப்பட்ட முறையில் இணையத்தில் தேடலாம் உலாவலாம்.

உதவிக்குறிப்பு: மறைநிலை உலாவல் சாளரத்தின் மூலம் உங்கள் Google கணக்கில் உள்நுழைந்தால் உங்கள் தேடல் செயல்பாடு அந்தக் கணக்கிலேயே சேமிக்கப்படக்கூடும்.

சிக்கல்களைச் சரிசெய்தல்

நீக்கப்பட்ட செயல்பாடுகள் ‘எனது செயல்பாடுகள்’ என்பதில் காட்டப்படும்

  • சாதனம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளவும். ஒரு சாதனத்தில் ‘எனது செயல்பாடுகள்’ என்பதில் இருந்து செயல்பாடுகளை நீக்கினாலும்கூட அவை ஆஃப்லைனில் உள்ள சாதனங்களில் தொடர்ந்து காட்டப்படலாம். சாதனத்தை இணையத்துடன் இணைக்கும்போது செயல்பாடுகள் அகற்றப்படும்.
  • தற்காலிக சேமிப்பையும் குக்கீகளையும் அழிக்கவும்.

உங்கள் செயல்பாடுகள் எவ்வாறு நீக்கப்படும்?

செயல்பாட்டை நேரடியாக நீங்கள் நீக்கினாலோ தானாக நீக்குதல் அமைப்பின் அடிப்படையில் செயல்பாடு தானாகவே நீக்கப்பட்டாலோ தயாரிப்பிலும் எங்கள் சிஸ்டத்திலும் இருந்து அதை அகற்றும் செயல்முறையை உடனடியாக நாங்கள் தொடங்குவோம்.

முதலில், அதைப் பார்வையிலிருந்து உடனடியாக அகற்ற முயலுவோம். மேலும் அந்தத் தரவை உங்கள் Google அனுபவத்தைப் பிரத்தியேகப்படுத்துவதற்கு இனி பயன்படுத்த முடியாது.

பிறகு, எங்கள் சேமிப்பு சிஸ்டங்களில் இருந்து தரவைப் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் நீக்குவதற்கான செயல்பாட்டைத் தொடங்குவோம். 

தரவை நேரடியாகவோ தானாகவோ நீக்குவதற்கு உதவுவதோடு உங்கள் அனுபவத்தை மேம்படுத்தப் பயன்படாத சில வகையான செயல்பாடுகளையும் Google விரைவில் நீக்கக்கூடும். 

பிசினஸ் அல்லது சட்டத் தேவைகள் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக Google சில வகையான தரவை நீண்டகாலத்திற்குத் தக்கவைத்துக் கொள்ளக்கூடும்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4418136893747089525
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false