Chrome போன்ற உலாவியைப் பயன்படுத்தும்போது, அந்த உலாவி இணையதளங்களில் இருந்து சில தகவல்களைத் தனது தற்காலிகச் சேமிப்பிலும் குக்கீகளிலும் சேமிக்கிறது. இவற்றை அழிப்பதன் மூலம் தளங்களில் உள்ள ஏற்றுதல் அல்லது வடிவமைப்புச் சிக்கல்கள் போன்றவற்றைச் சரிசெய்யலாம்.
தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழிப்பதற்கு முன்பு
உங்கள் தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் நீங்கள் அழிக்கும்போது உங்கள் Google கணக்கில் இருந்து உலாவி உங்களை வெளியேற்றிவிடும். நீங்கள் மீண்டும் உள்நுழைய முடிவதை உறுதிசெய்ய மீட்பு மொபைல் எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்கவும்.
Chrome ஆப்ஸில்
- iPhone அல்லது iPadல் Chrome உலாவியை திறக்கவும்.
- மூன்று புள்ளி மெனுவை தட்டி உலாவிய தரவை அழி என்பதைத் தட்டவும்.
- அகற்ற விரும்பும் தகவல் வகைகளைத் தேர்வுசெய்யவும்.
- உலாவிய தரவை அழி என்பதைத் தட்டவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள முடிந்தது என்பதைத் தட்டவும்.
Chromeமில் கூடுதல் குக்கீ அமைப்புகளை எப்படி மாற்றுவது எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
பிற உலாவி ஆப்ஸில்
Safari, Firefox அல்லது வேறொரு உலாவியை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில் வழிமுறைகளுக்கு அதன் உதவித் தளத்தைப் பார்க்கவும்.
இந்தத் தகவலை அழித்ததும் நடப்பவை
தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழித்த பிறகு:
- தளங்களில் சில அமைப்புகள் நீக்கப்படும். உதாரணமாக, நீங்கள் ஏற்கெனவே உள்நுழைந்திருந்தாலும் மீண்டும் உள்நுழைய வேண்டியிருக்கும்.
- உள்ளடக்கத்தை (எ.கா. படங்கள்) மீண்டும் ஏற்ற வேண்டிய காரணத்தால் சில தளங்கள் மெதுவாகச் செயல்படலாம்.
தற்காலிகச் சேமிப்பும் குக்கீகளும் எப்படிச் செயல்படுகின்றன?
- குக்கீகள் என்பவை நீங்கள் பார்வையிடும் தளங்களால் உருவாக்கப்படும் ஃபைல்கள் ஆகும். உலாவிய தரவைச் சேமிப்பதன் மூலம் அவை உங்கள் ஆன்லைன் அனுபவத்தை எளிதாக்குகின்றன.
- அடுத்த முறை நீங்கள் அதே தளத்திற்குச் செல்லும்போது பக்கங்களை விரைவாகத் திறக்க உதவும் வகையில் பக்கத்தின் சில பகுதிகளை (படங்கள் போன்றவை) தற்காலிகச் சேமிப்பு நினைவில் வைத்திருக்கும்.