'நண்பர்களிடமிருந்து பரிந்துரைப்புகள்' எப்படிச் செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ளுதல்

சில சமயம் Google தனது தயாரிப்புகளிலும் சேவைகளிலும் உங்கள் கருத்துகள், பரிந்துரைகள், தொடர்புடைய பிற செயல்பாடுகள் ஆகியவற்றைக் காட்டும். இவை Google Play, விளம்பரங்கள் போன்ற ஷாப்பிங் செய்யும் இடங்களாகவும் இருக்கலாம். உங்கள் Google கணக்கின் சுயவிவரப் பெயரும் படமும் அந்தச் செயல்பாட்டுடன் காட்டப்படக்கூடும்.

உதாரணமாக, "இத்தாலிய உணவகங்கள்" எனத் தேடினால் பயனர் ஒருவர் அளித்துள்ள நேர்மறையான கருத்துடன் அருகிலுள்ள உணவகத்திற்கான விளம்பரம் காட்டப்படக்கூடும். அல்லது Google Playயில் புதிய பாடல் அல்லது ஆல்பம் குறித்து வேறொருவர் வழங்கிய கருத்து காட்டப்படக்கூடும்.

விளம்பரங்களில் நண்பர்களிடமிருந்து பரிந்துரைப்புகள் அமைப்பை இயக்குதல் அல்லது முடக்குதல்

  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் ஆப்ஸைத் திறந்து Google அதன் பிறகு Google கணக்கை நிர்வகித்தல் என்பதைத் தட்டவும்.
  2. மேலே உள்ள நபர்களும் பகிர்தலும் என்பதைத் தட்டவும்.
  3. "விளம்பரங்களில் பரிந்துரைகளைப் பகிர்" என்பதற்குக் கீழே உள்ள நண்பர்களிடமிருந்து பரிந்துரைப்புகளை நிர்வகியுங்கள் என்பதைத் தட்டவும்.
  4. கீழே உள்ள "எனது செயல்பாட்டின் அடிப்படையில், எனது சுயவிவரப் பெயர், சுயவிவரப் படம், செயல்பாடு ஆகியவற்றை விளம்பரங்களில் ‘நண்பர்களிடமிருந்து பரிந்துரைப்புகளில்’ Google காட்டலாம்" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.

முக்கியம்: 18 வயதிற்குட்பட்ட பயனர்களுக்கு, விளம்பரங்களில் ‘நண்பர்களிடமிருந்து பரிந்துரைப்புகள்’ மற்றும் வேறு சில சூழல்களில் செயல்கள் காட்டப்படாது. உங்கள் நாட்டில்/பிராந்தியத்தில் பொருந்தக்கூடிய வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான கண்காணிக்கப்படும் Google கணக்குகளில் ‘நண்பர்களிடமிருந்து பரிந்துரைப்புகள்’ அமைப்பு கிடைக்காது.

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4979199015056836156
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false