உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது

இந்தப் பக்கம் காட்டப்பட்டால் உங்கள் Google கணக்கு முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.

காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்

  1. Chrome போன்ற உலாவியில் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருந்தால் அதற்கான விளக்கத்தைப் பெறுவீர்கள்.

உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருக்கும்போது என்ன நடக்கும்?

  • Google சேவைகளில் உள்நுழைய முடியாது அல்லது Google மூலம் உள்நுழைதல் அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. உள்நுழைய முயலும்போது பிழைச் செய்தியைப் பெறுவீர்கள் அல்லது இந்தப் பக்கம் காட்டப்படும்.
  • சில நேரங்களில், உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது பற்றி Googleளிடம் இருந்து மின்னஞ்சல் அல்லது மெசேஜ் வரும்.

உங்கள் கணக்கை மீட்டெடுக்க எங்களிடம் கோரிக்கை விடுத்தல்

கணக்கு உங்களுடையதென்றால், அதை மீண்டும் அணுக கோரிக்கை சமர்ப்பிக்கலாம்.

  1. Chrome போன்ற உலாவியில் உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  2. மறுபரிசீலனை கோருக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உங்கள் மறுபரிசீலனைக் கோரிக்கை அங்கீகரிக்கப்படவில்லை எனில் உங்கள் Google கணக்கு முழுவதையும் அணுக முடியாமலே இருக்கும். நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் உங்கள் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டு, நீக்குவதற்குக் கருத்தில் கொள்ளப்படும்.

நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) வசித்தாலோ ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரஜையாக இருந்தாலோ மேலும் சில தீர்வு முறைகள் உங்களுக்குக் கிடைக்கலாம். மேலும் அறிக.

சில கொள்கை மீறல்கள் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்படும் அதிகபட்ச மறுபரிசீலனைக் கோரிக்கைகள்

சில கொள்கை மீறல்களுக்கு, அதிகபட்சமாக 2 மறுபரிசீலனைக் கோரிக்கைகளை Google மதிப்பாய்வு செய்யும். முதல் மறுபரிசீலனைக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் கூடுதல் தகவல்களுடன் இரண்டாவது மறுபரிசீலனைக் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கலாம். இது Google மதிப்பாய்வாளரால் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும். அதற்குப் பிறகான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.

உங்கள் மறுபரிசீலனைக் கோரிக்கைக்கு இது பொருந்தும் என்றால், நீங்கள் சமர்ப்பிப்பதற்கு முன்பு இந்த வகையான கொள்கை மீறலுக்கு Google மதிப்பாய்வு செய்யும் அதிகபட்ச மறுபரிசீலனைக் கோரிக்கைகளின் எண்ணிக்கை உங்களுக்குக் காட்டப்படும்.

முடக்கப்பட்ட கணக்கின் தரவைப் பதிவிறக்குதல்

உங்கள் கணக்கில் உள்நுழைய முடியவில்லையெனில் சில Google சேவைகளிலிருந்து கணக்குத் தரவை நீங்கள் பதிவிறக்கிச் சேமித்துக்கொள்ளலாம்.

உங்கள் தரவைப் பதிவிறக்க எப்போதும் போல உங்கள் கணக்கில் உள்நுழையவும். உங்கள் தரவைப் பதிவிறக்குவதற்கான விருப்பம் அதில் காட்டப்படலாம்.

குறிப்பிட்ட சில மீறல்கள் காரணமாக, தரவைப் பதிவிறக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படாமலேயே கணக்குகள் முடக்கப்படலாம். அந்த மீறல்களில் இவை அடங்கும் (ஆனால் இவை மட்டுமே அல்ல):

  • முறையான சட்டக் கோரிக்கைகள்
  • கணக்கு அபகரிப்பு
  • மோசமான உள்ளடக்க மீறல்கள் (சிறார் பாலியல் வன்கொடுமை, சிறார்களைத் தவறாகப் பயன்படுத்துதல், பயங்கரவாதம் தொடர்பான உள்ளடக்கம் போன்றவை)

கணக்குகள் முடக்கப்படுவதற்கான காரணம்

பொதுவாக, கணக்கின் உரிமையாளர் எங்கள் கொள்கைகளைப் பின்பற்றத் தவறினால் Google கணக்குகள் முடக்கப்படும். Googleளின் கொள்கைகளில் அடங்குபவை:

கணக்குகள் முடக்கப்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம் எல்லா Google சேவைகளும் இந்தக் காரணங்களுக்காக ஒரு கணக்கை முடக்கிவிடுவதில்லை.

கணக்கை ஹேக் செய்தல் அல்லது அபகரித்தல்

ஒருவரின் வெளிப்படையான அனுமதியில்லாமல் அவரின் கணக்கில் உள்நுழையவோ அதைப் பயன்படுத்தவோ கூடாது.

தானியங்கு அழைப்புகள் அல்லது மெசேஜ்கள்

தானியங்கு முறையில் ஃபோன் அழைப்புகளைச் செய்யவோ மெசேஜ்களை அனுப்பவோ (ரோபோடயலிங்) Google சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது.

ரோபோகால்கள் என்பவை முன்பே ரெக்கார்டு செய்யப்பட்ட மெசேஜ்களை அனுப்புவதற்கு கம்ப்யூட்டரால் இயக்கப்படும் ஆட்டோடயலரைப் பயன்படுத்தும் ஃபோன் அழைப்புகளாகும்.

தயாரிப்புக் கொள்கைகளை மீறுதல்

சில Google சேவைகள் பின்வருபவை உட்பட அவற்றுக்குரிய நடத்தைக் கோட்பாடுகளையும் சேவை விதிமுறைகளையும் கொண்டுள்ளன:

யாரேனும் இந்தக் கொள்கைகளைப் பின்பற்றவில்லை என்றால் இவற்றில் ஒன்றைச் செய்வதிலிருந்து அவரை நாங்கள் தடுக்கக்கூடும்:

  • அந்தச் சேவையைப் பயன்படுத்துதல்
  • Google சேவைகள் எதிலும் உள்நுழைதல்
சிறார் பாலியல் வன்கொடுமை & அவர்களைத் தவறாகப் பயன்படுத்துதல்

சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்தவோ கொடுமைப்படுத்தவோ Google சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது.

இதுபோன்ற உள்ளடக்கங்கள் மீது நடவடிக்கை எடுப்போம்:

  • சிறார் பாலியல் கொடுமை சார்ந்த உள்ளடக்கம் (கார்ட்டூன்கள் உட்பட).
  • சிறுவர்களைத் தவறான எண்ணத்துடன் அணுகுதல். உதாரணமாக, ஆன்லைன்/ஆஃப்லைனில் சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் தொடர்புகொள்வதற்காக அவர்களுடன் ஆன்லைனில் நட்பாகப் பழகுதல் மற்றும்/அல்லது பாலியல் ரீதியான படங்களைப் பரிமாறிக்கொள்ளுதல்.
  • பாலியல் ரீதியான மிரட்டல். உதாரணமாக, சிறுவர்களின் அந்தரங்கப் படங்களைக் காட்டியோ அவற்றை வைத்திருப்பதாகக் கூறியோ அவர்களை அச்சுறுத்துதல் அல்லது பணம் கேட்டு மிரட்டுதல்.
  • வயது வராதோரைப் பாலியல் ரீதியாகக் காட்சிப்படுத்துதல். உதாரணமாக, சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்துவதைக் காட்டும், ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் படங்களை உருவாக்குதல் அல்லது சிறுவர்களைப் பாலியல் செயல்களில் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில் சித்தரித்தல்.
  • சிறுவர்களைக் கடத்துதல். உதாரணமாக, வர்த்தக நோக்கத்துடன் பாலியல் ரீதியாகப் பயன்படுத்த சிறுவர்களை விளம்பரப்படுத்துதல் அல்லது தவறான செயல்களுக்காகத் தூண்டுதல்.

Google சேவைகளில் உருவாக்கப்படும், பகிரப்படும், அனுப்பப்படும் அல்லது பதிவேற்றப்படும் அனைத்தும் இந்த உள்ளடக்கத்தில் அடங்கும்.

சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் உள்ளடக்கத்தை நாங்கள் கண்டறிந்தால் தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம். காணாமல் போன மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படும் குழந்தைகளுக்கான தேசிய அமைப்பு (National Center for Missing and Exploited Children) மற்றும் சட்ட அமலாக்கத் துறையிடம் சிறுவர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பற்றிப் புகாரளிப்பது, சம்பந்தப்பட்ட கணக்குகளை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கக்கூடும்.

எங்களின் சில தகவல்தொடர்புச் சேவைகளைப் பற்றிய தகவல்கள்:

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள், எங்களின் சில தகவல்தொடர்புச் சேவைகள் ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை 2021/1232ன் கீழ், ஆன்லைன் சிறார் பாலியல் வன்கொடுமையைக் கண்டறிகின்றன. 2002/58/EC வழிகாட்டுதலின்படி, ஆன்லைன் சிறார் பாலியல் வன்கொடுமையை எதிர்த்துப் போராடும் நோக்கத்திற்காக, தகவல்தொடர்புகளின் இரகசியம் காப்பதிலிருந்து இந்த ஒழுங்குமுறை விலக்களிக்கிறது. உங்கள் கணக்கு தவறுதலாக முடக்கப்பட்டதாகக் கருதினால், ஒழுங்குமுறை 2021/1232ன் கீழ் மறுபரிசீலனைக்குக் கோரிக்கை சமர்ப்பிப்பதுடன் உங்கள் நாட்டின் தரவுப் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் புகாரையும் தாக்கல் செய்யலாம். அத்துடன் உரிய நீதிமன்றத்தில் சட்டரீதியான தீர்வைப் பெறவும் உங்களுக்கு உரிமை உள்ளது.

பிறரை ஏமாற்ற போலி அடையாளத்தை உருவாக்குதல்

பிறரை ஏமாற்றி, வேண்டியதைச் செய்ய வைப்பதற்கு (சமூகப் பொறியியல்) போலி அடையாளத்தை உருவாக்க Google சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது. ஒருவர் தனக்குத் தொடர்பில்லாத நிறுவனத்திலோ அரசாங்க நிறுவனத்திலோ பணிபுரிவதாகக் காட்டும் Gmail முகவரியை உருவாக்குவது விதிமீறலாகும்.

எனினும், பிரபலத்தின் பெயரில் ரசிகர் மின்னஞ்சல் கணக்கை உருவாக்கிக்கொள்ளலாம்.

ஏற்றுமதி அல்லது பொருளாதாரத் தடைச் சட்ட மீறல்கள்

பொருந்தக்கூடிய ஏற்றுமதி அல்லது பொருளாதாரத் தடைச் சட்டங்களை மீறவோ அதற்குக் காரணமாக அமையும் வகையிலோ Google சேவைகள் அல்லது உங்கள் கணக்கைப் பயன்படுத்தக்கூடாது.

நீங்களோ உங்கள் நிறுவனமோ தடை செய்யப்பட்டிருந்தால் அல்லது தடை விதிக்கப்பட்ட நபருக்காகவோ நிறுவனத்திற்காகவோ நீங்கள் செயல்பட்டால் உங்கள் கணக்கும் அதனுடன் தொடர்புடைய கணக்குகள் அனைத்தும் முடக்கப்படக்கூடும்.

உபத்திரவம் அளித்தல், மிரட்டுதல் & அச்சுறுத்துதல்
பிறருக்கு உபத்திரவம் அளிக்கவோ, பிறரை மிரட்டவோ அச்சுறுத்தவோ கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடவோ அவ்வாறு செய்யுமாறு பிறரைத் தூண்டவோ Google சேவைகளைப் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
ஆன்லைனில் பிறருக்கு உபத்திரவம் அளிப்பது பல இடங்களில் சட்ட விரோதமானது என்பதையும் இதனால் நிஜ வாழ்வில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
தீங்கிழைக்கும் வகையிலான அச்சுறுத்தல்களையோ பிற அபாயகரமான சூழ்நிலைகளையோ நாங்கள் கண்டறிந்தால், தொடர்புடைய அதிகாரிகளிடம் உங்களைப் பற்றிப் புகாரளித்தல் உள்ளிட்ட தகுந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க நேரிடலாம்.
அதிக எண்ணிக்கையிலான அழைப்புகள்

நிதி ஆதாயத்திற்காக (டிராஃபிக்கை அதிகப்படுத்துதல்) தொலைபேசி மையத்திற்கு அதிக எண்ணிக்கையிலான அழைப்புகளை மேற்கொள்ள Google சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது.

ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் அடையாளத்தைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்தல்
ஒரு நபர் அல்லது நிறுவனத்தைப் போல ஆள்மாறாட்டம் செய்யவோ உங்களை நீங்களே தவறாகப் பிரதிநிதித்துவம் செய்யவோ கூடாது.

உங்கள் கணக்கு உருவாக்கப்பட்ட நாட்டைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்யவோ மறைக்கவோ கூடாது. உங்கள் நாட்டைச் சேராத பயனர்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் அவர்கள் நாட்டின் அரசியல், சமூகப் பிரச்சனைகள் அல்லது பொதுமக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் விஷயங்களுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தை உருவாக்கவோ விநியோகிக்கவோ கூடாது.

பகடி, நையாண்டி, அடையாளத்தைத் திரித்துக் கூறுகின்ற பெயர்கள் அல்லது புனைப்பெயர்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறோம். உங்களுடைய உண்மையான அடையாளத்தைப் பற்றி வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய உள்ளடக்கத்தைத் தவிர்க்கவும்.
மால்வேர், ஃபிஷிங் & பிற தீங்கிழைக்கும் செயல்பாடுகள்

இவற்றுக்கு Google சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது:

  • மால்வேர்: தீங்கிழைக்கும்/தேவையில்லாத குறியீடு அல்லது மென்பொருளை (எ.கா. வைரஸ்கள்) அனுப்புதல்.
  • ஃபிஷிங்: தனிப்பட்ட தகவல்களைத் திருடுதல் அல்லது பிறரை ஏமாற்றி அவற்றைப் பகிரச் செய்தல்.
  • Google நெட்வொர்க்குகள், சேவையகங்கள், பிற அமைப்புகள் போன்றவற்றுக்குத் தீங்கு விளைவித்தல் அல்லது அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (எ.கா. சைபர் தாக்குதல்கள்).
ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்படும் பாலியல் ரீதியான உள்ளடக்கம் மற்றும் பாலியல் ரீதியான மிரட்டல்

ஒருவரின் பாலியல் உறவைச் சித்தரிக்கும் வெளிப்படையான, அந்தரங்கமான அல்லது சங்கடம் ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிடுவதாகவோ பரப்புவதாகவோ அச்சுறுத்தக்கூடாது.

ஒருவரின் பாலியல் உறவைச் சித்தரிக்கும் வெளிப்படையான, அந்தரங்கமான அல்லது சங்கடம் ஏற்படுத்தக்கூடிய பாலியல்ரீதியான உள்ளடக்கத்தைப் பரப்புவதாக அச்சுறுத்தி அவரிடமிருந்து நிதி ஆதாயம் அல்லது பிற பாலியல் உள்ளடக்கத்தைப் பெறுவதற்காக அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி அல்லது தொடர்ந்து நெருக்கடி கொடுத்து மிரட்டவோ ஊக்குவிக்கவோ கட்டாயப்படுத்தவோ கூடாது.

ஆன்லைனில் பிறருக்கு உபத்திரவம் அளிப்பது பல இடங்களில் சட்ட விரோதமானது. மேலும் இதனால் நிஜ வாழ்வில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்
பின்வருபவை உட்பட வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தைப் பகிரக்கூடாது:
  • நிர்வாணம்
  • தெளிவாகக் காட்சிப்படுத்தப்படும் பாலியல் செயல்கள்
  • ஆபாசமான உள்ளடக்கம்
  • வணிகரீதியான ஆபாசத் தளங்களுக்கு பயனர்களை அழைத்துச் செல்லுதல்
கல்வி, ஆவணப்படம், அறிவியல், கலை போன்ற நோக்கங்களுக்கான உள்ளடக்கத்தை அனுமதிப்போம்.
ஸ்பேமிங்

ஸ்பேம் எனப்படும் தேவையில்லாத உள்ளடக்கத்தை அனுப்புவதற்கு Google சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது.

ஸ்பேம் என்பது Google சேவைகளில் உருவாக்கப்பட்ட அல்லது பகிரப்பட்ட மின்னஞ்சல்கள், கருத்துகள், படங்கள், மதிப்பாய்வுகள் அல்லது ஏதேனும் பிற உள்ளடக்கமாக இருக்கலாம்.

சில பொதுவான விதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

  • அனுமதி வழங்கப்படாத விளம்பரத்தையோ தொழில்ரீதியான உள்ளடக்கத்தையோ அனுப்புவதைத் தவிருங்கள்.
  • உங்களுக்குத் தெரியாதவர்களுக்கோ ஒரே நேரத்தில் பலருக்கோ உள்ளடக்கத்தை அனுப்பாதீர்கள்.
பயங்கரவாதம் தொடர்பான உள்ளடக்கம்

பின்வருபவற்றுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பகிர Google சேவைகளைப் பயன்படுத்தக்கூடாது:

  • தீவிரவாத அமைப்புகளுக்காக ஆட்களைச் சேர்த்தல்
  • வன்முறையைத் தூண்டுதல்
  • தீவிரவாதத் தாக்குதல்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுதல்
  • தீவிரவாதச் செயல்களை ஊக்குவித்தல்
தகுதிபெறாத கல்வி நிறுவனம்
  • Google Workspace for Education கணக்கை உருவாக்கும்போது நீங்கள் ஒரு கல்வி நிறுவனம் என்பதாக ஆள்மாறாட்டம் செய்யக்கூடாது.
  • Google Workspace for Education கணக்கை உருவாக்கும்போது உங்கள் தகுதிகளைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடாது. தகுதிகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
தவறான பயன்பாட்டிற்காகப் பல்வேறு கணக்குகளைப் பயன்படுத்துதல்
  • Googleளின் கொள்கைகளை மீறுவதற்காகப் பல்வேறு கணக்குகளை உருவாக்கவோ பயன்படுத்தவோ கூடாது.
  • போலிக் கணக்குகளை உருவாக்க நிரல்களை (பாட்கள் என்றழைக்கப்படும்) பயன்படுத்தக்கூடாது.

தவறான பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும் கணக்குகளை Google தானாகவே கண்டறிந்து முடக்கும்.

தனிப்பட்ட கணக்கு, பணிக் கணக்கு என்று பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்குகளை வைத்துள்ளனர். அதுபோன்றவை அனுமதிக்கப்படுகின்றன.

முறையான சட்டக் கோரிக்கைகள்
பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சில நேரங்களில் நாங்கள் நடவடிக்கைகள் எடுப்போம். சட்டக் கோரிக்கைகளை இங்கே சமர்ப்பிக்கவும்.

முடக்கப்பட்ட கணக்குகள் தொடர்பான எங்கள் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

முடக்கப்பட்ட கணக்குகள் தொடர்பான எங்கள் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்ளுதல்.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13697177916812485450
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false