தொலைந்த Android சாதனத்தைக் கண்டறிவதற்குத் தயாராகுதல்

உங்கள் சாதனத்தில் Find My Deviceஸை அமைப்பதன் மூலம் உங்கள் மொபைல், டேப்லெட், Wear OS வாட்ச், ஹெட்ஃபோன்கள், டிராக்கர் டேக் இணைக்கப்பட்டுள்ள சாதனம் போன்றவை தொலைந்துவிட்டால் அவற்றைக் கண்டறிய முடியும்.

உங்கள் சாதனம் ஏற்கெனவே தொலைந்திருந்தால் அதை எப்படிக் கண்டறிவது, பாதுகாப்பது அல்லது அதிலுள்ள தரவை அழிப்பது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

முக்கியமானது: இந்தப் படிகளில் சில, Android 9 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே செயல்படும். உங்கள் Android பதிப்பைத் தெரிந்துகொள்வது எப்படி என அறிக.

உங்கள் சாதனத்தைக் கண்டறியலாம் என்பதை உறுதிசெய்துகொள்ளுதல்

படி 1: Google கணக்கில் உள்நுழைந்துள்ளீர்களா என்பதைச் சரிபார்த்தல்
  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் அதன் பிறகு Google என்பதைத் திறக்கவும்.
    • உங்கள் கணக்கின் பெயரும் மின்னஞ்சல் முகவரியும் இங்கு காட்டப்படும்.
  2. உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்கவும். 
உதவிக்குறிப்பு: பகிரப்பட்ட டேப்லெட் உங்களிடம் இருந்தால் அதன் உரிமையாளரால் மட்டுமே இந்த அமைப்புகளை மாற்ற முடியும்.
படி 2: இருப்பிடம் இயக்கத்தில் உள்ளதா என்பதைச் சரிபாருங்கள்
முக்கியம்: குறிப்பிட்ட அமைப்புகளுடன் இருப்பிடத்தை இயக்கும்போது, உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தை பிற ஆப்ஸுக்கும் சேவைகளுக்கும் கிடைக்கச் செய்யலாம். 
  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் என்பதைத் திறக்கவும்.
  2. இருப்பிடம் என்பதைத் தட்டவும்.
  3. இருப்பிடம் என்பதை இயக்கவும்.
படி 3: Find My Device இயக்கப்பட்டுள்ளதா எனச் சரிபார்த்தல்
  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் என்பதைத் திறக்கவும்.
  2. Google அதன் பிறகு அனைத்துச் சேவைகள் (பிரிவுகள் இருந்தால்) அதன் பிறகு Find My Device என்பதைத் தட்டவும்.
  3. “Find My Deviceஸைப் பயன்படுத்து” எனும் விருப்பம் இயக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.

உதவிக்குறிப்பு: Android 5.0 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில் "Google அமைப்புகள்" ஆப்ஸுக்குக் கீழே "Find My Device" அமைப்புகளைக் கண்டறியலாம்

படி 4: ஆஃப்லைன் சாதனங்களையும் பவர் இல்லாத சாதனங்களையும் கண்டறிதல்
  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் என்பதைத் திறக்கவும்.
  2. Google அதன் பிறகு அனைத்துச் சேவைகள் (பிரிவுகள் இருந்தால்) அதன் பிறகு Find My Device என்பதைத் தட்டவும்.
  3. ஆஃப்லைனில் உள்ள உங்கள் சாதனங்களைக் கண்டறிதல் என்பதைத் தட்டவும்.

ஆஃப்லைன் சாதனங்களின் அமைப்புகளைக் கண்டறிதல்

இயல்பாகவே, உங்கள் சாதனம் "அதிக டிராஃபிக் உள்ள பகுதிகளில் மட்டும் நெட்வொர்க்கைப் பயன்படுத்துதல்" எனும் அமைப்பில் இருப்பதால் இது என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்களை Googleளில் சேமிப்பதோடு Android சாதனங்களின் திரளாக்கப்பட்ட நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக உங்களுடைய மற்றும் பிறருடைய ஆஃப்லைன் சாதனங்களைக் கண்டறியவும் உதவும். இந்த அமைப்பை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்:

  • முடக்கப்பட்டுள்ளது: உங்கள் சாதனத்தின் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்கள் சேமிக்கப்படாது. மேலும் உங்கள் Android சாதனம் நெட்வொர்க்கில் சேர்க்கப்படாது. ஆஃப்லைன் கண்டறிதலை முடக்கினால் என்ன ஆகும்?
  • நெட்வொர்க் இல்லாமல்: உங்கள் சாதனம் நெட்வொர்க்கில் சேர்க்கப்படாது. ஆஃப்லைனில் உள்ள உங்கள் சாதனங்கள் ஆன்லைனில் இருந்தபோது சேமித்து என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்களைப் பயன்படுத்தி அவற்றின் இருப்பிடங்களை நீங்கள் தொடர்ந்து கண்டறிய முடியும். நெட்வொர்க் இல்லாமல் ஆஃப்லைன் மூலம் கண்டறிதல்.
  • அதிக டிராஃபிக் உள்ள பகுதிகளில் மட்டும் நெட்வொர்க்கைப் பயன்படுத்துதல் (இயல்பு): ஆஃப்லைன் சாதனங்களின் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்கள் மூலமாகவோ விமான நிலையங்கள், கூட்டம் நிறைந்த நடைபாதைகள் போன்ற பகுதிகளில் கிடைக்கும் நெட்வொர்க் மூலமாகவோ உங்கள் ஆஃப்லைன் சாதனங்களைக் கண்டறியலாம். அதிக டிராஃபிக் உள்ள பகுதிகளில் ஆஃப்லைன் மூலம் கண்டறிதல்.
  • நெட்வொர்க் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும்: சேமிக்கப்பட்ட மற்றும் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட சமீபத்திய இருப்பிடங்கள் மூலமாகவோ அதிக டிராஃபிக் அல்லது குறைந்த டிராஃபிக் உள்ள பகுதிகளில் கிடைக்கும் நெட்வொர்க் மூலமாகவோ உங்கள் ஆஃப்லைன் சாதனங்களைக் கண்டறியலாம். அனைத்துப் பகுதிகளிலும் ஆஃப்லைன் மூலம் கண்டறிதல்.

பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் அல்லது சாதனம் முடக்கப்பட்டால்

ஆதரிக்கப்படும் சாதனங்களில் (Pixel 8 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்கள் போன்றவை), சாதனத்தின் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துவிட்டாலும் சாதனம் முடக்கப்பட்டாலும் Find My Device நெட்வொர்க்கால் உங்கள் மொபைலைக் கண்டறிய முடியும் (முடக்கப்பட்டு பல மணிநேரம் ஆனாலும்கூட).

  • அதிக டிராஃபிக் உள்ள பகுதிகளில் மட்டும் நெட்வொர்க்கைப் பயன்படுத்துதல் அல்லது நெட்வொர்க் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்துதல் என்ற விருப்பத்தை அமைக்கவும்.
  • மொபைல் முடக்கப்படும்போது புளூடூத்தும் இருப்பிடமும் இயக்கத்தில் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

உதவிக்குறிப்பு: நெட்வொர்க்கில் உள்ள சாதனங்கள் அருகிலுள்ள சாதனங்களை ஸ்கேன் செய்ய புளூடூத்தைப் பயன்படுத்தும். அவை உங்கள் சாதனங்களைக் கண்டறிந்தால், கண்டறியப்பட்ட இருப்பிடங்களை Find My Deviceஸுக்குப் பாதுகாப்பாக அனுப்பும். ஆஃப்லைனில் உள்ள தங்கள் சாதனங்களைக் கண்டறிய பிறருக்கு உதவுவதற்கு, உங்கள் Android சாதனங்கள் அவற்றை அருகில் கண்டறியும்போது இதே வழிமுறையையே பின்பற்றும். Find My Device உங்கள் தரவைக் கையாளும் விதம்.

Android 8.0 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளைக் கொண்ட சாதனங்களுக்கான வழிமுறைகள்

Android 8.0 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளைக் கொண்ட சாதனங்களுக்கு,
  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் என்பதைத் திறக்கவும்.
  2. Google அதன் பிறகு அனைத்துச் சேவைகள் (பிரிவுகள் இருந்தால்) அதன் பிறகு Find My Device என்பதைத் தட்டவும்.
  3. சமீபத்திய இருப்பிடத்தைச் சேமி என்பதை இயக்கவும்.
    • “சமீபத்திய இருப்பிடத்தைச் சேமித்தல்” இயக்கத்தில் இருந்தால், என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட உங்களின் சமீபத்திய இருப்பிடங்களை உங்கள் கணக்கு சேமிக்கும். இதன்மூலம் ஆஃப்லைனில் உள்ள சாதனங்களையும் துணைக்கருவிகளையும் நீங்கள் கண்டறியலாம்.
படி 5: Google Playயில் உங்கள் சாதனம் பட்டியலிடப்பட்டுள்ளதா எனப் பார்த்தல்

முக்கியம்: நீங்கள் Google Playயில் சாதனத்தை மறைத்தால் அது Find My Deviceஸில் காட்டப்படாது.

  1. https://play.google.com/library/devices பக்கத்தைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில், "மெனுக்களில் காட்டு" எனும் பெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும்.

உதவிக்குறிப்பு: சமீபத்தில், சாதனத்திலிருந்து உங்கள் கணக்கை அகற்றியிருந்தாலோ சாதனத்தைத் தொலைத்திருந்தாலோ குறிப்பிட்ட நேரம் வரை அதை நீங்கள் Find My Deviceஸில் கண்டறிய முடியும். Google Playயில் சாதனங்களை மறைப்பதற்கான வழிமுறைகள்

படி 6: உங்கள் சாதனத்தைக் கண்டறிய முடிகிறதா எனப் பார்த்தல்
  1. android.com/find பக்கத்தைத் திறக்கவும்.
  2. உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.
  3. ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனம் இருந்தால் திரையின் மேல் பகுதியில் உங்கள் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உதவிக்குறிப்புகள்:
  • உங்கள் சாதனம் ஆஃப்லைனில் இருந்து, 'ஆஃப்லைனில் உள்ள உங்கள் சாதனங்களைக் கண்டறிதல்' அமைப்பு இயக்கத்தில் இருப்பதை நீங்கள் தெரிந்துகொண்டால் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு சேமிக்கப்பட்ட இருப்பிடத்தின் அடிப்படையில் உங்கள் சாதனம் கடைசியாக ஆன்லைனில் இருந்த இடத்தை Find My Device காட்டும்.
  • சிறந்த முடிவுகளுக்கு, நெட்வொர்க்கைப் பயன்படுத்தி Find My Device மொபைல் ஆப்ஸ் மூலம் சாதனங்களைக் கண்டறியுங்கள். Find My Deviceஸை இணையத்தில் பயன்படுத்த விரும்பினால் இயல்பாகவே சாதனத்தின் ஆன்லைன் இருப்பிடம் அல்லது என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு சேமிக்கப்பட்ட இருப்பிடத்தின் அடிப்படையில் அதை நீங்கள் கண்டறிய முடியும். இணையத்தில் Find My Device நெட்வொர்க்கைப் பயன்படுத்தி சாதனங்களைக் கண்டறிய, நெட்வொர்க் இருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் என்பதை உங்கள் ஆஃப்லைன் சாதன அமைப்பாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
படி 7: Find My Device ஆப்ஸை நிறுவுதல்
  1. உங்கள் சாதனங்களை நிர்வகிப்பதற்கும் கண்டறிவதற்கும் Find My Device ஆப்ஸை நிறுவவும்.
  2. உள்நுழை என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் டேப்லெட்டை நீங்கள் வைத்திருந்தால் இந்த அமைப்புகளை டேப்லெட்டின் உரிமையாளர் மட்டுமே மாற்ற முடியும்.

படி 8: இருபடிச் சரிபார்ப்புக்கான மாற்றுக் குறியீட்டை உருவாக்குதல்

முக்கியம்: https://android.com/find பக்கத்தில் உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைக் கண்டறியலாம். உங்கள் மின்னஞ்சலையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி Google Find My Device ஆப்ஸையும் கெஸ்ட் பயன்முறையில் பயன்படுத்தலாம்.

உங்கள் முதன்மை Android சாதனம் தொலைந்திருந்து அதைத் தொலைவிலிருந்தே பூட்டவோ அதிலுள்ள தரவை அழிக்கவோ விரும்பினால், நீங்கள் இருபடிச் சரிபார்ப்பை இயக்க வேண்டும். உங்கள் முதன்மை Android சாதனம் சரிபார்ப்புக் குறியீடு போன்றவற்றை இருபடிச் சரிபார்ப்புக்கான முறையாகக் கொண்டிருக்கலாம் என்பதால் மாற்றுக் குறியீடு உருவாக்கப்பட்டிருக்க வேண்டியது முக்கியம். உங்களிடம் மாற்றுக் குறியீடுகளோ பாதுகாப்பு விசைக் கருவியோ இல்லையெனில் புதிய சிம்மை ஆர்டர் செய்வதற்கு மொபைல் சேவை வழங்குநரை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டியிருக்கலாம்.

  1. உங்கள் Google கணக்கிற்குச் செல்லவும்.
  2. பாதுகாப்பு என்பதைத் தட்டவும்.
  3. "Googleளில் எப்படி உள்நுழைகிறீர்கள்" என்பதன் கீழுள்ள இருபடிச் சரிபார்ப்பு என்பதைத் தட்டவும்.
  4. மாற்றுக் குறியீடுகள் என்பதைத் தட்டவும்.

மாற்றுக் குறியீடுகள் குறித்து மேலும் அறிக.

உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டாலோ சாதனத்தைத் தொலைத்துவிட்டாலோ வேறு காரணத்திற்காக உள்நுழைய முடியவில்லை என்றாலோ உங்கள் கணக்கில் மீண்டும் உள்நுழைய காப்புப் பிரதிகள் உதவும். இருபடிச் சரிபார்ப்பையும் காப்புப் பிரதிகளையும் குறித்து மேலும் அறிக.

பாதுகாப்பு விசைக் கருவி என்பது உங்கள் கணக்கைப் பாதுகாக்கும் மிக வலிமையான முறைகளில் ஒன்றாகும். உங்கள் பாதுகாப்பு விசைக் கருவியைப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கவும். உங்கள் முதன்மை Android சாதனம் தொலைந்தாலோ திருடப்பட்டாலோ பாதுகாப்பு விசைக் கருவியைப் பயன்படுத்தி https://android.com/find பக்கத்தில் உள்நுழையவும். பாதுகாப்பு விசைக்கான விருப்பங்கள் குறித்து மேலும் அறிக.

ஹெட்ஃபோன்கள் அல்லது பிற துணைக்கருவிகளைச் சேர்த்தல்

புதிய துணைக்கருவியைச் சேர்த்தல்
துரித இணைப்பு அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் துணைக்கருவியைச் சாதனத்துடன் இணையுங்கள். துரித இணைப்பைப் பயன்படுத்துவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
  1. உங்கள் சாதனத்தில், Find My Deviceஸில் உங்கள் ஹெட்ஃபோன்களைச் சேர்க்கும்படி கேட்கும் ஓர் அறிவிப்பைப் பெறுவீர்கள். இணைக்கப்பட்டதும், புளூடூத் டிராக்கர் டேகுகள் Find My Deviceஸில் தானாகச் சேர்க்கப்படும்.
    • துணைக்கருவியைச் சேர்க்க: சேர் என்பதைத் தட்டவும்.
    • துணைக்கருவியைச் சேர்க்க விரும்பவில்லை என்றால்: வேண்டாம் என்பதைத் தட்டவும்.
  2. அறிவிப்பைப் பார்க்கவில்லை எனில், கீழுள்ள படிகளைப் பின்பற்றி ஏற்கெனவே இணைக்கப்பட்ட துணைக்கருவியைச் சேர்க்கவும்.
  3. உங்கள் சாதனத்தைக் கண்டறியவும்.

டிராக்கர் டேகுகள்

சாவிகள், லக்கேஜ், பைக்குகள் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் தொலைந்துபோனால் அவற்றைக் கண்டறிவதற்கும் டிராக்கர் டேகுகளை நீங்கள் பயன்படுத்தலாம். செல்லப்பிராணிகளைக் கண்காணிப்பதற்கோ தொலைந்துபோனவற்றைக் கண்டறிவதற்கோ டிராக்கர் டேகுகளை நீங்கள் பயன்படுத்த முடியாது. டிராக்கர் டேகுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட பயனர்கள்.

ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ள ஹெட்ஃபோன்களைச் சேர்த்தல்
  1. உங்கள் சாதனத்தில் அமைப்புகள் என்பதைத் திறக்கவும்.
  2. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் என்பதைத் தட்டவும்.
  3. சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. இணைப்பில் இல்லாதபோது கண்டறிதல் அதன் பிறகு சேர் என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: துணைக்கருவிகளை எப்போது வேண்டுமானாலும் Find My Deviceஸில் இருந்து அகற்றலாம். Find My Deviceஸில் இருந்து துணைக்கருவிகளை அகற்றுதல்.

தொடர்புடைய தகவல்கள்

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6588255155724094527
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false