இதுவரை சென்ற இடங்களை iPhone மற்றும் iPadல் நிர்வகித்தல்

வரும் மாதங்களில், இதுவரை சென்ற இடங்கள் அமைப்பின் பெயர் காலப்பதிவு என மாற்றப்படும். உங்கள் கணக்கில் இதுவரை சென்ற இடங்கள் இயக்கத்தில் இருந்தால், உங்கள் ஆப்ஸிலும் கணக்கு அமைப்புகளிலும் காலப்பதிவு என்பதைப் பார்ப்பீர்கள்.

'இதுவரை சென்ற இடங்கள்' என்பது ஒரு Google கணக்கு அமைப்பாகும். நீங்கள் சென்ற இடங்கள், வழிகள், பயணங்கள் ஆகியவற்றை நினைவில்கொள்ள உதவும் வகையில் 'காலப்பதிவு' என்ற தனிப்பட்ட வரைபடத்தை இது உருவாக்கும். 'இதுவரை சென்ற இடங்கள்' பின்வரும் சூழல்களில் வேலை செய்யும்:

  • உங்கள் Google கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்கும்போது.
  • 'இதுவரை சென்ற இடங்கள்' இயக்கப்பட்டிருக்கும்போது.
  • ‘இருப்பிட அறிக்கையிடல்’ இயக்கப்பட்டிருக்கும்போது.

கவனத்திற்கு: உங்கள் சாதனத்தின் இருப்பிடமும் அவ்வப்போதுபின்னணியில் பயன்படுத்தப்படலாம். 'இதுவரை சென்ற இடங்கள்' இயக்கப்பட்டிருக்கும்போது, Google ஆப்ஸ் பயன்பாட்டில் இல்லை என்றாலும் உங்கள் சாதனத்தின் துல்லியமான இருப்பிடம் உங்கள் சாதனங்களிலும் Google சேவையகங்களிலும் தொடர்ந்து சேமிக்கப்படும்.

'இதுவரை சென்ற இடங்கள்' இயக்கப்பட்டிருக்கும்போது, Google தயாரிப்புகள் மற்றும் சேவைகள் முழுவதிலும் பல்வேறு பலன்களைப் பெறலாம். உதாரணமாக: 

  • பிரத்தியேக வரைபடங்கள்
  • நீங்கள் சென்ற இடங்களின் அடிப்படையிலான பரிந்துரைகள் 
  • இவற்றைக் கண்டறிவதற்கான உதவி:
    • உங்கள் மொபைல் 
    • நீங்கள் வழக்கமாகச் செல்லும் பயண வழியில் உள்ள நிகழ்நேர டிராஃபிக் குறித்த அறிவிப்புகள்

இயல்பாகவே, உங்கள் Google கணக்கிற்கு 'இதுவரை சென்ற இடங்கள்' முடக்கப்பட்டிருக்கும். 'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பை இயக்க நீங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

  • உங்கள் Google கணக்கின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளுக்குச் சென்று 'இதுவரை சென்ற இடங்கள்' அமைப்பை எப்போது வேண்டுமானாலும் முடக்கிக்கொள்ளலாம்.
  • 'இதுவரை சென்ற இடங்கள்' பதிவில் எவையெல்லாம் சேமிக்கப்படுகின்றன என்பதை நீங்களே கட்டுப்படுத்தலாம். நீங்கள் சென்ற இடங்களை Google Maps காலப்பதிவில் பார்க்கலாம். காலப்பதிவைத் திருத்தலாம் அல்லது ‘இதுவரை சென்ற இடங்கள்’ பதிவை நீக்குவதற்கு அதைப் பயன்படுத்தலாம்.

இதுவரை சென்ற இடங்களைக் காலப்பதிவில் பார்த்தல் & நிர்வகித்தல்

  1. உங்கள் காலப்பதிவிற்குச் செல்லவும்.
  2. மேலே இடதுபுறத்தில், நீங்கள் பார்க்க விரும்பும் கால அளவைத் தேர்வுசெய்யவும்.

இதுவரை சென்ற இடங்கள் பதிவை நீக்குதல்

Google Maps காலப்பதிவில் உள்ள இதுவரை சென்ற இடங்களின் தகவல்களை நீங்கள் நிர்வகிக்கலாம் நீக்கலாம். இதுவரை சென்ற இடங்களின் தகவல்கள் அனைத்தையுமோ சிலவற்றை மட்டுமோ நீக்கும்படி நீங்கள் தேர்வுசெய்யலாம்.

முக்கியம்: காலப்பதிவிலிருந்து இதுவரை சென்ற இடங்களின் தகவல்களை நீக்கிவிட்டால் அவற்றை மீண்டும் பார்க்க முடியாது.

Google Maps ஆப்ஸைப் பயன்படுத்துதல்

இதுவரை சென்ற இடங்கள் அனைத்தையும் நீக்குதல்

  1. iPhone அல்லது iPadல் Google Maps ஆப்ஸை Maps திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதலெழுத்து Account Circle அதன் பிறகு உங்கள் காலப்பதிவு Timeline என்பதைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை 더보기அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. "இருப்பிட அமைப்புகள்" என்பதற்குக் கீழே உள்ள, இதுவரை சென்ற இடங்கள் அனைத்தையும் நீக்கு என்பதைத் தட்டவும்.
  5. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

இதுவரை சென்ற இடங்களில் குறிப்பிட்ட கால அளவிற்கான பதிவுகளை நீக்குதல்

  1. iPhone அல்லது iPadல் Google Maps ஆப்ஸை Maps திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதலெழுத்து Account Circle அதன் பிறகு உங்கள் காலப்பதிவு Timeline என்பதைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை 더보기அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. "இருப்பிட அமைப்புகள்" என்பதற்குக் கீழே உள்ள, 'இதுவரை சென்ற இடங்கள்' குறிப்பிட்ட வரம்பை நீக்கு என்பதைத் தட்டவும்.
  5. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

இதுவரை சென்ற இடங்கள் பதிவில் இருந்து ஒரு நாளுக்கான பதிவை நீக்குதல்

  1. iPhone அல்லது iPadல் Google Maps ஆப்ஸை Maps திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதலெழுத்து Account Circle அதன் பிறகு உங்கள் காலப்பதிவு Timeline என்பதைத் தட்டவும்.
  3. கேலெண்டரைக் காட்டு Show calendar என்பதைத் தட்டவும்.
  4. நீக்க விரும்பும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. மேலும் 더보기அதன் பிறகு நாளை நீக்கு என்பதைத் தட்டவும்.
  6. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

இதுவரை சென்ற இடங்கள் பதிவில் இருந்து ஓர் இடத்தை நீக்குதல்

  1. iPhone அல்லது iPadல் Google Maps ஆப்ஸை Maps திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதலெழுத்து Account Circle அதன் பிறகு உங்கள் காலப்பதிவு Timeline என்பதைத் தட்டவும்.
  3. கேலெண்டரைக் காட்டு Show calendar என்பதைத் தட்டவும்.
  4. நீக்க விரும்பும் இடம் இருக்கும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நீக்க விரும்பும் இடத்தைத் தட்டி அதன் பிறகு நீக்கு நீக்கு என்பதைத் தட்டவும்.
  6. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.
வலை உலாவியைப் பயன்படுத்துதல்

இதுவரை சென்ற இடங்கள் அனைத்தையும் நீக்குதல்

  1. வலை உலாவியில் உங்கள் Google Maps காலப்பதிவைத் திறக்கவும்.
  2. நீக்கு நீக்கு என்பதைத் தட்டவும்.
  3. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

இதுவரை சென்ற இடங்கள் பதிவில் இருந்து ஒரு நாளுக்கான பதிவை நீக்குதல்

  1. வலை உலாவியில் உங்கள் Google Maps காலப்பதிவைத் திறக்கவும்.
  2. நீக்க விரும்பும் ஆண்டு, மாதம், தேதி ஆகியவற்றைத் தேர்வுசெய்யவும்.
  3. நீக்கு நீக்கு என்பதைத் தட்டவும்.
  4. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

இதுவரை சென்ற இடங்கள் பதிவில் இருந்து ஓர் இடத்தை நீக்குதல்

  1. வலை உலாவியில் உங்கள் Google Maps காலப்பதிவைத் திறக்கவும்.
  2. நீக்க விரும்பும் ஆண்டு, மாதம், தேதி ஆகியவற்றைத் தேர்வுசெய்யவும்.
  3. நீக்க விரும்பும் இடத்திற்கு அடுத்துள்ள, மூன்று புள்ளி மெனு மேலும்அதன் பிறகு நாளில் இருந்து இடத்தை அகற்று என்பதைத் தட்டவும்.
  4. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

இதுவரை சென்ற இடங்களைத் தானாக நீக்குதல்

3, 18 அல்லது 36 மாதங்களுக்கும் மேலாக இருக்கும் இதுவரை சென்ற இடங்கள் பதிவைத் தானாக நீக்கும்படி நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. iPhone அல்லது iPadல் Google Maps ஆப்ஸை Maps திறக்கவும்.
  2. உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதலெழுத்து Account Circle அதன் பிறகு உங்கள் காலப்பதிவு Timeline என்பதைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவைத் தட்டி 더보기அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. "இருப்பிட அமைப்புகள்" என்பதற்குக் கீழே உள்ள, இதுவரை சென்ற இடங்களைத் தானாக நீக்கு என்பதைத் தட்டவும்.
  5. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

இதுவரை சென்ற இடங்கள் பதிவில் இருந்து சிலவற்றையோ அனைத்தையுமோ நீங்கள் நீக்கிய பிறகு என்ன நடக்கும்?

இதுவரை சென்ற இடங்களில் சிலவற்றையோ அனைத்தையுமோ நீக்கினால் Googleளில் உங்களுக்குக் கிடைக்கும் பிரத்தியேக அனுபவங்களில் சில முன்புபோல் இல்லாது போகலாம் அல்லது அவற்றை நீங்கள் இழக்க நேரிடலாம். உதாரணமாக:

  • நீங்கள் சென்ற இடங்களின் அடிப்படையிலான பரிந்துரைகள் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.
  • வீட்டிற்கோ பணியிடத்திற்கோ செல்வதற்கு ஏற்ற, போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கான சிறந்த நேரம் பற்றிய நிகழ்நேரத் தகவல் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.

கவனத்திற்கு: இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு போன்ற பிற அமைப்புகளை இயக்கியிருந்து, இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை இடைநிறுத்தியிருந்தாலோ அதிலுள்ள இருப்பிடத் தரவை நீக்கியிருந்தாலோ, பிற Google தளங்கள், ஆப்ஸ் மற்றும் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது நடைபெறும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக உங்கள் Google கணக்கில் இருப்பிடத் தரவு தொடர்ந்து சேமிக்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு அமைப்பு இயக்கத்தில் இருக்கும்போது Search, Maps ஆகியவற்றில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருப்பிடத் தரவு சேமிக்கப்படலாம். அத்துடன், கேமரா ஆப்ஸ் அமைப்புகளைப் பொறுத்து உங்கள் படங்களில் அவை சேர்க்கப்படலாம். நீங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் பொதுவான பகுதி, IP முகவரி ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல் இந்தச் செயல்பாட்டில் அடங்கலாம்.

உங்களிடம் முழுமையான கட்டுப்பாடு உள்ளது. உங்கள் தரவையும் நீங்கள் இங்கே செய்யும் தேர்வுகளையும் activity.google.com தளத்திலோ உங்கள் காலப்பதிவிலோ எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கலாம்.

இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை இயக்குதல்/முடக்குதல்

இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை உங்கள் கணக்கில் எப்போது வேண்டுமானாலும் முடக்கலாம். பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த அமைப்பிற்கான அணுகலை உங்களுக்கு வழங்குவது உங்கள் நிர்வாகியின் பொறுப்பு. அவர் அப்படி வழங்கினால், மற்ற பயனர்களைப் போலவே நீங்களும் இதுவரை சென்ற இடங்கள் அமைப்பைப் பயன்படுத்தலாம்.

  1. Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள, உங்கள் கணக்கின் படத்தைத் தட்டி அதன் பிறகு Google கணக்கை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம்.
  3. மேலே உள்ள, தரவு & தனியுரிமை என்பதைத் தட்டவும்.
  4. "செயல்பாட்டு அமைப்புகள்" என்பதற்கு ஸ்க்ரோல் செய்யவும்.
  5. இதுவரை சென்ற இடங்கள் என்பதைத் தட்டவும்.
  6. இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை இயக்கவும்/முடக்கவும். இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை முடக்கினால், உறுதிசெய்துவிட்டு இடைநிறுத்து அதன் பிறகு சரி என்பதைத் தட்டவும்.

நீங்கள் உலாவியைப் பயன்படுத்தினால் உங்கள் Google கணக்கில் இதுவரை சென்ற இடங்கள் பகுதிக்குச் செல்லவும். நீங்கள் உள்நுழைய வேண்டியிருக்கலாம். இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை இயக்கவும்/முடக்கவும்.

இதுவரை சென்ற இடங்கள் இயக்கப்பட்டிருக்கும்போது:

  • இதுவரை சென்ற இடங்கள் அமைப்பு இயக்கப்பட்டிருக்கும்போது, Google ஆப்ஸ் பயன்பாட்டில் இல்லை என்றாலும் உங்கள் துல்லியமான இருப்பிடம் இவற்றில் தொடர்ந்து சேமிக்கப்படும்:
    • உங்கள் சாதனங்கள்
    • Google சேவையகங்கள்
  • எந்தெந்தச் சாதனங்களில் இருப்பிட அறிக்கையிடல் அமைப்பு இயக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க, "Google - இதுவரை சென்ற இடங்கள்" என்பதற்குக் கீழ் ‘இந்தக் கணக்கு உள்ள சாதனங்கள்’ என்பதைத் தட்டவும்.
    • உங்கள் iPhone அல்லது iPadல் இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை இயக்க, உங்கள் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்வதற்கான அனுமதியை Google ஆப்ஸிற்கு வழங்கவும்: உங்கள் சாதனத்தின் அமைப்புகளைத் திறந்து Google and then இருப்பிடம் என்பதைத் தட்டவும். 'எப்போதும்' என்பதைத் தேர்வுசெய்யவும்.
  • நீங்கள் உள்நுழைந்துள்ள ஒவ்வொரு சாதனத்திலும் இருப்பிட அறிக்கையிடல் அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம். மேலும், எந்தெந்தச் சாதனங்களில் இருந்து பெறப்படும் இருப்பிடத் தரவு இதுவரை சென்ற இடங்கள் பதிவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் நீங்கள் தேர்வுசெய்யலாம். இதுவரை சென்ற இடங்கள் அமைப்புகளை நீங்கள் மாற்ற விரும்பினால் பின்வருபவற்றில் இருந்து தேர்வுசெய்யலாம்:
    • சில சாதனங்களின் மூலம் மட்டுமே உங்கள் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தலாம். பிற சாதனங்களின் மூலம் தெரியப்படுத்தாமல் இருக்கலாம்.
    • அனைத்து சாதனங்களின் மூலமும் உங்கள் இருப்பிடத்தைத் தெரியப்படுத்தலாம்.
    • உங்கள் Google கணக்கில் இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை முடக்கலாம். இதன் மூலம் எந்தச் சாதனத்தில் இருந்தும் உங்கள் இருப்பிடம் பகிரப்படாது. அத்துடன் உங்கள் கணக்கில் இதுவரை சென்ற இடங்கள் பதிவில் புதிதாக எதுவும் பதிவாகாது.
  • Google இருப்பிடச் சேவைகள், இருப்பிடப் பகிர்வு, Find My Device போன்ற, உங்கள் சாதனத்திலுள்ள பிற இருப்பிடச் சேவைகளின் அமைப்புகளில் மாற்றம் இருக்காது.

இதுவரை சென்ற இடங்கள் முடக்கப்பட்டிருக்கும்போது:

  • உங்கள் சாதனத்தின் துல்லியமான இருப்பிடங்கள் இதுவரை சென்ற இடங்கள் பதிவில் தொடர்ந்து சேமிக்கப்படாது.
  • இதுவரை சென்ற இடங்கள் பதிவில் இருந்து முந்தைய செயல்பாடு நீக்கப்படாது. இதுவரை சென்ற இடங்கள் பதிவை நீங்களே நேரடியாக நீக்கலாம்.
  • Google இருப்பிடச் சேவைகள், இருப்பிடப் பகிர்வு, Find My Device போன்ற, உங்கள் சாதனத்திலுள்ள பிற இருப்பிடச் சேவைகளின் அமைப்புகளில் மாற்றம் இருக்காது.
  • இதுவரை சென்ற இடங்கள் அமைப்பை நீங்கள் முடக்கிய பிறகும் Search, Maps போன்ற பிற சேவைகளைப் பயன்படுத்துவதன் காரணமாக இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு போன்ற பிற அமைப்புகளில் சில இருப்பிடத் தரவு தொடர்ந்து சேமிக்கப்படலாம். நீங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும் பொதுவான பகுதி, IP முகவரி ஆகியவற்றின் மூலம் பெறப்படும் உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டில் அடங்கலாம்.

இருப்பிடச் சேவைகளில் ஏற்படக்கூடிய பொதுவான சிக்கல்கள்

கிடைக்கும் நிலை

இந்தக் காரணங்களால் இதுவரை சென்ற இடங்கள் அமைப்பு கிடைக்காமல் இருக்கலாம்:

  • உங்கள் பிராந்தியத்தில் அது கிடைக்கவில்லை.
  • குறிப்பிட்ட சில வயதுக் கட்டுப்பாடுகளை நீங்கள் பூர்த்திசெய்யவில்லை.
  • பணி, பள்ளி, பிற குழு போன்றவற்றின் மூலம் பெற்ற Google கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள். இந்த அமைப்பிற்கான அணுகலை உங்களுக்கு நிர்வாகி வழங்க வேண்டியதிருக்கலாம்.
  • இருப்பிடச் சேவைகள் அல்லது பின்னணி ஆப்ஸ் ரெஃப்ரெஷ் அம்சத்தை முடக்கியுள்ளீர்கள்.
பின்னணி ஆப்ஸ் ரெஃப்ரெஷ்

இருப்பிடச் சேவைகள் எப்போதும் என அமைக்கப்பட்டிருந்து, பின்னணி ஆப்ஸ் ரெஃப்ரெஷ் அம்சம் இயக்கத்தில் இருந்தால் மட்டுமே இதுவரை சென்ற இடங்கள் நன்றாக வேலை செய்யும்.

  • உங்கள் இருப்பிடத்தைத் தீர்மானிக்க GPS, வைஃபை ஹாட்ஸ்பாட்கள், மொபைல் நெட்வொர்க் டவர்கள் ஆகியவற்றை இருப்பிடச் சேவைகள் பயன்படுத்தும்.
  • Google ஆப்ஸை நீங்கள் அரிதாகப் பயன்படுத்தும் சூழல்களில், இருப்பிட அறிக்கையிடல் அம்சம் வேலை செய்ய பின்னணி ஆப்ஸ் ரெஃப்ரெஷ் அம்சம் உதவுகிறது.

இருப்பிடச் சேவைகள், பின்னணி ஆப்ஸ் ரெஃப்ரெஷ் ஆகியவற்றை நிர்வகிப்பது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

டேட்டா பயன்பாடு

இதுவரை சென்ற இடங்கள் அம்சம் அதிக டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த அம்சத்தைப் பயன்படுத்தும் முன் உங்கள் சாதனத்தின் டேட்டா பிளான் அதற்கேற்ற வகையில் உள்ளதா எனப் பார்க்கவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14979917223685890673
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false